மலை உச்சியில் இருந்து விழுந்த ரம்யா.. சதிவேலை பார்த்த ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில்குடோனில் மாஸ்க் போட்டுக்கொண்டு இருக்கும் ரம்யா குறித்து அம்பிகா கூறியதை அடுத்து திருமணம் நின்று விடுகிறது. இதையடுத்து, ரியா, ரம்யா இருவரும் தீபாவை காரில் கடத்திச் சென்று விடுகின்றனர். கல்யாணம் நின்று போன அதிர்ச்சியில் அபிராமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிக்சை நடந்து கொண்டு இருக்கிறது. மறுபக்கம், மலை உச்சியில் தீபா, ரம்யா, ரியா என மூவருக்கும் இடையே மோதல் உருவான நிலையில் இன்று நடக்கப்போவதை பார்க்கலாம்.
கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், ரம்யா மற்றும் தீபாவிற்கு இடையே கடுமையான சண்டை நடக்கிறது. அப்போது, ரம்யா, தீபாவை துப்பாக்கியை எடுத்து சுட தவறுதலாக ரியா மீது குண்டு பாய்கிறது. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தீபா, பார்த்தியா ரம்யா உன்னோட தவறான ஆசையால் ரியாவிக்கு இப்படி ஆகிவிட்டது என்று சொல்கிறாள். அப்போது, உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ரியா, நம்ம இரண்டு பேருக்கும் தீபா தான் எதிரி அவளை மட்டும் உயிரோட விட்டுவிடாதே என்று சொல்லிவிட்டு இறந்து விடுகிறாள்.

உயிர்பிச்சை போடுறியா: இதனால், ஆத்திரம் அடைந்த ரம்யா, ஏய் தீபா உன்னாலத்தான் என் ப்ரண்ட் ரியா செத்துப்போயிட்டா உன்னை நான் சும்மாவே விடமாட்டேன் என்று மலை உச்சிக்கு செல்ல, அப்போது, ரம்யா பாறையில் தடுக்கி விழுகிறாள். உடனே தீபா அவளுக்கு கைகொகடுத்து காப்பாற்ற முயற்சி செய்கிறாள். ஆனால், ரம்யா, என்னடி எனக்கு உயிர் பிச்சை போடுறியா, உன்னால நான் வாழ்ந்தேன் என்கிற பெயர் வரக்கூடாது. அதற்கு நான் செத்தாலும் பரவாயில்லை என்று, தீபாவின் கையை உதறிவிட்டு ரம்யா கீழே விழுகிறாள்.
மலை உச்சியில் இருந்து விழுந்த தீபா: இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்த ஐஸ்வர்யா, அழுதுக்கொண்டு இருக்கும் தீபா மலை உச்சியில் இருந்து தள்ளி விட அவளும் சரிந்து விழுகிறாள். எப்பா எத்தனை நாள் கனவு, செத்துப்போடி, எங்க அம்மாவை ஜெயிலுக்கு அனுப்புனா, என்னை அந்த வீட்டில் நிம்மதியாவே வாழ விடலா, இனிமே அந்த வீட்டில் நான் நிம்மதியா வாழ்வேன் என்று சொல்லிவிட்டு யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து ஓடிவிடுகிறாள் ஐஸ்வர்யா. மறுபக்கம் தீபாவை தேடி கார்த்திக் வந்து கொண்டு இருக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











