கார்த்திக்கை அடைய நினைக்கும் ரம்யா.. யார் செத்தா எனக்கு என்ன..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், ரம்யா கடைசியாக பேசிய செல்போன் சிக்னல் கிடைத்த இடத்திற்கு, கார்த்திக்கின் நண்பன் போலீஸ் சரவணன் செல்கிறான். இந்த இடத்தில் இருந்துதான் சிக்னல் வந்தது, இந்த இடத்தில் தான் நிச்சயம் ரம்யா இருப்பா என்று உள்ளே சென்று பார்க்கின்றனர். ஆனால், ரம்யாவின் அடி ஆட்கள் தீபாவை யாருக்கும் தெரியாத இடத்தில் கை, கால்களை கட்டி அடைத்து வைத்துள்ளனர். இதையடுத்து சரவணன் அந்த இடத்தில் இருந்து கிளம்பி விடுகிறான்.

மறுபக்கம், தீபாவின் முகமூடியை போட்டுக்கொண்டு ரியா, யாருக்கும் சந்தேகம் வராதபடி நடித்துக்கொண்டு இருக்கிறாள். அப்போது, மண்டபத்திற்கு வந்த ஜோசியர் தீபாவுக்கு கல்யாணம் ஏற்பாடா ஒரு உசுர பணயம் வச்சு இந்த கல்யாணம் நடக்கணுமா? என்று கேள்வி எழுப்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்று பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், ஜானகி மற்றும் தர்மலிங்கம் என இருவரும் ஜோசியரிடம் நாங்கள் இந்த விஷயத்தை ஏற்கனவே சம்பந்தி அம்மா கிட்ட பேசிட்டோம்.. ஆனால், அவங்க கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்கணும் என்று ஆசைப்படுறாங்க. அவங்க உயிருக்கு எந்த ஆபத்தும் வராதுன்னு நம்புறாங்க. என்ன காப்பாத்துறதுக்காக தாலியை கழட்டிய தீபா கழுத்துல தாலி ஏறணும் அத நான் பார்க்கணும் என்று சொல்றாங்க என்று சொல்கின்றனர்.

எச்சரித்த ஜோசியர்: பிறகு ஜோசியர் இங்கிருந்து கிளம்பிச் செல்ல இவர்கள் பேசிய அனைத்தையும் ஆனந்த் கேட்டு விட்டான் என்பது தெரிய வருகிறது. பிறகு அம்மாவோட உயிருக்கு ஆபத்தா இந்த கல்யாணத்தை நான் நடக்க விட மாட்டேன் என்று சொல்லி அபிராமியிடம் வந்து விஷயத்தை சொல்ல அபிராமி இதெல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும் என்று சொல்கிறாள்.

பிறகு ஆனந்த், கார்த்தியிடம் விஷயத்தை சொல்லப் போவதாக சொல்ல அபிராமி அவனை தடுத்து நிறுத்துகிறாள்.

தப்பித்த தீபா: மறுபக்கம் குடோனில் கட்டப்பட்டிருக்கும் தீபா ரவுடிகளிடம் ரெஸ்ட் ரூம் போகணும் என்று சொல்ல அதில் ஒருவன் பாவப்பட்டு கட்டை அவிழ்த்து விட, நைசாக வெளியே வரும் தீபா, ஒரு உருட்டு கட்டையை எடுத்து ஒரு ரவுடியின் தலையில் அடிக்க அவன் கத்தியபடி மயங்கி விழுகிறான். கத்தும் சத்தம் கேட்டு மற்றொரு ரவுடி ஓடி வர, அவனையும் தலையில் பயங்கரமாக அடிக்க அவனும் மயங்கி விழ அங்கிருந்து தீபா தப்பித்து வெளியே ஓடிவந்து ஒரு ஆட்டோவில் ஏறி மண்டபத்திற்கு வந்து கொண்டு இருக்கிறாள்.

யார் செத்தா எனக்கு என்ன? மறுபக்கம் மண்டபத்தில். தர்மலிங்கம் மற்றும் ஜானகி ஆகியோர் தீபாவிடம் இந்த கல்யாணம் நடந்த அபிராமி அம்மா உயிருக்கு ஆபத்து என்று ஜோசியர் சொன்னார். நான் அதை சம்மந்தியிடம் சொன்னேன் அவர்கள் வெளியில் சொல்லவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் என்று உண்மையை சொல்லுகின்றனர். இதையெல்லாம் கேட்ட, தீபா வேடத்தில் இருக்கும் ரியா இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கணும். நான் கார்த்திக் கூட சந்தோஷமா வாழனும், யார் செத்தா எனக்கு என்ன.

இதை கார்த்திக்கிட்ட சொல்லி கல்யாணத்தை நிறுத்தாதீங்க, உங்க பொண்ணு வாழ்க்கையை மட்டும் பாருங்க என்று சொல்ல, தர்மலிங்கம், ஜானகிக்கு தீபா இப்படி சொல்ல மாட்டாளே என்று சந்தேகம் எழுகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X