அபிராமி உயிருக்கு ஆபத்து.. தீபா எடுத்த முடிவு? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில், வீட்டுக்கு தரகரை வரவைத்து ரம்யாவிற்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்று பேசுகின்றனர். வீட்டிற்கு வரும் தரகர், போட்டோவை காட்ட, கார்த்திக், ரம்யாவின் அப்பா தான் மாப்பிள்ளையை தேர்வு செய்வார் என்று சொல்லி இரண்டு போட்டோவை கொடுக்கிறார். எனக்கு இந்த மாப்பிள்ளை பிடிச்சு இருக்கு என்று கார்த்திக் போட்டோவை ரம்யாவிடம் கொடுக்க, அவளும் திருமணத்திற்கு ஓகே சொல்ல, கடைசியில் அது வேறு போட்டோவாக இருக்கிறது. இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
கார்த்திகை தீபம்: இன்றைய சீரியலில், ரம்யா தரகரை மடக்கி மாப்பிள்ளையின் போன் நம்பரை வாங்குகிறாள். பிறகு ரியாவிற்கு விஷயத்தை சொல்லி, கார்த்திக்கை கல்யாணம் பண்ண வேண்டும் என்று நினைச்சா, அவன் எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறான். விட்டா தீபா கல்யாணத்திற்கு முன்னாடியே கார்த்திக் எனக்கு கல்யாணம் பண்ணிவச்சிடுவோன் போல என்று சொல்லி புலம்ப, ரியா நீ வருத்தப்படாத நான் இருக்கேன் நீ, அந்த பையனுக்கு போன் பண்ணி பேசு என்கிறாள்.

ரம்யா போட்ட பிளான்: மறுபக்கம் கார்த்திக்கை சந்தித்து பேசும், விசுவநாதன் அவ கல்யாணத்து ஓகே சொன்னதுக்கு பின்னாடி ஏதோ ஒரு விஷயம் இருக்கு, அவ எப்படியாவது கல்யாணத்தை நிறுத்த முயற்சி செய்வா, அவளை நம்பக்கூடாது கார்த்திக், நீங்க தான் என் மகள் கல்யாணத்தை நடத்தி வைக்கணும், உங்களைத்தான் நான் மலைபோல நம்பி இருக்கிறேன் என்று சொல்ல, கார்த்திக் வருத்தப்படாதீங்க நான் பார்த்க்கொள்கிறேன் என்கிறான்.
எடுத்து என்ன நடக்கும்: மறுபக்கம், ரம்யா, தரகர் கொடுத்த மாப்பிள்ளை நம்பருக்கு போன் செய்து, எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்ல, மாப்பிள்ளையும் எனக்கும் விருப்பம் இல்லை என்று சொல்கிறான். இதைகேட்டு சந்தோஷப்படும் ரம்யா, நீங்க பொண்ணு பார்க்க வந்துவிட்டு, பின் பெண்ணை பிடிக்கவில்லை என்று சொல்லிவிடுங்கள் என்கிறாள். அதற்கு மாப்பிள்ளை ஓகே நான் அப்படியே செய்கிறேன் என்கிறார்.
தீபாவிற்கு தெரிந்த உண்மை: வீட்டில், தர்மலிங்கம், ஜானகி, தீபாவுக்கு இந்த கல்யாணம் நடக்க கூடாது, ஒருவேளை கல்யாணம் நடந்தா அபிராமி அம்மா உயிருக்கே ஆபத்து ஆகிரும், எப்படியாவது இதை நிறுத்திடனும் என்று பேசி கொண்டிருக்க, அதை ஐஸ்வர்யா கேட்டு விடுகிறாள். கார்த்திக்கிடம் இந்த விஷயத்தை சொல்லிடலாம் என்று முடிவெடுக்கும் அவள் அவனை தேடி ரூமுக்கு வர, அங்கு தீபா இருக்க தீபாவிடம் மொத்த விஷயத்தையும் சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











