உண்மையை மறைத்த தீபா? கார்த்திக் கொடுத்த ஷாக்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் இதுவரை கார்த்திக்கிடம் ஒரு பெண், நான் தான் பல்லவி என அறிமுகமாகிறாள்.
அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தீபா, நான் தான் பல்லவி அவள் பொய் சொல்கிறாள் என்ற உண்மையை உடைக்கிறாள்.

இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்: தீபா நான் தான் பல்லவி என்று உண்மையை உடைக்க அதிர்ச்சி அடைந்த கார்த்திக் இவ்வளவு நாளா இதை ஏன் என்னிடம் சொல்லல, நீங்க பெரிய தப்பு பண்ணிட்டீங்க என்று தீபா மீது கோபப்படுகிறான். உண்மையில் தீபா கார்த்திக்கிடம் உண்மையை சொல்லவில்லை. ஆனால், சொன்னால் என்ன ஆகும் என்பதை நினைத்து பார்க்கிறாள்.

உண்மையை மறைக்கும் தீபா: நான் தான் உண்மையான பல்லவி என்ற உண்மையை கார்த்திக்கிடம் சொன்னால் நிச்சயம் பிரச்சனை வரும். இதனால்,உண்மையை சொல்லாமல் மறைத்துவிடுவதுதான் நல்லது என்று தீபாவும் ருபஸ்ரீயும் சேர்ந்து முடிவு செய்துவிடுகின்றனர்.

அடுத்தடுத்த ட்விஸ்ட்டுகள்: இதே இடத்தில் இன்னொரு பக்கம் ஐஸ்வர்யாவும் ஒளிந்து இருந்து இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்க இந்த பல்லவியை கொண்டு வந்தது அவளுடைய திட்டம் தான் என தெரிய வருகிறது. இப்படியான நிலையில், கார்த்திக் சிதம்பரத்திடம் போட்ட சவாலில் ஜெயிப்பாரா.. இல்லை போலியாக வந்து இருக்கும் பல்லவி சொதப்பி விடுவாரா என அடுத்தடுத்து வரும் ட்விஸ்ட்டுகளுடன் ஒளிபரப்பாக இருக்கும் கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











