ரம்யாவின் அப்பாவால் வெளிவந்த உண்மை.. கோபத்தில் கார்த்திக்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், ரம்யா வீட்டில் அவளது அப்பா பையில் ஒன்றை தேடி, அப்போது, ரம்யா, கார்த்தி சேர்ந்து இருப்பது போல இருக்கும் போட்டோவை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இதையடுத்து ரம்யாவின் டைரி கையில் கிடைக்க அதைப் பிரித்து படிக்கிறார்.

அதில், நான் இதுவரை யாரையும் காதலித்தது இல்லை, கார்த்தியின் மீது எனக்கு காதல் வந்துள்ளது. கார்த்திக்கை அடைய தீபாவை கொல்ல நினைத்து அவள் போட்ட பிளான் என அனைத்தையும் படித்து தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். இதைத் தொடர்ந்து, ரம்யாவின் அப்பா, கார்த்திக்கு போன் போட்டு உடனடியாக உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று சொல்கிறார். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், கோவில் அபிராமி, கோவிலுக்கு வருபவர்களின் காலை கழுவி பரிகாரம் செய்து கொண்டிருக்கிறாள். இந்த விஷயம் தீபாவுக்கு தெரிய வர, பதறிப்போய் கோவிலுக்கு ஓடி வந்து, அபிராமியைப் பார்த்து கண் கலங்குகிறாள். பின் அபிராமியிடம் எதுக்கு அத்தை இப்படியெல்லாம் செய்யறீங்க என்று வருத்தப்படுகிறாள். எனக்கு கல்யாணம் ஆகும் போது என் அம்மா இப்படி பண்ணாங்க, இப்போ என் அம்மாவை போலவே நீங்களும் எனக்காக இப்படி பண்றீங்க என்று வருத்தப்படுகிறாள். இதற்கு, நீ என் மருமகள் மட்டுமில்ல என் மகளும் நீ தான், உன் கழுத்துல இந்த தாலி நல்லபடியா ஏறவேண்டும். இதற்காகத்தான் இதை செய்தேன் என்கிறாள்.

ஓங்கி அறைந்த கார்த்திக்: மறுபக்கம், ரம்யாவின் அப்பா கார்த்திக்கை வர வைத்து ரம்யா அவன் மீது காதலுடன் இருக்கும் விஷயத்தையும் டைரியில் இது குறித்து எழுதி வைத்திருந்த விஷயத்தையும் சொல்கிறான். இதனால், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கார்த்திக், ரம்யா வீட்டிற்கு கதவை உடைத்துக்கொண்டு வருகிறான். கோபத்துடன் வந்த கார்த்திக்கை பார்த்து, என்ன ஆச்சு கார்த்திக் என்று ரம்யா கேட்க, அவளை ஓங்கி அறைகிறான். என்ன நடக்கிறது என்று புரியால் ரம்யா நிற்க, ச்சீ.. நீ எல்லாம் ஒரு பொண்ணா, உன்னைப்போய் பிரண்டுனு தீபா நம்புனா பாரு, அவளுக்கு எப்படி உன்னால துரோகம் பண்ண முடிஞ்சது என்று கேள்வி மேல் கேள்வி கேட்க,

ரம்யா ஆமா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் அதுக்கு தான் இப்படி பண்ணேன், இதுக்கெல்லாம் என்ன ஆதாரம் இருக்கு என்று கேட்க ரம்யாவின் அப்பாவும் போலீசும் உள்ளே வருகின்றனர். உண்மையில் கார்த்திக்கிற்கு உண்மை தெரிந்துவிட்டதா இல்லை வழக்கம் போல, இதுவும் சீரியல் ட்விஸ்டா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X