கார்த்திக்கை அடைய ரம்யா செய்த சதி..உண்மை தெரிந்து உடைந்த அப்பா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், போலி சாமியார் வேஷம் போட்ட சேகர், ரம்யாவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு போகிறான். அப்போது, அபிராமி சூப்பர் மார்க்கெட் வந்திருக்க அங்கு கல்யாண வேலைகளை கவனிக்க ஆட்கள் வேண்டும் என்று பேசி கொண்டிருப்தை பார்த்து, அபிராமியிடம் தனக்கு ஒரு வேலை போட்டு தர சொல்லி கேட்க அபிராமி அவனை வீட்டிற்கு அழைத்து கொண்டு கிளம்புகிறாள்.
வீட்டில் கார்த்திக், வந்திருந்த போலீஸ் அதிகாரிகளிடம் சாமியார் கெட்டப்பே போலியா இருந்தா என்ன செய்வது என்று சொல்ல அவனை தாடி மீசை இல்லாமல் வரைந்து பார்க்கலாம் என்று முடிவெடுக்கின்றனர். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், தீபாவின் வீட்டில் சேகரைப் பார்த்த ரம்யா அதிர்ச்சி அடைகிறான். பின் அவனை மடக்கி பிடித்து எதுக்கு இங்க வந்த? உன்னை ஊரைவிட்டுத்தானே போக சொன்னேன். ஒழுங்க இங்கிருந்து ஓடி போயிடு.. மாட்டிக்கிட்டா உனக்கும் பிரச்சனை, எனக்கும் பிரச்சனை என்று எச்சரிக்கிறாள். இந்த நேரத்தில் கார்த்திக் மாடியிலிருந்து கீழே இறங்கி வர சேகர் மறைந்து கொள்கிறான்.
பந்தக்கால் நடும் விழா: அதன் பிறகு பந்தக்கால் நடுவதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடக்க வேலை தொடங்கிறது. அடுத்ததாக அய்யர் மந்திரத்தை சொல்லி பந்தக்கால் நடுவதற்காக குழி எடுக்க சொன்னதும் சொந்தக்காரர்கள் குழி எடுக்க அதில் பூரான் ஒன்று இருப்பதை பார்த்து அபசகுணம் என்று அதிர்ச்சி அடைகின்றனர். யாரோ ஒருவர் இந்த கல்யாணத்துக்கு எதிராக செயல்படுவதாக சொல்கிறார். மேலும் இதற்கு ஒரு பரிகாரம் இருக்கு அதை செய்துவிடலாம் என்று ஐயர் சொல்ல, அதன் பிறகு பந்தக்கால் நட்டு முடிய கார்த்திக், தீபா என இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்கின்றனர்.
மறுபக்கம் ரம்யா வீட்டில் அவளது அப்பா எதையோ ஒன்றைத் தேட அப்போது ரம்யாவின் டைரி கையில் கிடைக்க அதைப் பிரித்து படிக்கும் போது அவள் கார்த்தியின் மீது காதலுடன் இருப்பதும் தீபாவை கொல்ல நினைப்பதும், அதற்காக அவள் போட்ட பிளான் என அனைத்தையும் படித்து தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். இதைத் தொடர்ந்து, ரம்யாவின் அப்பா, கார்த்திக்கு போன் போட்டு உடனடியாக உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்ல. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











