கார்த்திக் ரேவதியை பிரிக்க வந்த புது வில்லி.. அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கார்த்திகை தீபம் சீரியல்!
சென்னை: பரமேஸ்வரி பாட்டி வீட்டில், அனைவரும் ஜாலியாக கண்ணாமூச்சி ஆட்டம் ஆட ரேவதி கண்ணை கட்டிக்கொண்டு கார்த்தியை பிடித்து முத்தமிடுகிறாள். கார்த்தி என்று தெரிந்தே முத்தம் கொடுத்த ரேவதி, அய்யோ சாரி கார்த்திக் நான், பாட்டி என்று நினைத்து முத்தம் கொடுத்து விட்டேன் என பொய் சொல்லி சமாளிக்கிறாள். அதன் பின் துர்காவின் கண்ணை கட்டி விட்டு அனைவரும் விளையாடுகின்றனர். அப்போது, துர்கா கழுத்தில் இருந்த தாலி வெளியே வந்து விழ, அதை ரோகிணி, பார்த்து அதிர்ச்சி அடைந்து அவளது கண்ணத்தில் பளார் என அறைந்துவிடுகிறாள்.
என்னடி இது, இப்படி குடும்பமானத்தை வாங்கிட்டியே என்று ஆத்திரத்தில் கத்துகிறாள். அப்போது, கார்த்திக் மற்றும் ரேவதி, இந்த விஷயம் எங்களுக்கு ஏற்கனவே தெரியும். ஒரு நாள் துர்கா வீட்டை விட்டு வெளியே சென்று கோவிலில் நவீனை திருமணம் செய்து கொண்டாள். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் பெரிய பிரச்சினையாகி விடும் என்பதால் நாங்கள் இதை மறைத்து வைத்தோம் என்கிறார். அது மட்டுமல்லாமல் சந்திரலேகா துர்காவிற்கு பார்த்த மாப்பிள்ளை, சிவனாண்டி ஏற்பாடு செய்த ஆள் அதனால் தான், அந்த நிச்சயத்தை நிறுத்தினோம் என்று கார்த்திக் விஷயத்தை சொல்கிறான்.

கார்த்திகை தீபம்: இதை கேட்ட, ராஜராஜன் இத்தனை பிரச்சனைகளை நாம் எப்படி சமாளிக்க போகிறோம் என்பதே தெரியவில்லை. இது மட்டும் சாமுண்டீஸ்வரிக்கு தெரிந்தால் வீட்டில் ஒரு பிரளயமே வெடிக்கும் என்கிறார். அப்போது, அதவிடுப்பா, என் பேத்திக்கு கல்யாணம் நடந்து இருக்கும் எனக்கு மாப்பிள்ளை யார் என்று தெரிய வேண்டாமா, நான் மாப்பிள்ளையை பார்க்க வேண்டும் என்று சொல்ல, கார்த்திக், நவீனுக்கு ஃபோன் செய்து கோவிலுக்கு வரும் படி சொல்கிறான். இதனால், அனைவரும் கோவிலுக்கு கிளம்பி செல்கின்றனர்.
புதுவில்லி: மறுபக்கம், சாமுண்டீஸ்வரியால் பலமுறை அவமானப்பட்டு போன சிவனாண்டி தன்னுடைய சித்தியான காளியம்மாள் வீட்டுக்கு சென்று சாமுண்டீஸ்வரி பற்றி அனைத்து விஷயத்தையும் சொல்ல, காளியம்மா, அந்த பரமேஸ்வரி, சாமுண்டீஸ்வரியை உன்னால் ஜெயிக்க முடியாது, ஏற்கனவே அவளுக்கும் ஏற்கனவே பகை இருக்கிறது. அதை திரும்பி கொடுக்க வேண்டிய நேரம் அப்போத்தான் வந்து இருக்கு, அப்போ எல்லாரும் எங்கே இருக்காங்க என்று கேட்க, பரமேஸ்வரி தன்னோடு பேத்திகளுடன் கோவிலில் கூழ் கொடுத்துக்கொண்டு இருக்கிறாள் என்று சொல்கிறான். நானும் கோவிலுக்கு வரேன் என்று காளியம்மா.
என்ட்ரி கொடுத்த காளியம்மா: இதையடுத்து, கோவிலுக்கு கிளம்பும் விருமன், பரமேஸ்வரி பாட்டியிடம் வேண்டுமென்றே வம்பு இழுத்து பேசுகிறான். அப்போது பரமேஸ்வரி பாட்டி, என்னப்பா, உன்னோட தினமும் அதே தொல்லையா போச்சு, நானே என்னுடைய பேத்திங்களோட சந்தோஷமா இந்த கோவிலுக்கு வந்தா, நீ இப்படி தொல்லை பண்ணிக்கிட்டே இருக்க கோவிலோட பழக்க வழக்கம், முறைனு ஒன்னு இருக்குது. அதை தான் நாங்க செய்து கொண்டு இருக்கிறோம் என்று சொல்ல, அப்போது, காளியம்மா என்ட்ரி கொடுத்து, அந்த பழக்க வழக்கததை கொண்டு வந்ததே நீங்களும் உங்க புருசனும் தானே. போ அந்த வழக்கத்தை ஒருமுறை மாத்துனா தாப்பு இல்லை என்று சொல்கிறாள்.
என்ன நடந்தது: காளியம்மாவை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைத்து நிற்கின்றனர். தொடர்ந்து, இருவருக்கும் பரமேஸ்வரிக்கும் காளியம்மாளுக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது அப்போது, கோயில் பூசாரி, இந்த ஊரில் இரண்டு பேரும் பெரியவர்கள் தான். இதனால், சாமி முன்னடி பெயர் எழுதி போடுவோம், யாருடைய பெயர் வருகிறதோ அவர்கள் முதலில் பூஜை செய்யட்டும் என்று பெயர் எழுதி போட, அதில்,பரமேஸ்வரி பாட்டியில் பெயர் வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











