எல்லாம் முருகனின் திருவிளையாடல்? ரேவதி திருமணம் நடக்குமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: மாயாவை செக் அப் செய்யும் மருத்துவர், மாயா கர்ப்பமாக இருப்பது தெரிந்து கோபப்படுகிறாள். மேலும், அடிக்கடி அபார்ஷன் பண்ணுறது உங்க ஹெல்த்துக்கு நல்லது இல்ல, நான் ஏற்கனவே உங்களுக்கு வார்னிங் கொடுத்து அனுப்பி வைத்தேன். மறுபடியும், அபார்ஷன் பண்ண சொல்லி வந்து நின்னா என்ன அர்த்தம் என்று சத்தம் போடுகிறார். ரேவதியின் காதலன் மகேஷ், மாயாவை அண்ணி என்று சொல்லிக்கொண்டு பொய் நாடகம் ஆடுகிறான் என்பது தெரியவருகிறது.

ரேவதி தனது காதலன் மகேஷூக்கு போன் போட்டு, அம்மா கல்யாணத்திற்கு ஓகே சொல்லிட்டாங்க நீ அண்ணியை அழைத்துக்கொண்டு வா என்று சொல்ல, மகேஷ் சந்தோஷப்படுகிறான். மேலும், மாயாவிடம் இந்த விஷயத்தை சொல்ல, மாயா நீ இப்படியே அப்பாவி போலவே நடிக்கணும்.. அப்போது தான் அந்த வீட்டு சொத்தை அடிக்க முடியும் என்கிறார். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

zee tamil karthigai deepam

இன்றைய எபிசோடில்: மகேஷ் மற்றும் மாயா என இருவரும் சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு வர வீட்டை பார்த்து வாயை பிளக்கின்றனர். மாயா மகேஷிடம் இதுதான் நீ வாழ போற வீடு.. நல்லா பாத்து ரசிச்சிக்க ஆனால் அதை வெளியில் காட்டாதே.. இப்போ இருக்கிற மாதிரியே எப்பவும் அப்பாவி மாதிரியே முகத்தை வச்சுக்கோ என சொல்லிக் கொடுக்கிறாள்.

சந்தேகப்படும் கார்த்திக்: அடுத்ததாக சாமுண்டீஸ்வரி குடும்பத்தினர் இவர்களை வரவேற்று வீட்டுக்குள் உட்கார வைக்கின்றனர். சாமுண்டீஸ்வரி மகேஷ் வீட்டோட மாப்பிள்ளை ஆக வேண்டும் என்பது குறித்த கண்டிஷைனை சொல்ல, மாயா சம்மதம் சொல்கிறாள். அடுத்து மாயாவின் கணவர் குறித்து விசாரிக்க அவர் உயிரோடு இல்லை என்று சொல்ல பெயரைக் கேட்டதும் சாமுண்டீஸ்வரி எங்க செங்கல் சூளையில் வேலை செய்தவரா என்று கேட்க மாயா இல்லை என்று சொல்ல கார்த்திக் ஏன் பொய் சொல்கிறார்கள் என சந்தேகமடைகிறான். பிறகு கார்த்திக் மாயாவை தனியாக கூப்பிட்டு ஏன் பொய் சொன்னீங்க என்று விசாரிக்க உண்மை தெரிஞ்சு இந்த கல்யாணம் வேண்டாம்னு சாமுண்டீஸ்வரி சொல்லி விட கூடாது என்பதற்காக தான் அப்படி சொன்னதாக சொல்லி சமாளிக்கிறாள்.

கடுப்பேத்தும் சாமுண்டீஸ்வரி: அடுத்து சாமுண்டீஸ்வரி கார்த்தியுடன் சிவனாண்டி வீட்டுக்கு வந்து என் பொண்ணுக்கு நிச்சயதார்த்தம் வச்சிருக்கேன். வந்து வயிறு நிறைய சாப்பிட்டு போங்க என அவனை வெறுப்பேற்றுகிறாள். நிச்சயதார்த்தத்துக்கு கேட்டரிங் சர்வீஸ் எல்லாம் பெருசா பயங்கரமா இருக்கணும். அதற்கான வேலை எல்லாம் நீ கவனிச்சுக்கோ என கார்த்திக்கு ஆர்டர் போடுகிறாள்.

எல்லாம் முருகனின் திருவிளையாடல்: மறுபக்கம் பரமேஸ்வரி பாட்டி தூங்கிக் கொண்டிருக்க குட்டி முருகன் அவளது கனவில் வந்து கோவிலுக்கு வந்து என்னை அந்த அதட்டு அதட்டுற என கேள்வி கேட்க பரமேஸ்வரி பாட்டி பின்ன என்ன முருகா ரேவதிக்கும் கார்த்திக்கும் கல்யாணம் ஆகும்னு நான் ஆசையோட காத்துட்டு இருந்தேன் ஆனால், ரேவதிக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கு என்று சொல்கிறாள்.

முருகன் அதெல்லாம் என்னுடைய திருவிளையாடல் இல்லனா, என்னை நீ ஞாபகம் வச்சுப்பியா? நடக்கிறது எல்லாம் பொறுத்திருந்து பாரு கடைசில கார்த்திக்கும் ரேவதிக்கும் தான் கல்யாணம் நடக்கும் என்று சொல்ல பரமேஸ்வரி பாட்டி அதைக் கேட்டு சந்தோஷப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X