தாலியுடன் சிக்கிய ரம்யா... கார்த்திக் போட்ட பிளான்..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: கார்த்திக், தீபா கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் ஒவ்வொன்றாக நடக்க ஆனந்த் கல்யாண பத்திரிக்கை ரெடியாகி விட்டதாக சொல்லி கொண்டு வந்து கொடுக்க அபிராமி அதை பார்த்து சந்தோசப்படுகிறாள். இந்த பத்திரிக்கையை பார்த்த தீபா மிகவும் சந்தோஷப்படுகிறாள்.
இதையடுத்து, அபிராமி கோவிலுக்கு வர ரம்யா அவரை பின் தொடர்ந்து வருகிறாள். அபிராமி பெண் சித்தரை சந்தித்து தாலியை கொடுத்து ஆசிர்வாதம் வாங்கி விட்டாள் கல்யாணம் நல்லபடியா நடந்துவிடுமே என்ற பயத்தில், இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என முடிவெடுக்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், அபிராமியை பின்தொடர்ந்து வந்த ரம்யா, அபிராமி அசந்த நேரமாக பார்த்து அபிராமியின் பேக்கை திருடி விடுகிறாள். என் மருமகளுக்காக ஆசை ஆசையா பார்த்து வைத்திருந்த தாலி அது என்று அபிராமி அழுதுக்கொண்டு இருக்க. அங்கு வரும், கார்த்திக்கிடம் தாலி காணாமல் போன விஷயத்தை சொல்லி எப்படியாவது கண்டுபிடித்து கொடு என்று சொல்கிறாள். அடுத்து கார்த்திக் கோவிலுக்கு வர அங்கு ரம்யா இருக்க இவனுக்கு ரம்யா மீது சந்தேகம் வருகிறது.
கார்த்திக்கின் பிளான்: உடனே ஒரு திட்டத்தை போடும் கார்த்திக், ரம்யாவிடம் நீங்க எங்கேயும் போகாமல் அம்மாவுடன் இருங்க, அவங்க ரொம்ப பயந்து போய் இருக்காங்க. நான் போய் கண்டு பிடித்து கொண்டு வரேன் என்று சொல்ல ரம்யா எப்படி கண்டு பிடிக்க போறீங்க என்று கேட்கிறாள். உடனே கார்த்திக் அந்த பேக்கில் தாலி மட்டும் இல்ல அம்மாவோட போனும் இருக்கு, போலீசில் சொல்லி மொபைல் நம்பரை ட்ரேஸ் செய்து கண்டு பிடித்து விடுவேன் என்று சொல்ல ரம்யா அதிர்ச்சி அடைகிறாள்.

மகிழ்ச்சியில் அபிராமி: கார்த்திக் கிளம்பி போனதும் அபிராமியிடம் தண்ணீர் வாங்கிட்டு வருவதாக சொல்லி வேகவேகமாக வந்து அந்த பையை அபிராமியிடம் கொடுக்கிறாள். வெளியில் நாலு ரௌடிகள் இந்த பேக்கை வைத்து இருந்தார்கள், அவர்களிடம் எப்படியோ பேசி வாங்கிவிட்டேன் என்று சொல்லி, அபிராமியிடம் பையை கொடுக்கிறாள். இதையடுத்து அபிராமி கார்த்திக்கிற்கு போன் செய்து பை கிடைத்துவிட்ட விஷயத்தை சொல்ல, கார்த்திக் நம்ம போட்ட பிளான் வொர்க்அவுட் ஆகிவிட்டது என்று சந்தோஷப்படுகிறான்.
ரம்யா வீட்டிற்கு வந்ததும் மாப்பிள்ளை ரமேஷ், நாம் எங்கே ஹனிமூன் போலாம் என்று பேச, ரம்யா கடுப்பாக்குகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











