திருமணம் நடக்குமா? தீபாவை கடத்திய ரம்யா.. நடக்கப்போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் !

சென்னை: நேற்றைய எபிசோடில், திருமண மண்டபத்தில், கார்த்திக் இன்னும் காதலை சொல்லவில்லையே என்ற வருத்தத்தில் தீபா இருக்கிறாள். அப்போது, அவளுக்கு கார்த்திக் போன் செய்து வெளியே வர சொல்கிறான். கார்த்திக் காதலை சொல்லத்தான் கூப்பிடுகிறான் என தீபா ஆசையாக ஓடிவந்து நிற்க, ஒன்னும் இல்ல சும்மாத்தான் கூப்பிட்டேன் என்று சொல்ல, தீபா வருத்தப்பட்டு ரூமுக்கு போகிறாள்.

அப்போது, தீபா ஐ லவ் யூ என்று சொல்ல, சந்தோஷத்தில் அழுதபடி ஓடி வந்து கார்த்திக்கை கட்டிப்பிடித்துக்கொள்கிறாள். இதைத்தொடர்ந்து கார்த்திக் தீபாவிற்கு நெற்றில் முத்தம் கொடுக்கிறான். இதைத் தொடர்ந்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலம்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: இன்றைய கார்த்திகை தீபம் சீரியலில், தீபா கார்த்திக்கிடம் இன்னொரு முறை ஐ லவ் யூ சொல்ல சொல்லி கேட்க கார்த்திக் அதெல்லாம் ஒருமுறை தான் சொல்ல முடியும் என்று சொல்கிறான். இதைத் தொடர்ந்து வாங்க போங்க.. சார் என்று பேசுவதால் நமக்குள்ள ஏதோ ஒரு இடைவெளி இருக்குறமாதிரி எனக்கு தோணுது இதனால், இனிமேல் மரியாதை எல்லாம் வேண்டாம், நீ , வா போ என்று பேசலாம் என்று சொல்ல. தீபாவும் சரி என்று சொல்கிறாள்.

கூட்டு சேர்ந்த வில்லிகள்: ஐஸ்வர்யாவுக்கு ஒரு போன் கால் வர அவளும் போனை எடுக்கிறாள். நான் உன்கிட்ட பேச வேண்டும் தனியாக வா என்று சொல்ல, ஐஸ்வர்யா, ரம்யாவை பார்க்க செல்கிறார். அப்போது, அங்கு ரியா மற்றும் ரம்யா இருக்கின்றனர். உடனே ரம்யா நான் போலீசில் இருந்து தப்பி விட்டேன், நீ தான் எனக்கு உதவி செய்யணும் என்று சொல்ல ஐஸ்வர்யா நானே இந்த வீட்டுக்குள்ள இப்போ தான் நுழைந்து இருக்கேன் என்று மறுக்கிறாள். உடனே ரியா, ஐஸ்வர்யா இந்த கல்யாணம் நடக்கக்கூடாது, நீ தீபாவை கடத்த உதவி செய்ய வேண்டும் என்கிறாள். உடனே ஐஸ்வர்யா பயந்து முடியாது என்று சொல்ல, ரியா அவளை மிரட்ட ஐஸ்வர்யா வேறு வழியின்றி ஓகே சொல்ல ரம்யா, ரியா, ஐஸ்வர்யா என மூவரும் கூட்டு சேருகின்றனர், பிறகு தீபாவை கடத்த திட்டமிடுகின்றனர்.

மயங்கி விழுந்த தீபா: இதைத்தொடர்ந்து, ஐஸ்வர்யா, தீபாவிடம் வந்து கார்த்திக் உன்னிடம் ஏதோ பேச வேண்டுமாம், வெளியில் இருக்கிறார் வா என்று சொல்லி, அழைக்க தீபாவும் அது உண்மை என நம்பி அந்த இடத்திற்கு வருகிறாள். இங்கு கார்த்திக் இல்லாததால், எங்கே கார்த்திக் என்று கேட்க, ஐஸ்வர்யா சாரி தீபா என்று அவளின் முகத்தில் மயக்க மருந்தை அடிக்க தீபா மயங்கி விழுகிறாள். இதைத்தொடர்ந்து காரில் வரும் ரம்யா, ரியா இருவரும், தீபாவை மண்டபத்தில் இருந்து கடத்தி செல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X