கார்த்திக் மீது இருக்கும் ஆசையால் கேவலப்பட்ட ரம்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியல், போலீஸ் ஸ்டேஷனில் இருந்து இன்ஸ்பெக்டர் அனுப்பிய போலி சாமியாரின் போட்டோவை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். அந்த நேரம், கோவிலில் சேகர் தேங்காய் சாப்பிட்டுக்கொண்டு இருப்பதைப் பார்த்துவிட, இவர் நம்மை கண்டுபிடிச்சிட்டாரு போல, இனிமேல் இங்கே இருந்தா அவ்வளவு தான் மாட்டிப்போம் என்று நைசாக தப்பிச்சிப்போக முயற்சி செய்கிறான்.

அப்போது, அவனை பிடித்த கார்த்திக் நீ தானே அந்த போலி சாமியார் என்று கேட்க, அய்யோ அது நான் இல்லை சார் என்றதும், போட்டோவை காட்டி பளார் என்று அறைவிட்டு, நீ வெறும் பகடைக்காய் தான் யார் உன்னை அனுப்பியது உண்மையை சொல்லு என்று அடிக்க. பயந்து போன சேகர் எல்லாத்துக்கும் காரணம் ரம்யா தான் அவங்கதான் பணத்தை கொடுத்து இப்படி செய்ய சொன்னதாக சொல்கிறான்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: சேகருடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த கார்த்திக், ரம்யா குறித்து சொல்லி கைது செய்ய சொல்கிறான். எல்லாத்துக்கும் சேகர் தான் சாட்சி என்று போலீசிடம் சொல்லி ரம்யாவை கைது செய்ய சொல்லிக்கொண்டு இருக்க ரம்யாவின் அப்பா விஸ்வநாதன், அவள் கெட்டவ இல்ல, கல்யாணமே வேண்டாம் என்று இருந்தா, ஆனால், அவள் உங்களை காதலிக்கிறாள். உங்க மேல் உள்ள காதலால் தான் அப்படி நடந்து இருக்கா, தயவு செய்து என் மகளை காப்பாத்துங்க. நீங்க தீபா கழுத்தில் தாலி கட்டினா எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்கிறார்.

வாக்கு கொடுத்த கார்த்திக்: தீபா மேல எனக்கும் அக்கரை இருக்கு, அவளும் என் மகள் மாதிரிதான். சின்ன வயசுல இருந்தே ரம்யாவுக்கு ஒன்னு பிடிச்சா அதை அடையணும்னு நினைப்பா இல்ல அதை அழிக்கணும்னு நினைப்பா.. அது தான் அவளோட குணம். அது தான் உங்க விஷயத்திலயும் நடந்திருக்கு என்று சொல்ல, எல்லாத்தையும் யோசித்த கார்த்திக் சரி, இந்த விஷயத்தை வெளியில் தெரியாமல் சரி செய்து விடலாம் என்று ரம்யாவின் அப்பாவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறான்.

தீபாவின் காலில் விழுந்த ரம்யா: வீட்டில், அனைவரும் மியூசிக் சேர் விளையாடிக்கொண்டு இருக்க, கடைசியா தீபா, ரம்யா மட்டும் விளையாட, இந்த போட்டியில் வெற்றி பெற்று விட்டால் கார்த்திக் நமக்குத்தான் என்று ஓடி, மியூசிக் நின்றதும் தீபா டக்குனு சேரில் அமர்ந்து விட ரம்யா கீழே விழுந்துவிடுகிறாள். இதைப்பார்த்து அனைவரும் சிரிக்க, அங்கு வரும் கார்த்திக், என்ன ரம்யா மேடம் உங்க பிளான் எல்லாம் வீணாபோச்சு போல என்று கிண்டலாக கேட்க, பதறிய ரம்யா என்ன பிளான் அதெல்லாம் ஒன்னும் இல்லயே என்று சொல்ல, அட நீங்க வேற, இந்த விளையாட்டை பத்தி சொன்னேன் என்று சமாளிக்கிறான்.

பொய் சொன்ன சேகர்: இதனால், சத்தேகப்படும் ரம்யா, சேகருக்கு போன் போட்டு நீ எங்க இருக்க என்று கேட்க, மேடம் நான் ஊருக்கு வந்துவிட்டேன். இனி அந்த பக்கமே வர மாட்டேன் என்று சொல்ல ரம்யா நிம்மதி அடைகிறாள். இதையெல்லாம் கார்த்திக் தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X