கார்த்திக்கை அடைந்தே தீருவேன்.. வெறியோடு இருக்கும் ரம்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் !

சென்னை: நேற்றைய எபிசோடில், ஐஸ்வர்யாவிற்கு போன் செய்யும் ரம்யா, நான் போலீசில் இருந்து தப்பி விட்டேன், நீ தான், இந்த கல்யாணத்தை நிறுத்த உதவி செய்ய வேண்டும் என்று கேட்க, ஐஸ்வர்யா ஓகே சொல்கிறாள். பின் ரம்யா, ரியா, ஐஸ்வர்யா என மூவரும் கூட்டு சேர்ந்து தீபாவை கடத்த திட்டம் போடுகின்றனர்.

இதைத்தொடர்ந்து, ஐஸ்வர்யா, தீபாவிடம் வந்து கார்த்திக் உன்னிடம் ஏதோ பேச வேண்டுமாம், வெளியில் இருக்கிறார் வா என்று சொல்லி, அழைக்க தீபாவும் அது உண்மை என நம்பி அந்த இடத்திற்கு வருகிறாள். இங்கு கார்த்திக் இல்லாததால், எங்கே கார்த்திக் என்று கேட்க, ஐஸ்வர்யா, அவளின் முகத்தில் மயக்க மருத்தை அடிக்க தீபா மயங்கி விழுகிறாள். இதைத்தொடர்ந்து காரில் வரும் ரம்யா, ரியா இருவரும், தீபாவை மண்டபத்தில் இருந்து கடத்தி செல்கின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், தீபா மயக்கம் தெளிந்து பார்க்க, அங்கே ரம்யா மற்றும் ரியா நின்று கொண்டு இருக்கின்றனர். உடனே தீபா, நீ திருந்தவே மாட்டியா, கார்த்திக்கை நீ காதலிச்ச, ஆனால், அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சினா விட்டுவிட வேண்டியது தானே, அதவிட்டு விட்டு நீ தப்பு மேல தப்பு செய்ற ரம்யா என்று சொல்ல, ஆமாம், நான் விரும்பியதை அடைய என்ன வேண்டுமானாலும் செய்வேன். எனக்கு கார்த்திக் வேணும் அவ்வளவு தான் என்று சொல்கிறாள்.

மாறுவேடத்தில் ரியா: உடனே தீபா, நீ என்னை கடத்திவைச்சிக்கிட்டா கார்த்திக் உன் கழுத்துல தாலி கட்டுவார் என்று நினைக்கிறியா என்று கேட்க, ம்ம்ம் ... இப்போத்தான் சரியா கேட்டு இருக்க தீபா, ரம்யாவா போனாத்தானே கார்த்திக் தாலி கட்ட மாட்டார், தீபாவா போனா என்று கேட்கிறாள். அந்த நேரம் ரியா, தீபா போல மாஸ்க் அணிந்து வந்து நிற்க, அதிர்ச்சி அடைந்த தீபா, நீ யார் என்று கேட்க, நீயே கண்டுபிடி என்று சொல்ல, குரலை வைத்து அது ரியா என்பதை கண்டுபிடித்து விடுகிறாள். இப்போ தெரியுதா தீபா, இப்படித்தான் நான் கார்த்திக்கை கல்யாணம் பண்ணிக்க போகிறேன் என்று சொல்கிறாள்.

மண்டபத்திற்கு வந்த ரியா: பின் ரம்யா, ரியா எனக்கு கொஞ்சம் டென்ஷனா இருக்கு நீ இந்த மாஸ்க்கை போட்டுக்கொண்டு மண்டபத்தில் இரு நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு ரியா மண்டபத்திற்கு வருகிறாள். மண்டபத்தில் அனைவரும் தீபாவை காணவில்லை என்று தேடிக்கொண்டு நிற்க, அப்போது, தீபா வந்து நிற்க எங்கே போன ஆளை காணும் என்று கேட்க, நான் கோவிலுக்கு போய் இருந்தேன் என்று சொல்ல சமாளிக்கிறாள்.

zee tamil Karthigai Deepam

இது தீபா மாதிரி தெரியலையே: உடனே மைதிலி, ஏன் முகம் எல்லாம் வியர்த்து இருக்கு என்ன ஆச்சு என்று கேட்டு விட்டு வியர்வையை துடைக்க போக ரியா தொட விடாமல் நானே துடைத்து கொள்கிறேன் என்று புடவையை எடுத்து துடைத்து கொள்கிறாள். அதெல்லாம் பார்த்த, மீனாட்சி மற்றும் மைதிலி என இருவரும் இது தீபா மாதிரியே தெரியலையே எதோ தப்பா இருக்கு என்று பேசி கொள்ள முகத்தை மறைத்து கூட்டத்தில் உட்கார்ந்திருக்கும் ரம்யா இதை கேட்டு உண்மையை கண்டுபிடித்து விடுவார்களோ என்று டென்ஷனாகிறாள்.

வார்னிங் கொடுத்த போலீஸ்: மறுபக்கம், கார்த்திக் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு போன் செய்து தப்பித்து சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்று விசாரிக்க, அவர் அவங்க இன்னும் கிடைக்கவில்லை, கல்யாணத்தை நிறுத்த அவர்கள் மாறுவேடத்தில் அங்கு வந்தாலும் வரலாம் என்று வார்னிங் கொடுக்கிறான். கார்த்திக் அருணிடம் விஷயத்தை சொல்ல அவனுக்கு ஐஸ்வர்யா மீது சந்தேகம் வருகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X