ஐ லவ் யூ சொன்ன கார்த்திக்.. ஓடி வந்து கட்டியணைத்த தீபா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், திருமண மண்டபத்தில், அருண், ஆனந்த், மீனாட்சி, தர்மலிங்கம் என ஒவ்வொருத்தராக தங்களது துணையை பற்றி பேசுகின்றனர், இறுதியாக தீபா கார்த்தி குறித்து பேச வேண்டிய சூழல் உருவாகிறது, அப்போது கார்த்திக்கை பற்றியும் தனது மனதில் இருக்கும் காதலை பற்றியும் பேசுகிறாள்.

தீபா பேசுவதை கேட்ட அம்பிகாவுக்கு கார்த்திக், தீபா இடையே ஏதோ விரிசல் இருப்பது போல தெரிய, இதனால் மீனாட்சியிடம் இது குறித்து பேச அவள் தீபா கார்த்திக்கிடம் விட்ட சவால் குறித்து சொல்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: இன்றைய சீரியலில், அதாவது, தீபா ரெடியாகி கீழே வரும் போது கார்த்திக் அவளது கையில் போட்டு விட்ட மோதிரம் கழண்டு விழுந்து உருண்டு ஓட தீபா அதை எடுப்பதற்காக பின்னாடியே ஓடுகிறாள், மோதிரம் உருண்டு ரோட்டுக்கு வர, தீபா வண்டி வருவது தெரியாமல் எடுக்க ஓட கார்த்திக் அவளை காப்பாற்றி மோதிரம் தானே போனால் போகுது, அதுக்கு எதுக்கு இப்படி என திட்டுகிறான்.

தீபாவை பிடிக்கும்: இதையெல்லாம் பார்த்த அம்பிகா இவங்க விரிசல் சரியாக இதுவே போதுமே என்று நினைக்கிறாள், அதற்கேற்றார் போல மீனாட்சி, கார்த்தியிடம் சென்று தீபா உங்க மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கானு உங்களுக்கே நல்லா தெரியும், அப்படி இருக்கும் போது நீங்க ஏன் உங்க மனசுல இருக்குற காதலை சொல்ல மாட்டுறீங்க என்று கேள்வி கேட்கிறாள். மேலும் உங்களுக்கு தீபாவை பிடிக்காதா என்று கேட்க கார்த்திக் அப்படியெல்லாம் இல்ல, எனக்கும் தீபாவை பிடிக்கும் என்று சொல்கிறான், நானே அவளிடம் காதலை சொல்கிறேன் என்று சொல்ல இதை, அந்த பக்கமாக வந்த அம்பிகாவும் கேட்டு சந்தோசப்படுகிறாள்.

ரியாவை காப்பாற்றிய ரம்யா: மறுபக்கம், ரியாவை இரண்டு போலீஸ்காரர்கள் வெளியில் விடாமல் அடைத்து வைத்து இருக்கின்றனர். அப்போது ஒருவன், டீ கொண்டு வந்து கொடுக்க அதை குடித்ததும் இரண்டு போலீஸ்காரர்களும், மயங்கி விழுகின்றனர், அதன் பிறகு அந்த வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கும் ரம்யா அங்கிருந்து ரியாவை காப்பாற்றி அழைத்து செல்கிறாள்.

ஐ லவ் யூ தீபா: இங்கே மண்டபத்தில், கார்த்திக் இன்னும் காதலை சொல்லவில்லையே என்ற வருத்தத்தில் இருக்கிறாள். அப்போது, அவளுக்கு கார்த்திக் போன் செய்து வெளியே வர சொல்கிறான். கார்த்திக் காதலை சொல்லத்தான் கூப்பிடுகிறான் என தீபா ஆசையாக ஓடிவந்து நிற்க, ஒன்னும் இல்ல சும்மாத்தான் கூப்பிட்டேன் என்று சொல்ல, தீபா வருத்தப்பட்டு ரூமுக்கு போகிறாள். அப்போது, தீபா ஐ லவ் யூ என்று சொல்ல, சந்தோஷத்தில் அழுத படி ஓடி வந்து கார்த்திக்கை கட்டிப்பிடித்துக்கொள்கிறாள். இதைத்தொடர்ந்து கார்த்திக் தீபாவிற்கு நெற்றில் முத்தம் கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X