துர்கா கழுத்தில் இருந்த தாலி.. பதறிப்போன கார்த்திக்.. கார்த்திகை தீபம் சீரியல்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில், பிரச்சாரம் சுறுசிறுப்பாக நடந்து கொண்டு இருக்க, பரமேஸ்வரி பாட்டிவீட்டிற்கு வரும் சாமுண்டீஸ்வரி வீட்டிற்குள் வர மாட்டேன் என்கிறார். பின் கார்த்திக் அத்தை முதலில் வீட்டிற்குள் போங்க, ஊர் மக்கள் அனைவரும் பார்க்கிறார்கள் என்கிறான். பின ஊர் மக்கள் அனைவரும் கட்டாயப்படுத்த சாமுண்டீஸ்வரி தவிர்க்க முடியாமல் பரமேஸ்வரி பாட்டி வீட்டிற்குச் சென்று சாப்பிடுகிறாள். இதைப் பார்த்து ரேவதி, துர்கா, ரோகிணி என அனைவரும் சந்தோஷப்படுகின்றனர்.

ஆனால், சந்திரகலா, இந்த குடும்பத்தோட சாமுண்டீஸ்வரி சேர்ந்துவிடுவாள் போலயே என ஆத்திரப்படுகிறாள். சிவனாண்டி மற்றும் சந்திரகலா ஆகியோர் சாமுண்டீஸ்வரியை ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று திட்டம் போடுகின்றனர். அடுத்ததாக சாமுண்டீஸ்வரி பிரச்சாரம் செய்யும்போது ஒருவன் மாலை போட வந்து சாமுண்டீஸ்வரி இடுப்பை பிடித்துக் கிள்ள சாமுண்டீஸ்வரி கோபப்பட்டு அவனை அறைகிறாள். இதனால் அந்த நபர் சுருண்டு கீழே விழ சிவனாண்டி இதை சாதகமாக பயன்படுத்தி சாமுண்டீஸ்வரி மீது புகார் அளிக்க அவரை விசாரணைக்கு அழைத்துச் செல்கின்றனர். இதையடுத்து கார்த்திக் அங்கு வந்து இதுக்கு பின்னாடி இருக்கும் மர்மத்தை நான் கண்டுபிடித்து சாமுண்டீஸ்வரியை வெளியே அழைத்துவருகிறான்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: இதைத்தொடர்ந்து தேர்தல் நடக்க தொடங்க சந்திரகலா, சிவனாண்டி இந்த தேர்தல் நடந்தால், நிச்சயம் நாம் மிகவும் தோற்று போவோம். இதனால், இந்த தேர்தல் நடத்தக்கூடாது என்று திட்டமிடுகின்றனர். இதனால், சந்திரகலா, சிவனாண்டி ஆகியோர் காளியம்மா என்பவரை சந்திக்கின்றனர். அப்போது காளியம்மா, கடன் வாங்கிய ஒருவரை வீட்டுக்கு அழைத்து வந்து, அவனுக்கு சாப்பாடு போட்டு, அவன் சாப்பிடும்போது உலக்கையால் அவனது கை தாக்குகிறாள். இதைப்பர்த்து சிவனாண்டியே பயந்து போகிறான். பின், சிவனாண்டி தனது சித்தியான காளியம்மாவிடம் தேர்தலை நிறுத்த உதவி கேட்கிறான். காளியம்மாவும், நான் பரமேஸ்வரி பாட்டி வீட்டுக்கு இது பற்றி பேசுகிறேன் என்கிறாள்.

முத்தம் கொடுத்த ரேவதி: மறுபக்கம், கார்த்திக், ரேவதி இருவரும் பரமேஸ்வரி பாட்டி வீட்டுக்கு வருகின்றனர். அவர்கள் வீட்டிற்கு போவதை தெரிந்து கொண்ட, 3 சகோதரிகளும் பின்னாடியே வந்து இறங்குகின்றனர். பாட்டி வீட்டில் அனைவரும் ஜாலியாக கண்ணாமூச்சி ஆட்டம் ஆட ரேவதி கண்ணை கட்டிக்கொண்டு கார்த்தியை பிடித்து முத்தமிடுகிறாள். கார்த்தி என்று தெரிந்தே முத்தம் கொடுத்த ரேவதி, அய்யோ சாரி கார்த்திக் நான், பாட்டி என்று நினைத்து முத்தம் கொடுத்து விட்டேன் என பொய் சொல்லி சமாளிக்கிறாள். இதைப்பார்த்த ரோகிணி, ரேவதியை கிண்டலடிக்க அவள் வெட்கப்படுகிறாள். இப்படியே வீட்டில் அனைவரும் விளையாட்டக்கொண்டு இருக்கின்றனர்.

துர்கா கழுத்தில் தாலி: அப்போது, துர்கா கழுத்தில் இருந்த தாலி வெளியே வர ரோகிணி, இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவளது கண்ணத்தில் பளார் என அறைந்துவிடுகிறாள். என்னடி இது, இப்படி குடும்பமானத்தை வாங்கிட்டியே என்று ஆத்திரத்தில் கத்துகிறாள். அப்போது, கார்த்திக் மற்றும் ரேவதி, நவீனுக்கும் அவளுக்கும் திருமணம் ஏற்கனவே நடந்து விட்டது. இந்தவிஷயம் அம்மாவிற்கு தெரிந்தால் பெரிய பிரச்சனையாகும் என்பதற்காக இப்போதைக்கு மறைத்து வைத்து இருக்கிறோம் என்று சொல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X