யார் கழுத்தில் தாலி ஏறும்.. திட்டமிட்டபடி கல்யாணம் நடக்குமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் !

சென்னை: நேற்றைய எபிசோடில், தீபாவை ரம்யா கடத்திய நிலையில், ரியா, தீபா போல மாஸ்கை போட்டுக்கொண்டு மண்டபத்திற்கு வருகிறாள். மண்டபத்தில் அனைவரும் தீபாவை காணவில்லை என்று தேடிக்கொண்டு நிற்க, அப்போது, தீபா வந்து நிற்க எங்கே போன ஆளைகாணும் என்று கேட்க, நான் கோவிலுக்கு போய் இருந்தேன் என்று சொல்ல சமாளிக்கிறாள்.

மறுபக்கம், கார்த்திக் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு போன் செய்து தப்பித்து சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்று விசாரிக்க, அவர் அவங்க இன்னும் கிடைக்கவில்லை, கல்யாணத்தை நிறுத்த அவர்கள் மாறுவேடத்தில் அங்கு வந்தாலும் வரலாம் என்று வார்னிங் கொடுக்கிறான். கார்த்திக் அருணிடம் விஷயத்தை சொல்ல அவனுக்கு ஐஸ்வர்யா மீது சந்தேகம் வருகிறது. இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், ஐஸ்வர்யா மீது சந்தேகப்படும் அருண் அவளிடம் சென்று, நேற்று யார் கூடயோ போனில் பேசிக்கொண்டு இருந்தியே அது யார் என்று கேட்க, அதுவா என் பிரண்டுதான், கல்யாணத்திற்கு வர சொல்லி போன்பண்ணேன் ஆனால், அவளின் போன் ஆப் ஆகி இருந்தது என்று சொல்ல, ஏன் போன் ஆப்ல இருந்தது, எங்கே போன காட்டு என்று சொல்ல, ஐஸ்வர்யா, அருணிடம் போனை கொடுக்கிறாள். அருண் அந்த நம்பருக்கு போன் செய்து பார்க்க அப்போதும் ஆப் என்று வந்ததால், போனை ஐஸ்வர்யாவிடம் கொடுத்துவிட்டு சென்று விடுகிறான்.

நல்லவேளை: மண்டபத்தில் இருக்கும் ரம்யா, ரியாவின் அறைக்கு சென்று நல்லவேளை ரியா, நீ சமாளித்து விட்ட, நான் மாட்டிப்போம் என்று பயந்துவிட்டேன் என்று சொல்ல, எனக்கும் பயமாகத்தான் இருந்தது, சமாளித்துவிட்டேன். நாம அடிக்கடி இப்படி பேசுவது நமக்கு நல்லது இல்ல ரம்யா, நீ எதுவாக இருந்தாலும், போன் பண்ணு, சரியாக கல்யாண நேரத்துக்கு ரூமுக்கு வந்துவிடு என்று சொல்ல, ரம்யா சரி சரி ரியா, நான் வரேன் என்று ரூமில் இருந்து தலையில் முக்காடு போட்டுக்கொண்டு கிளம்புகிறாள்.

யார் அந்த பெண்: இதை தூரத்தில் இருந்து பார்த்துவிடும் மைதிலி, தீபாவின் ரூமுக்கு வந்து கதவை தட்டி, இப்போ வந்தது யார், ஏன் அவங்க முக்காடு போட்டுக்கொண்டு போனார்கள் என்று கேட்க பதறிய ரியா, சுதாரித்துக்கொண்டு அது என் பிரண்டுதான். ஆனால், ஏன் முக்காடு போட்டுக்கொண்டு போனார் என்று எனக்கு தெரியாது என்று சொல்லி சமாளித்து விடுகிறாள். இருந்தாலும், மைதிலிக்கு ஏதோ ஒரு சந்தேகம் வர அவள், மீனாட்சியிடம் விஷயத்தை சொல்லுகிறாள்.

குடோனில் தீபா: இதையடுத்து, ரம்யா கடைசியாக பேசிய செல் போன் சிக்னல் கிடைத்த இடத்திற்கு, கார்த்திக்கின் நண்பன் போலீஸ் சரவணன் செல்கிறான். இந்த இடத்தில் இருந்துதான் சிக்னல் வந்தது, இந்த இடத்தில் தான் நிச்சயம் ரம்யா இருப்பா என்று உள்ளே சென்று பார்க்கின்றனர். ஆனால், ரம்யாவின் அடி ஆட்கள் தீபாவை யாருக்கும் தெரியாத இடத்தில் கை, கால்களை கட்டி அடைத்து வைத்துள்ளனர். உள்ளே சரவணன் வந்ததை பார்த்துவிட்ட ரௌடிகள் அவன், தீபாவை பார்த்துவிட்டால், அவனையும் இங்கேயே அடைத்துவிடலாம், முதலில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்று மறைந்து இருந்து பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X