ரம்யாவின் முகத்திரை கிழிந்தது.. நம்பிக்கை துரோகியை அடித்த தீபா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், கார்த்திக், ரம்யாவிடம் அப்பா எங்கே என்று கேட்க அவள் ஏதோ சொல்லி சமாளிக்க, இதில் ஏதோ பிளான் இருக்கு என்று கார்த்திக்கிற்கு சந்தேகம் வர அவர், ரம்யாவின் வீட்டிற்கு சென்று பார்த்துவிடலாம் என்று ரம்யாவின் வீட்டிற்கு கிளம்புகிறான்.
அடுத்து ரூபஸ்ரீ அஞ்சு கொலை ஆறுமுகத்தை கூப்பிட்டு இவ தான் தீபா இவளை போட்டு தள்ளவேண்டும் என்று தீபாவை கை காட்ட அந்த சமயம் பார்த்து ரம்யா அங்கு வந்து நிற்க ரவுடி ரம்யாவை தான் கொலை செய்ய வேண்டும் என நினைத்துக் கொள்கிறான். இப்படியான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய சீரியலில், கார்த்திக் ரம்யா மீது சந்தேகப்பட்டு வீட்டிற்கு வந்து பார்க்க அங்கு விஸ்வநாதன் மயங்கி கிடக்கிறார். அதைத்தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்து விசாரித்த போது அவர், தன் மகள் ரம்யாவிற்கு அனைத்து விஷயமும் தெரிந்து விட்டதால், என்னை விஷம் கொடுத்து கொல்லப்பார்க்கிறாள் என்று சொல்கிறார். இதன் பின், இனிமேல், ரம்யாவிற்கு மன்னிப்பே இல்லை, நான் உங்களுக்காகத்தான் அவளை விட்டுவைத்தேன் இனிமேல் அவளை விடமாட்டேன் என்று சொல்ல, விஸ்வநாதனும், அவளுக்கு ஜெயில்தான் சரி என்கிறார்.
ரம்யாவின் முகத்திரை கிழிந்தது: இதைத்தொடர்ந்து, திருமண மண்டபத்திற்கு வரும், கார்த்திக் போலீசை அழைத்து வர அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது, அபிராமி என்ன கார்த்திக் என்று கேட்க, கார்த்திக், ரம்யா குறித்து அனைத்து உண்மைகளையும் சொல்லுகிறான். ரம்யா, என்னை காதலிக்கிறாங்க. என்னை திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைபடுறாங்க. இதற்காக பரிகாரம் என்ற பேரில் தீபாவை கொல்லப்பார்த்தாங்க, அதுமட்டும் இல்லாமல், தீபாவிற்கு ஜூஸில் மருந்து கலந்து கொடுத்ததும் ரம்யா தான்.
அப்பாவுக்கு விஷம்: தாலியை திருடியது, புடவையை திருடியது இப்படி பல வேலைகளை செய்து இருக்காங்க, இதற்கு எல்லாம் என்னிடம் ஆதாரம் இருக்கு என்று போலி சாமியாராக நடித்த சேகரை அழைத்து வந்து உண்மையை சொல்ல வைக்கிறார். இது ரம்யா ஏற்பாடு செய்த ஆளு, இது எல்லாம் பத்தாது என்று பெத்த அப்பாவுக்கே விஷம் கொடுத்து கொல்லப்பார்த்து இருக்காங்க, அவர் என் மகளை மன்னிச்சிடுப்பா என்று கேட்டதால் தான், நானும் மன்னிச்சேன். ஆனால், இனிமேல் உனக்கு மன்னிப்பே கிடையாது. இவளை அரஸ்ட் பண்ணுங்க சார் என்கிறான்.
கார்த்திக்கை காதலித்தேன்: அப்போது, தீபா என்ன சொல்றீங்க கார்த்திக், ரம்யாவா இப்படி செய்தா என்று கேட்க, அதை நீங்க ரம்யா கேட்ட கேளுங்க என்று சொல்ல, எல்லா உண்மையும் தெரிந்துவிட்டதால் ஆத்திரத்தில் இருக்கும் ரம்யா, ஆமாம் நான் கார்த்திக்கை காதலிச்சேன். அவர், நான் கல்யாணம் பண்ணிக்க வேண்டியவர், என்னை முதலில் பெண் பார்க்க வந்தவர் இவர் தான், ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. பேக்டரியில் இவரை பார்த்ததும் அவர் மீது காதல் வந்தது அவரை கல்யாணம் பண்ணிக்க நினைத்தேன்.
ரம்யாவை அறைந்த தீபா: அவரை அடைய நினைச்சேன், அதற்கு நீ தான் எதிரியா இருந்த அதான் உன்னை கொல்ல நினைத்தேன். இப்பவும் நீ கார்த்திக் கையால தாலி கட்டிக்கலாம் என்று நினைக்கிறாயா... அது நடக்காது என்று சொன்னதும். கோபத்தின் உச்சத்திற்கு சென்ற தீபா, ரம்யாவை பளார் பளார் என்று மாறி மாறி அடித்துவிட்டு. ச்சி... நீ எல்லாம் ஒரு பெண்ணா, உன்னை நான் எப்படி நம்புனேன் என்று என்று சொல்ல போலீசார் ரம்யாவை கைது செய்து அழைத்து செல்கின்றனர். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











