ரேவதியின் காதலன் மீது கார்த்திக்கு வரும் சந்தேகம்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்.!
சென்னை: ரேவதி, நான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்றால், அதற்கு ஒரு கண்டிஷன் இருக்கு , நான் கல்யாணம் பண்ணிக்கணும்னா நீங்க அப்பாவை அவங்க, அப்பா அம்மாவை பார்க்க விடணும் என்று சொல்கிறாள். இதைக்கேட்டு அதிர்ச்சியாகும் சாமுண்டேஸ்வரி அதெல்லாம் முடியவே முடியாது. வாய்ப்பே இல்லை என்று சொல்ல கோபத்துடன் கத்துகிறாள்.
ஒரு கட்டத்தில் சாமுண்டீஸ்வரி ரேவதியின் கண்டிஷனுக்கு ஓகே சொல்கிறாள். ஆனால் உன் கல்யாணம் முடிந்த பிறகு தான் உன் அப்பாவை அனுப்பி வைப்பேன் என்று சொல்ல ரேவதி சம்மதம் சொல்கிறாள். உடனே நிச்சயத்துக்கான ஏற்பாடுகளை சாமுண்டேஸ்வரி செய்ய சொல்கிறாள்.

இன்றைய எபிசோடில், ரேவதி யாரோ ஒருவருக்கு போன் செய்து, அம்மா கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்க. நம்ம கல்யாணம் சீக்கிரம் நடக்கப்போகிறது. அம்மா நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. நீங்களும் இந்த விஷயத்தை வீட்டில் சொல்லிவிடுங்க, கல்யாணத்துக்கான வேலைகளை பாருங்க என்று சொல்லி ஃபோனை வைக்கிறாள்.
கார்த்திகை தீபம்: இதையடுத்து, பரமேஸ்வரி பாட்டி கார்த்தியின் ஜாதகத்தை கொடுத்து ஜோதிடர் ஒருவரிடம் அவனுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கேட்க கார்த்திக் முதல் மனைவியை இழந்தவர் என்ற விஷயத்தை சரியாக சொல்லும் ஜோசியர் கூறிய விரைவில் ரத்த பந்தத்தில் உள்ள ஒரு பெண்ணுடன் இவருக்கு கல்யாணம் நடக்கும். அவனுக்கு அந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலும், அது இறைவன் போட்ட முடிச்சு நிச்சயம் கல்யாணம் நடக்கும் என்று சொல்ல பரமேஸ்வரி பாட்டி அதை கேட்டு சந்தோஷம் அடைகிறாள்.
நடக்கப்போவது என்ன: மறுபக்கம் ரேவதி கார்த்தியுடன் கிளம்பி தன்னுடைய காதலன் மகேசை பார்க்க வருகிறாள். வரும் வழியில் கார்த்தியிடம், தனது காதலன் மகேஷின் குடும்பம் அம்மாவால் பாதிக்கப்பட்ட கதையை சொல்லுகிறாள். சண்முகம் என்பவர் எங்க வயல் காட்டில் வேலை செய்து கொண்டு இருந்தார். அவர், திடீரென அவர் இறந்துவிட ஊர் முழுக்க அவரது இறப்புக்கு காரணம் எங்க அம்மா தான் என பேச தொடங்கிட்டாங்க. அதனால நான் அவங்களோட குடும்பத்துக்கு உதவ முடிவெடுத்தேன். அவருடைய மனைவி மாயாவும் தம்பி மகோஷூம் இருக்கிறார்கள். மகேஷ் கல்லூரி படிக்க நான்தான் பணம் கொடுத்து உதவினேன். அதன் பிறகு அவரை எனக்கு பிடித்து போய் காதலிக்க தொடங்கிட்டேன் என்று சொல்கிறாள்.
சந்தேகப்படும் கார்த்திக்: பின் கார்த்திக், ரேவதி இருவரும் சண்முகம் வீட்டிற்கு வர மாயா, இவர்களை வரவேற்று காபி கொடுக்கிறாள். மாயாவின் அருகில் மகேஷ் அப்பாவி போல் நிற்பதை பார்த்த கார்த்திக்கு ஏதோ சந்தேகம் வருகிறது. உடனே மாயா, மகேஷ் யார்கிட்டயும் அதிகம் பேச மாட்டான். அவங்க உண்டு, அவன் வேலை உண்டுன்னு இருக்கிறவன் என சொல்லி கார்த்திக்கிற்கு அறிமுகம் செய்கிறாள். பிறகு கார்த்திக் மகேஷின் போட்டோவை வாங்கிக் கொண்டு வெளியே வருகிறான். பின் ரேவதியிடம் உண்மையாகவே மகேசை உனக்கு புடிச்சு போய் தான் காதலிச்சியா? இல்ல பாவப்பட்டு காதலிச்சியா என கேட்க ரேவதி அதற்கு சரியாக பதில் தெரியவில்லை என சொல்கிறாள்.
சீரியலில் நுழைந்த புதுவில்லன்: கார்த்திக் ரேவதி இருவரும் வீட்டை விட்டு சென்றதும், மாயா திடீரென வாந்தி எடுக்க, அதுவரை பாவமாக நின்று இருந்த மகேஷ். தன்னுடைய கெட்டப்பை அப்படியே முழுசாக மாற்றி வில்ல தனத்தோடு பார்க்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











