ரியாவின் போலி முகம்.. அம்பிகாவிற்கு தெரியவந்த உண்மை..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில் குடோனில் கட்டப்பட்டிருக்கும் தீபா, ஒரு உருட்டு கட்டையை எடுத்து ஒரு ரவுடியின் தலையில் அடிக்க அவன் கத்தியபடி மயங்கி விழுகிறான். சத்தம் கேட்டு மற்றொரு ரவுடி ஓடி வர, அவனையும் தலையில் பயங்கரமாக அடிக்க அவனும் மயங்கி விழ அங்கிருந்து தீபா தப்பித்து வெளியே ஓடிவந்து ஒரு ஆட்டோவில் ஏறி மண்டபத்திற்கு வந்து கொண்டு இருக்கிறாள்.
மண்டபத்தில் தர்மலிங்கம் மற்றும் ஜானகி ஆகியோர் தீபாவிடம் இந்த கல்யாணம் நடந்தா அபிராமி அம்மா உயிருக்கு ஆபத்து என்று ஜோசியர் சொன்னார். நான் அதை சம்மந்தியிடம் சொன்னேன் அவர்கள் வெளியில் சொல்லவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் என்று உண்மையை சொல்லுகின்றனர். இதையெல்லாம் கேட்ட, தீபா வேடத்தில் இருக்கும் ரியா இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கணும். நான் கார்த்திக் கூட சந்தோஷமா வாழனும், யார் செத்தா எனக்கு என்ன என்று பேச அதிர்ச்சி அடைந்த தர்மலிங்கம் மற்றும் ஜானகி ரூமில் இருந்து கிளம்புகின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், அபிராமியின் உறவினர் ஒருவர் கல்யாணத்திற்கு என்னால் இருக்க முடியாது, அவசர வேலை ஒன்று இருப்பதால் சீக்கிரமாக வந்துவிட்டேன் என்று சொல்லி தீபாவை பார்க்க வேண்டும் என்று சொல்ல அபிராமி, மைதிலி மற்றும் மீனாட்சியை கூப்பிட்டு தீபாவை அழைத்து வர சொல்கிறாள். இருவரும் தீபாவை கூப்பிட, கடுப்பான அவள் சும்மா சும்மா என்னால வர முடியாது என்று சத்தம் போட்டு துரத்தி விடுகிறாள், அவர்கள் அபிராமியிடம் விஷயத்தை சொல்ல அபிராமி உறவினரை சமாளித்து அனுப்பி வைக்கின்றனர்.
சந்தேகப்படும் அபிராமி: இதை தொடர்ந்து அம்பிகா உள்ளே நுழைய, அபிராமி ரொம்ப நேரமா ஆள் இல்ல எங்க போய் இருந்த என்று கேள்வி கேட்கிறாள். உன் பையனுக்கு கல்யாணம், எதுவும் கிப்ட் கொடுக்காமல் இருக்க முடியுமா? அதான் கிப்ட் வாங்க போய் இருந்தேன் என்று சொல்கிறாள். இதைத்தொடர்ந்து தீபா அறைக்கு வரும் அம்பிகா, ஆசையாக நெக்லஸ் வாங்கினேன், இதை என் கையால், உன் கழுத்தில் போட்டு விடணும் என்று சொல்ல ரியா அதிர்ச்சி அடைகிறாள். வேறுவழியில்லாமல், தீபா வேடத்தில் இருக்கும் ரியா, அம்பிகாவிடம் கழுத்தை காட்ட கழுத்தை பார்த்துவிட்டு என்ன இது என்று கேட்க, ரியா மேக்கப் சரியில்லை என்று சொல்லி சமாளிக்கிறாள்.
அம்பிகாவிற்கு வந்த சந்தேகம்: இதனால் அம்பிகாவுக்கும் தீபா இப்படி பண்றவள் இல்லையே என்ற சந்தேகம் வருகிறது. இந்த சமயத்தில் இன்னொரு வயதான உறவினர் தீபாவை பார்க்க வேண்டும் என்று சொல்ல அபிராமி, கூப்பிட வேறு வழியின்றி ரியா அந்த கிஃப்ட்டை வாங்கி கொண்டு ரூமுக்கு சென்று விடுகிறாள். அந்த நேரம் பார்த்து ரியாவின் பாத்ரூமுக்குள் அம்பிகா வந்துவிடுகிறாள். இதுதெரியாமல், ரியா, ரம்யா இருவரும் இந்த கல்யாணம் நடப்பதற்குள் ரொம்ப பயமாக இருக்கு என்கிறாள்.
இதைத்தொடர்ந்து, ரம்யா சரி முகூர்த்த நேரம் ஆகிவிட்டது மாஸ்கை கழட்டு என்று சொல்ல, ரியா மாஸ்கை கழட்டுகிறாள். இதை பாத்ரூமில் இருக்கும் அபிராமி நைசாக வெளியில் வந்து பார்த்து விடுகிறாள். அம்பிகாவிற்கு தீபா ரூபத்தில் இருப்பது யார் என்று தெரியாததால் அதிர்ச்சி அடைந்து, ரியா, ரம்யா இருவரிடமும் என்ன இது நீ யார்.. தீபா எங்கே என்று கேட்க இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











