சாமுண்டேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்ற திட்டம்.. காளியம்மாளின் பிளான்.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில், ரேவதி கார்த்தியிடம் தனது காதலை சொல்ல கார்த்திக், ரேவதி நான் உனக்கானவன் இல்லை. ஏற்கனவே என் வாழ்க்கையில் தீபா எ இருந்தாள். அவளை நான் இன்னும் மறக்கவே இல்லை. நான் உணர்வை மதிக்கிறேன் ரேவதி என்று சொல்ல ரேவதி அதிர்ச்சி அடைகிறாள். ராஜா இது காதல் என்று சொல்ல முடியாது, நான் உன்மேல பைத்தியா இருக்கேன் தயவு செய்து புரிஞ்சிக்கோ என்று சொல்கிறாள். அப்போதும் கார்த்திக் காதலை மறுக்க, எண்ணி ஒரு மாதத்தில் உன்னை காதலிக்க வைக்கிறேன் என்று சவால் விடுகிறாள்.

இன்னொரு பக்கம் மயில்வாகனம் ரோகிணியிடம் நாமளும் ஒண்ணா உக்காந்து நிலா சோறு சாப்பிடலாம்.. நான் போய் குழம்பு மட்டும் வாங்கிட்டு வரேன் என்று சொல்லி வருகிறான்.. அதேபோல், கடற்கரைக்கு வந்த நவீனும் குழம்பு வாங்க வருகிறான். நவீனை கண்டுபிடித்த மயில் வாகனம், இங்கேயும் வந்துட்டியா? ஏதாவது பிரச்சனை வரப்போகிறது தயவு செய்து போ என்று சொல்ல, அதெல்லாம் கார்த்திக் இருக்கும் வரைக்கும் நடக்காது என்று சொல்கிறான். இதையடுத்து என்ன நடக்கபோகிறது என்று பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: சாமுண்டீஸ்வரி குடும்பத்தினர் ஆடி மாதம் கூழ் ஊற்ற முடிவெடுக்கின்றனர். இந்த விஷயம் அறியும் சிவனாண்டி இதைக் கெடுத்து விட சாமியாடி ஒருவரை ஏற்பாடு செய்கின்றான். ஆனால், அதற்கு முன்பே இந்த திட்டத்தை தெரிந்து கொண்ட, கார்த்திக், மயில்வாகனத்துடன் சேர்ந்து ஒரு திட்டம் போடுகிறான். பிறகு மயில்வாகனம், சாமி வந்து ஆடுவது போல ஆடி, பரமேஸ்வரிக்கு தான் இந்த விழாவில் கூழ் உற்ற வேண்டும், அப்போ தான் என் மனசு மகிழ்ச்சி அடையும் என்று சொல்ல, ஊர் மக்களும் நீயே சொல்லிய பிறகு, பரமேஸ்வரி குடும்பமே இதை செய்யட்டும் என்கின்றனர். இதனால், சிவனாண்டி போட்ட திட்டம் தவிடு பொடியாகிறது.

காளியம்மாள் போடும் திட்டம்: இதனால் ஆத்திரப்படும் சிவனாண்டி, தன்னுடைய சித்தி காளியம்மாளிடம் இந்த குடும்பமே எப்பொழுதும் ஜெயித்துக் கொண்டே இருக்கிறது. சாதாரண கூழ் ஊற்றும் விஷயத்தில் கூட அவர்கள் தான் ஜெயிக்கிறார்கள். நம்மால் எதுவுமே செய்ய முடியாமல் போகிறது. இதே நிலைமை நீடித்தால், இந்த ஊரில் நம்மால் வாழ கூட முடியாது மரியாதையே இருக்காது. இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் சித்தி என சொல்கிறான் அதைக் கேட்டது காளியம்மாள் நிச்சயமாக ஏதாவது ஒரு பெரிய திட்டத்தை போட்டு, இந்த குடும்பத்தையே அழித்து விடுவோம் அமைதியாக இரு என்கிறாள் காளியம்மாள்.

பிறகு அருண், கார்த்திக்கிற்கு ஃபோன் போட்டு முக்கியமான மீட்டிங் இருப்பதாக சொல்கிறார். உடனே கார்த்திக் ஆன்லைன் மீட்டிங் தானே கண்டிப்பா அட்டென்ட் பண்ணு என்று வாக்கு கொடுக்கிறேன். இந்த விஷயத்தை தெரிந்துகொண்ட சந்திரகலா கார்த்திக்கை சிக்க வைக்க இதுதான் சரியான நேரம் என முடிவெடுக்கிறாள். சாமுண்டீஸ்வரியிடம் சென்று சென்னையில் ஒரு கம்பெனியை உருவாக்கணும்.. அதற்கு இந்த ஆர்டரை எடுக்க வேண்டும் என்று சொல்லி ஒருவழியாக சாமுண்டீஸ்வரியை சம்மதிக்க வைக்கிறாள். அடுத்து கோவிலில் தீமிதி திருவிழாவில் பெட்ரோல் கலந்த தண்ணீரை சாமுண்டேஸ்வரி மீது ஊற்றி அவளை கொல்லவும் சதி திட்டம் நடக்கிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X