கார்த்திக்கிடம் சிக்கிய போலி சாமியார்..ரம்யாவின் முகத்திரை கிழியுமா?கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில், ரம்யாவின் அப்பா கார்த்திக்கை வீட்டிற்கு அழைத்து, ரம்யா கார்த்திக் மீது காதலுடன் இருக்கும் விஷயத்தையும் டைரியில் இது குறித்து எழுதி வைத்திருந்த விஷயத்தையும் சொல்கிறார். இதனால், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கார்த்திக், ரம்யா வீட்டிற்கு கதவை உடைத்துக்கொண்டு வருகிறான். கோபத்துடன் வந்த கார்த்திக்கை பார்த்து, என்ன ஆச்சு கார்த்திக் என்று ரம்யா கேட்க, அவளை ஓங்கி அறைகிறான்.
ரம்யா ஆமா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் அதுக்கு தான் இப்படி பண்ணேன், இதுக்கெல்லாம் என்ன ஆதாரம் இருக்கு என்று கேட்க ரம்யாவின் அப்பாவும் போலீசும் உள்ளே வந்து, ரம்யாவை கைது செய்ய போவதாக சொல்ல ரம்யா போலீஸ் துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டு கொள்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் சீரியல்: இன்றைய சீரியல் போலீஸ், ரம்யாவின் அப்பா பதறி அடித்துக்கொண்டு எழுந்திருக்க அது, அவருடைய கனவு என தெரிய வருகிறது. இதனால் கார்த்திக்கிடம் உண்மையை சொல்ல வேண்டாம் என்று முடிவெடுக்கிறார். ஆனால் கார்த்திக், அவர் வீட்டிற்கு அழைத்தால், வீட்டிற்கு வந்து விட உங்களுக்கு மாற்றி போன் செய்து விட்டதாக ஏதோ சொல்லி சமாளித்து விடுகிறார்.
பூ வைத்துவிட்ட கார்த்திக்: அதன் பிறகு கார்த்திக், தீபா கோவிலுக்கு வர கார்த்திக் காரை பார்க் செய்து விட்டு வர போன கேப்பில் தலையில் இருந்த பூவை எடுத்து விட்டு கார்த்திக் வந்ததும் பூ வாங்கி வைத்து விட சொல்கிறாள். கார்த்திக் உங்க தலையில் ஏற்கனேவே பூ இருந்ததே என்று கேட்க தீபா, பூ இல்லை என்று சொல்கிறாள். பூ கடைக்காரர் அந்த பொண்ணு உங்க கையால் பூ வச்சுக்கணும்னு ஆசைப்படுது வாங்கு வச்சி விடுங்க என்று சொல்ல கார்த்திக் தீபாவுக்கு பூ வைத்து விடுகிறான்.
பல கெட்டப்பில் போலி சாமியார்: இந்த நேரம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து இன்ஸ்பேக்டர் கார்த்திக்கிற்கு போன் செய்து, உங்களுடைய போனுக்கு அந்த போலி சாமியார் பல கெட்டப்பில் இருக்கும் போட்டோவை அனுப்பி இருக்கிறேன் பாருங்கள் என்று சொன்னதும், கார்த்திக் அந்த போட்டோவைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். இது ரம்யா கம்பெனியில் வேலை செய்த சேகர் ஆச்சே என்று யோசித்துக்கொண்டு இருக்க. அந்த நேரம் கோவிலில் சேகர் தேங்காய் சாப்பிட்டுக்கொண்டு இருப்பதை பார்த்து விடுகிறான்.
வசமாக சிக்கிய போலி சாமியார்: கார்த்திக் முறைப்பதை பார்த்த சேகர், அய்யோ இவர் நம்மை கண்டுபிடிச்சிட்டாரு போல, இனிமேல் இங்கே இருந்தா அவ்வளவு தான் மட்டுவோம் என்று நைசாக தப்பிக்க முயற்சி செய்கிறான். அப்போது , அவனை பிடித்த கார்த்திக் நீ தானே அந்த போலி சாமியார் என்று சொல்ல, அய்யோ அது நான் இல்லை என்கிறார். யார்கிட்ட பொய் சொல்ற என்று போலீசார் அனுப்பிய போட்டோவை காட்டி பளார் என்று அறைவிட்டு, நீ வெறும் பகடைக்காய் தான் யார் உன்னை அனுப்பியது, உண்மையை சொல்லு என்று அடிக்க பயந்து போன சேகர், தப்பித்து ஓடிவிடலாமா, இல்லை ரம்யாவை மாட்டிவிடலாமா என்று யோசிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











