மாறிய போட்டோ.. ரம்யாவிற்கு கார்த்திக் வைத்த ஆப்பு.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியல், ரம்யாவின் அப்பா விஸ்வநாதன், ரம்யா உங்களை காதலிக்கிறாள். உங்க மேல் உள்ள காதலால் தான் அப்படி நடந்து இருக்கா, தயவு செய்து என் மகளை காப்பாத்துங்க என்று கேட்டுக் கொண்டதால், கார்த்திக் ரம்யாவை பற்றி யாரிடமும் சொல்லாமல் மறைத்துவைத்து, தீபா கல்யாணத்தோடு ரம்யாவிற்கும் கல்யாணம் செய்து வைத்துவிடலாம் என்று முடிவு எடுத்துவைத்துள்ளனர்.

மறுபக்கம் வீட்டில், அனைவரும் மியூசிக் சேர் விளையாடிக்கொண்டு இருக்க, கடைசியாக தீபா, ரம்யா மட்டும் விளையாட, தீபா டக்குனு சேரில் அமர்ந்து விட ரம்யா கீழே விழுந்துவிடுகிறாள். இதைப்பார்த்து அனைவரும் சிரிக்க, அங்கு வரும் கார்த்திக், என்ன ரம்யா மேடம் உங்க பிளான் எல்லாம் வீணாபோச்சு போல என்று கிண்டலாக கேட்க, பதறிய ரம்யா, கார்த்திக்கிற்கு எல்லா உண்மையும் தெரிந்துவிட்டதா என பதறி, சேகருக்கு போன் போட்டு விசாரிக்கிறாள். இதையடுத்து இன்று என்ன ஆனது என்று பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம் சீரியல்: இன்றைய எபிசோடில், கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருக்க தீபாவுக்கு மருதாணி போடும் நிகழ்ச்சியை நடத்த முடிவெடுக்கின்றனர். அபிராமி கொஞ்சம் வித்தியாசமா செய்யலாம் கார்த்திக்கே தீபாவுக்கு மருதாணி போட்டு விட சொல்கிறாள். இதற்கு எல்லோரும் ஓகே சொல்கின்றனர். அதன் பிறகு கார்த்திக் தீபாவுக்கு மருதாணி போட தயாராக அருண் ஆபீஸ்ல எல்லாரையும் நீ வேலை வாங்கிட்டு இருந்த இப்போ உன் பொண்டாட்டிக்கு மருதாணி போடுற மாதிரி ஆயிடுச்சு உன் நிலைமை என்று கலாய்த்து சிரிக்க கார்த்திக் நான் தீபாவுக்கு மருதாணி போடுற மாதிரி நீங்க எல்லாரும் உங்க பொண்டாட்டிக்கு மருதாணி போடுங்க என்று மாட்டி விடுகிறான்.

சிவந்த மாருதாணி: இதையடுத்து, அனைவரும் அவர் அவர் மனைவிக்கு மருதாணி போடுகின்றனர். மருதாணி போட்டு கொஞ்சம் நேரம் கழித்து தீபா, கைகளை கழுவ தீபாவின் கை மட்டும் நன்றாக சிவந்து இருக்கிறது. இதைப்பார்த்த தீபா, ஓடி வந்து பாத்தீங்களா கை எப்படி சிவந்து இருக்கு, உங்களுக்கு என் மேல லவ் இருக்கு என்று சொல்கிறாள். ஓ... அப்படியா... போயிட்டு அண்ணி கிட்ட கேளுங்க என்று சொல்கிறான். பிறகு தீபா, மீனாட்சியிடம் கேட்க, அவள் உனக்கு போட்டது மட்டும் தான் ரியல் மருதாணி மத்தவங்களுக்கெல்லாம் வச்சது மருதாணி கிடையாது நான்தான் மாத்தி வச்சேன் என்று சொல்கிறாள்.

ரம்யாவிற்கு கார்த்திக் வைத்த ஆப்பு: மறுபக்கம், வீட்டுக்கு தரகரை வரவைத்து ரம்யாவிற்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்று பேசுகின்றனர். இதைக் கேட்டதும் ரம்யா அதிர்ச்சி அடைகிறாள். இதையடுத்து தரகர் வந்து போட்டோவை காட்ட, கார்த்திக், ரம்யாவின் அப்பா தான் மாப்பிள்ளையை தேர்வு செய்வார் என்று சொல்லி இரண்டு போட்டோவை கொடுக்கிறார். எனக்கு இந்த மாப்பிள்ளை பிடிச்சு இருக்கு என்று கார்த்திக் போட்டோவை ரம்யாவிடம் கொடுக்க, அவளும் திருமணத்திற்கு ஓகே சொல்ல, கடைசியில் அது வேறு போட்டோவாக இருக்கிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். ‌

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X