ரேவதி போட்ட கண்டிஷன்.. அபிராமிக்கு காத்திருந்த குட் நியூஸ் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், திருமணம் என்று சொன்னதும் ரேவதி டல் ஆனாள், கார்த்திக் ரேவதியின் ரூம் கதவை தட்டி கல்யாணத்தில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்கிறான். ரேவதி என்னுடைய பெர்சனல் விஷயத்தில் நீ எதுக்கு தலையிடுற என்று கோபப்படுகிறாள். காதல் ஏதாவது இருக்கா? அப்படி எதாவது இருந்தா சொல்லுங்க என்று சொல்ல ரேவதி பக்கத்து ஊரை சேர்ந்த ஒருவனை காதலிப்பதாக சொல்கிறாள்.
அம்மாவுக்கும் அந்த குடும்பத்திற்கும் ஆகாது என்று சொல்கிறாள். இதை கேட்ட கார்த்திக் இவ்வளவு தானே விஷயம், உங்களுடைய காதலுக்கு நான் உதவுறேன் என்று வாக்கு கொடுக்கிறான். அடுத்த நாள் காலையில் சாமுண்டேஸ்வரி ரேவதியை கூப்பிட்டு உன்னுடைய முடிவு என்ன என்று கேட்க கல்யாணத்தில் எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு நான் கல்யாணம் பண்ணிக்கணும்னா நீங்க அப்பாவை அவங்க அப்பா அம்மாவை பார்க்க விடணும் என்று சொல்கிறாள். இதையடுத்து, இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், அதிர்ச்சியாகும் சாமுண்டேஸ்வரி அதெல்லாம் முடியவே முடியாது.. வாய்ப்பே இல்லை என்று சொல்ல பிளாஸ்கட்டில் கார்த்திக் தான் இப்படியொரு ஐடியாவை கொடுத்தான் என்பது தெரிய வருகிறது. இந்த சமயத்தில் கார்த்திக் இடையில் புகுந்து நீங்க ஒரு விஷயத்தை சொல்லும் அவங்க ஒரு விஷயத்தை கேட்கிறாங்க.. இதுல என்ன தப்பு இருக்கு என்று கேட்கிறான். ஒரு கட்டத்தில் சாமுண்டீஸ்வரி ரேவதியின் கண்டிஷனுக்கு ஓகே சொல்கிறாள். ஆனால் உன் கல்யாணம் முடிந்த பிறகு தான் உன் அப்பாவை அனுப்பி வைப்பேன் என்று சொல்ல ரேவதி சம்மதம் சொல்கிறாள். உடனே நிச்சயத்துக்கான ஏற்பாடுகளை செய்ய சொல்லி சாமுண்டேஸ்வரி ஆர்டர் போடுகிறாள்.
மகிழ்ச்சியில் அபிராமி: அடுத்து சாமுண்டீஸ்வரியும் கார்த்தியும் காரில் சென்று கொண்டிருக்கும் போது சாமுண்டேஸ்வரி காரை சிவனாண்டி வீட்டிற்கு விட சொல்கிறாள். அடுத்து சிவனாண்டி வீட்டிற்கு சென்று என் பொண்ணுக்கு நிச்சயம்.. நீயும் உங்க அம்மாவும் வந்துடுங்க என அழைப்பு கொடுத்து வெறுப்பேற்றுகிறாள். இங்கே அபிராமி கார்த்தியின் ஜாதகத்தை காட்டி ஜோதிடர் ஒருவரிடம் பலன் கேட்க அவர் இந்த ஜாதகக்காரரோட முதல் மனைவி இறந்து இருப்பாங்க.. கூடிய சீக்கிரம் சொந்தத்திலேயே ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிப்பார் என்று சொல்ல அதை கேட்டு அது ரேவதியாக தான் இருக்கும் என சந்தோசப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











