கார்த்திக்கால் மண்ணை கவ்விய ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், கல்யாண மண்டபத்தில், பிரச்சனை எல்லாம் முடிந்து அனைவரும் தீபா திருமணத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர். அப்போது, அபிராமியின் கல்லூரி தோழியாக வரும் அம்பிகா, அபிராமி குறித்து பேசி வருகிறான். தீபா, இன்னும் தன்னை காதலிப்பதை சொல்லவே இல்லை என்று வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறாள்.
அப்போது, காவல் நிலையத்தில் இருந்து கார்த்திக்கிற்கு போன் வருகிறது. அதில், ரம்யா ஜெயிலுக்கு போகும் வழியில் தப்பித்துவிட்டாள். அவள், அப்பாவையே கொல்லப்பார்த்தவள், இதனால் பாதுகாப்பாக இருங்கள், தீபாவை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறான். ரூபஸ்ரீ அஞ்சு கொலை ஆறுமுகத்தை கூப்பிட்டு இவ தான் தீபா இவளை போட்டு தள்ளனும் என்று தீபாவை கை காட்ட அந்த சமயம் பார்த்து அங்கு மைதிலி வந்து நிற்க ரவுடி மைதிலியை கடத்தி விடுகிறான்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், அதைத்தொடர்ந்து ரியா வீட்டில் ரெடி ஆகிக் கொண்டிருக்க திடீரென வீட்டில் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு வெளியே வந்து கதவை திறக்க போலீஸ் நின்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இன்னைக்கு ஒரு நாள் நீ ஸ்டேஷனில் இருக்கணும் என்று சொல்லிக் கூப்பிட ரியா எதுக்கு என்று காரணம் கேட்க காரணம் எல்லாம் சொல்ல முடியாது என சொல்கின்றனர். அதைத்தொடர்ந்து ரியா ரெடியாகி விட்டு வரேன் என்று உள்ளே வரும் ரியா, ரம்யாவுக்கு போன் போட்டு போலீஸ் வந்திருக்கும் என்று சொல்ல, எல்லாம் கார்த்திக் வேலையாக தான் இருக்கும். நீ உஷாரா இரு என சொல்லி போலீஸ் உடன் கிளம்பி செல்கிறாள்.
மைதிலி கடத்தல்: மறுபக்கம் ஐந்து கொலை ஆறுமுகம் கடத்தியது தீபா இல்லை, அவளோட அண்ணி மைதிலி என தெரிந்து தீபாவுக்கு போன் போட்டு உன் அண்ணியை கடத்தி வச்சிருக்கேன் ஒழுங்கா.. மரியாதையா நான் சொல்ற இடத்துக்கு வா என்று மிரட்டுகிறான். தீபாவும் வருவதாக சொல்லி ஃபோனை வைத்துவிட்டு, விஷயத்தை கார்த்திக்கிடம் சொல்ல, கார்த்திக் இந்த குடோனுக்கு வந்து அதிர்ச்சி கொடுத்து ரவுடிகளுடன் சண்டையிடுகிறான். மைதிலியை காப்பாற்றி அழைத்து வருகிறான்.
யார் வேலை இது: இதையடுத்து, மைதிலி, இது யார் வேலையா இருக்கும் என்று கேட்க, ரியா போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கா இதனால், இது அவ வேலையான இருக்காது, வெயிட் பண்ணி பார்க்கலாம் என்று சொல்கிறான். இதைத்தொடர்ந்து இருவரும் வீட்டுக்கு வர, ஓடிவரும் தீபா, அண்ணி உங்களுக்கு ஒன்னும் இல்லையா என்று கேட்க, அதெல்லாம் ஒன்னும் இல்ல தீபா, நான் நல்லாத்தான் இருக்கேன் என்று சொல்லிவிட்டு உள்ளே செல்கிறாள்.
இப்போவது என்னை காதலிக்கிறேன் என்று சொல்லுங்க என்று சொல்ல, அதெல்லாம் முடியாது என்று, சொல்ல தீபா வருத்தப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











