ஆபத்தில் இருக்கும் அப்பா.. சிதம்பரம் போட்ட பிளான். . கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் பல்லவி அபிராமியின் வீட்டில் தங்கினார்.
மேலும், பல்லவியை வீட்டில் நடக்கும் பூஜையில் பாடவேண்டும் என்று கார்த்திக் சொல்கிறார். இதையடுத்து அதற்கான ஏற்பாடு நடந்து வரும் நிலையில், பல்லவி பாடும் போது கார்த்திக் வீட்டில் இருக்க கூடாது என சிதம்பரத்துக்கு தகவல் கொடுக்கிறாள் ஐஸ்வர்யா.

தற்போது இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
இன்றைய எபிசோட்: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், அருணாச்சலம் சர்வீஸ் விட்டிருந்த காரை எடுக்க செல்ல, யாரோ ஒருவர் அருணாச்சலத்தின் போனை கொள்ளையடித்து கொண்டு ஓடிவிட, அருணாச்சலம் அந்த மூன்று பேரையும் துரத்தி செல்கின்றார்.
அப்பாவுக்கு ஆபத்து: போனை திருடிக்கொண்டு ஓடிய நகர்கள் ஒரு இடத்தில போய் ஒளிந்துக் கொண்டு, கார்த்திக்கு போன் செய்து இங்க ஒரு பெரியவர் மயக்கம் போட்டு விழுந்து கிடக்குறார், அவருடைய போனில் உங்க நம்பர் இருந்ததாக சொல்கிறான். இதனால், பதற்றம் அடையும் கார்த்திக் அப்பாவுக்கு ஆபத்து என நினைத்து அங்கிருந்து கிளம்புகிறான்.
எல்லாமே பிளான்: வீட்டில் பூஜைக்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து கொண்டிருக்க அபிராமி கார்த்திக் குறித்து விசாரிக்க ஐஸ்வர்யா வேலை விஷயமாக வெளியில் போய் இருப்பார் என்று சமாளிக்கிறாள். அப்போது, அருண், கார்த்திக்கிற்கு போன் போட லைன் கிடைக்கிறது. எங்கே இருக்க என்று விசாரிக்க கார்த்திக் விஷயத்தை சொல்லாமல் முக்கியமான வேலையாக வெளியில் இருக்கிறேன் என்று சொல்கிறான். மேலும் பூஜையை ஆரம்பிங்க நான் வரேன் என்று போனை வைத்து விடுகிறான்.
ஆர்டர் போட்ட அபிராமி: அடுத்து வீட்டில் பூஜை தொடங்க தீபா இவ பாடுவதை ரெக்கார்ட் செய்து கார்திக்கிடம் கொடுக்கலாம் என்று யோசித்து மீனாட்சியிடம் சொல்ல அவள் நான் போய் போனை எடுத்து வரேன் என்று போகும் போது, குறுக்கிடும் அபிராமி எங்க போறீங்க? பூஜை முடியும் வரை யாரும் எங்கயும் போக கூடாது என தடுத்து நிறுத்தி விடுகிறாள்.
குழம்பிய கார்த்திக்: மறுபக்கம் போனை திருடி சென்றவன் அதை திரும்பவும் அருணாச்சலம் அருகே வீசி விட்டு செல்ல அவர் கார்த்திக்கிற்கு போன் செய்து எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல, நான் பாதுகாப்பாக தான் இருக்கேன் என சொல்ல கார்த்திக் குழப்பம் அடைகிறான். இந்த நேரம் பார்த்து சிதம்பரம் போன் செய்து அருணாச்சலம் பற்றி விசாரிக்க இவை அனைத்தும் இவருடைய வேலை தான் என்பது தெரிய வருகிறது.
பிறகு கார்த்திக் வீட்டிற்குள் நுழைய பல்லவி பாடி முடிக்க அபிராமி பாட்டு நல்லா இருந்ததாக பாராட்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











