கார்த்திக் என்கூட வாழணும்.. இல்லனா சாகணும்.. ரம்யா எடுத்த சபதம்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், கார்த்திக், திருமண மண்டபத்திற்கு போலீசை அழைத்து வந்து, ரம்யா குறித்து அனைத்து உண்மைகளையும் சொல்கிறான். ரம்யா, என்னை காதலிக்கிறாங்க. என்னை திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைபடுறாங்க. இதற்காக பரிகாரம் என்ற பேரில் தீபாவை கொல்லப்பார்த்தாங்க, அதுமட்டும் இல்லாமல், தீபாவிற்கு ஜூஸில் மருந்து கலந்து கொடுத்ததும் ரம்யா தான் என்கிறான்.
இதையெல்லாம் கேட்டு அதிர்ச்சி அடைந்த தீபா, என்ன சொல்றீங்க கார்த்திக், ரம்யாவா இப்படி செய்தா என்று கேட்க, அதை நீங்களே ரம்யா கிட்ட கேளுங்க என்று சொல்ல, எல்லா உண்மையும் தெரிந்துவிட்டதால் ஆத்திரத்தில் இருக்கும் ரம்யா, ஆமாம் நான் கார்த்திக்கை காதலிச்சேன். அவர், நான் கல்யாணம் பண்ணிக்க வேண்டியவர், நீ உயிரோட இருந்தா, நான் அவரை கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று தான் உன்னை கொல்லப் பார்த்தேன் என்று சொல்ல, அதிர்ச்சி அடைந்த தீபா, ரம்யாவை பளார் பளார் என்று அடிக்கிறாள். இதையடுத்து, போலீசார் அவளை கைது செய்து அழைத்து செல்கின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய கார்த்திகை தீபம் சீரியலில், எல்லா உண்மையும் தெரிந்து போலீஸ் ரம்யாவை கைது செய்து அழைத்து செல்ல, உன்னை சும்மாவிடமாட்டேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறாள். இதைத்தொடர்ந்து, போலீஸ் அழைத்து செல்லும் வழியில், போலீசுக்கு டிமிக்கிக்கொடுத்து எப்படியோ தப்பித்து விடுகிறாள். இதைத்தொடர்ந்து ரியாவிற்கு போன் செய்யும் ரம்யா, எல்லா உண்மையும் தெரிந்துவிட்டது நான் போலீசில் இருந்து தப்பித்துவிட்டேன் என்று சொல்லி அடைக்கலம் கேட்கிறாள். இதைத்தொடர்ந்து, ரம்யா, ஒன்னு நான் கார்த்திக்குடன் சேர்ந்து வாழ வேண்டும் இல்லனா, அவன் சாகனும், எனக்கு இல்லாத கார்த்திக் வேற யாருக்கும் கிடைக்கக்கூடாது. கார்த்திக், தீபா ரெண்டு பேரும் சாகவேண்டும் என்று சபதம் போடுகிறாள்.
திருமண கொண்டாட்டம்: மறுபக்கம் கல்யாண மண்டபத்தில், பிரச்சனை எல்லாம் முடிந்து அனைவரும் தீபா திருமணத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர். அப்போது, அபிராமியின் கல்லூரி தோழியாக வரும் அம்பிகா, அபிராமி குறித்து பேசி வருகிறாள். தீபா, இன்னும் தன்னை காதலிப்பதை சொல்லவே இல்லை என்று வருத்தப்பட்டுக்கொண்டு இருக்க, கார்த்திக் தீபாவை பாட்டுப்பாடும்படி சொல்கிறான். அவளும் ஆசை ஆசையாக பாட்டுப்பாடிக்கொண்டு இருக்கிறாள்.
தீபாவை பாத்துக்கோங்க: இந்த நேரம் பார்த்து, காவல் நிலையத்தில் இருந்து கார்த்திக்கிற்கு போன் வருகிறது. அதில், ரம்யா , ஜெயிலுக்கு போகும் வழியில் தப்பித்துவிட்டாள். அவள், அப்பாவையே கொல்லப்பார்த்தவள், இதனால் பாதுகாப்பாக இருங்கள், தீபாவை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்விட்டு போனை வைக்கிறார். இதைகேட்ட கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











