அபார்ஷன் செய்யும் மாயா.. சொத்துக்கு ஆசைப்படும் ரேவதியின் காதலன்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ரேவதி கார்த்திக்குடன் கிளம்பி தன்னுடைய காதலன் மகேஷை பார்க்க வருகிறாள். வரும் வழியில் கார்த்திக்கிடம், தனது காதலன் மகேஷின் குடும்பம் அம்மாவால் பாதிக்கப்பட்ட கதையை சொல்லுகிறாள். மகேஷ் கல்லூரி படிக்க நான்தான் பணம் கொடுத்து உதவினேன். அதன் பிறகு அவரை எனக்கு பிடித்து போய் காதலிக்க தொடங்கிட்டேன் என்று சொல்கிறாள்.

கார்த்திக், ரேவதி இருவரும் சண்முகம் வீட்டிற்கு வர மகேஷின் அண்ணி மாயா, இவர்களை வரவேற்று காபி கொடுக்கிறாள். மாயாவின் அருகில் மகேஷ் அப்பாவி போல் நிற்பதை பார்த்த கார்த்திக்கிற்கு ஏதோ சந்தேகம் வருகிறது. உடனே மாயா, மகேஷ் யார்கிட்டயும் அதிகம் பேச மாட்டான். அவன் உண்டு, அவன் வேலை உண்டுன்னு இருக்கிறவன் என சொல்லி கார்த்திக்கிற்கு அறிமுகம் செய்கிறாள். இதையடுத்து அனைவரும் கார்த்திக், மகேஷின் போட்டோவை எடுத்துக்கொண்டு வெளியில் கிளம்ப, மாயா வாந்தி எடுக்க அப்பாவி போல் இருந்த மகேஷ் தனது கெட்டப்பை களைத்து வில்லன் போல் மாறி என்ன கர்ப்பமா என்று சைகையில் கேட்க மாயாவும் ஆமாம் என்று சொல்கிறாள்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இதையடுத்து இன்றைய எபிசோடில், மகேஷ், மாயா இருவரும் ஹாஸ்பிடல் வர, அதில் மாயாவை செக்கப் செய்த டாக்டர் இவங்களுக்கு இதுவே வேலையா போச்சு.. அடிக்கடி அபார்ஷன் பண்ணுறது உங்க ஹெல்த்துக்கு நல்லது இல்ல, நான் ஏற்கனவே உங்களுக்கு வார்னிங் கொடுத்து அனுப்பி வைத்தேன். மறுபடியும், அபார்ஷன் பண்ண சொல்லி வந்து நின்னா என்ன அர்த்தம் என்று சத்தம் போட, மகேஷ் இந்த முறை மட்டும் பண்ணுங்க மேடம், இனிமேல் அப்படி நடக்காமல் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்கிறான். ரேவதியின் காதலன் மகேஷ், மாயாவை அண்ணி என்று சொல்லிக்கொண்டு பொய் நாடகம் ஆடுகிறான் என்பது தெரியவருகிறது.

காதலுக்கு சம்மதித்த சாமுண்டீஸ்வரி: மறுபக்கம் சாமுண்டீஸ்வரி ப்ரோக்கரை வர வைத்து மாப்பிள்ளை போட்டோக்களை பார்க்க கார்த்திக் யாருமே நல்லா இல்ல.. அவங்க எவ்வளவு அழகா இருக்காங்க.. அவங்களுக்கு ஏத்த மாதிரி மாப்பிள்ளை இருக்க வேண்டாமா என்று சொல்கிறான். அடுத்து சாமுண்டீஸ்வரி வீட்டோட மாப்பிள்ளையா இருக்கணும்.. நல்ல அஸ்தஸ்துல இருக்க குடும்பமாகவும் இருக்கணும் என்று கண்டிஷன் போடுகிறாள். இதையடுத்து, மகேஷின் போட்டோவை அந்த ப்ரோக்கரிடம் கொடுக்க, அந்த போட்டோவைப் பார்த்த ரேவதி எனக்கு இந்த மாப்பிள்ளை பிடித்து இருக்கு என்று சொல்ல, சாமுண்டீஸ்வரியும் போட்டோவை பார்த்துவிட்டு, ப்ரோக்கரிடம் இவங்க வீட்டில் இருந்து வரசொல் என்று சொல்கிறாள்.

சொத்துக்கு ஆசைப்படும் காதலன்: இதையடுத்து, ரேவதி தனது காதலன் மகேஷுக்கு போன் போட்டு, அம்மா கல்யாணத்திற்கு ஓகே சொல்லிட்டாங்க நீ அண்ணியை அழைத்துக்கொண்டு வா என்று சொல்ல, மகேஷ் சந்தோஷப்படுகிறான். மேலும், மாயாவிடம் இந்த விஷயத்தை சொல்ல, மாயா நீ இப்படியே அப்பாவி போலவே நடிக்கணும்.. அப்போது தான் அந்த வீட்டு சொத்தை அடிக்க முடியும் என்று மகேஷுக்கு ஆர்டர் போடுகிறாள். அடுத்து மகேஷ் ரேவதிக்கு போன் செய்து அண்ணி உங்களை பார்க்கணும்னு சொல்றாங்க என்று சொல்லி போனை வைக்கிறான்.

இதை தொடர்ந்து பரமேஸ்வரி பாட்டி முருகன் போட்டோ முன்னாடி உட்கார்ந்து கார்த்திக்கின் வாழ்க்கையை பற்றி பேசி வருத்தப்படுகிறாள். எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு வர வேண்டும் என்று வேண்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X