வெளிவந்த உண்மை.. அடுத்து நடக்கப் போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய ஐஸ்வர்யா, பல்லவியை ஏதாவது சில்மிஷம் செய்யலாம் என்று வீட்டில் இருக்கும் அனைவருக்கும் காபி போடசொல்கிறான்.

இதைப்பார்த்து டென்ஷனான தீபா, பாட வந்த நீ அந்த வேலையை மட்டும் பார்த்திட்டு கிளம்பு என சொல்கிறாள். மேலும், கோபமாக கார்த்திக் ரூமுக்கு போய் பல்லவி எப்போ போவா என்று கேட்டு செல்லமாக சண்டை போடுகிறாள்.

இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்

zee tamil television Karthigai Deepam serial December 16th full episode

கார்த்திகை தீபம்: இதையடுத்து, இன்றைய எபிசோடில், ரூபஸ்ரீ பல்லவிக்கு போன் செய்து என்ன நடக்குது என்னாச்சு என்று விசாரிக்கும் போது பல்லவி இங்கே நடக்கும் விஷயங்களை சொல்ல அவள் சரி போற வரைக்கும் போகட்டும் பார்த்துக்கலாம் என்று சொல்லி போனை துண்டிக்கிறார். இதைப்பார்த்த மீனாட்சி, ஏதோ தப்பா இருக்கே என்று சந்தேகமடைகிறாள். அதே நேரம் பல்லவியும் மீனாட்சியை பார்த்து விட இவங்களுக்கு உண்மை தெரிந்து விட்டதோ என்று பதறுகிறாள்.

மடக்கிய போலீஸ்: அடுத்து மீனாட்சி கார்த்திக்கிற்கு தெரிந்த ஒரு போலீசுக்கு போன் செய்து பல்லவி பற்றி சொல்லி உதவி கேட்கிறாள். அடுத்து மறுநாள் ரெக்கார்டிங்கிற்காக பல்லவி ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும் போது மீனாட்சி பேசிய போலீஸ் ஆட்டோவை நிறுத்தி நீங்க யார்? என்று விசாரிக்க பல்லவி என்று பெயரை சொல்ல அடையாள அட்டையை காட்ட சொல்ல பல்லவி அதிர்ச்சி அடைகிறாள். போலீஸ் தொடர்ந்து அவளிடம் ஐடி கார்ட் காட்டினால் தான் விட முடியும் என்று சொல்லி கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து அங்கு வரும் கார்த்திக் எனக்கு தெரிந்த பொண்ணு தான் என்று சொல்லி பல்லவியை அழைத்து வருகிறான்.

கோயிலில் தீபா: ரெக்கார்ட்டிங்கிற்கு எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருக்க பல்லவியை பாட தயாராக சொல்ல அவள் எப்பவும் கோவிலுக்கு போயிட்டு வந்து தான் பாடுவேன், கோவிலுக்கு மட்டும் போய்ட்டு வந்துடுறேன் என்று அனுமதி கேட்க கார்த்திக் வேறு வழியில்லாமல் சீக்கிரம் வந்துடுங்க என்று அனுப்பி வைக்க தீபாவும் கூட செல்கிறாள். கோவிலில் தீபா இந்த ரெக்கார்டிங் நல்லபடியாக நடக்கணும் என்று வேண்ட பல்லவி நான் மாட்டிக்க கூடாது என்று வேண்டுகிறாள்.

zee tamil television Karthigai Deepam serial December 16th full episode

உண்மையை கண்டுபிடித்த கார்த்திக்: பிறகு தீபா இது கார்த்திக் சாருக்கு முக்கியமான விஷயம், நல்லா பாடணும் என்று சொல்லி அழைத்து வர மீண்டும் பல்லவி தொண்டை சரியில்லை கொஞ்சம் நேரம் கழித்து பாடுவதாக நேரத்தை கழிக்கிறாள். பிறகு கார்த்திக் திரும்பவும் போய் பாடலாமா என்று கேட்க ஓகே சொல்லி பாட ஆரம்பிக்கிறாள்.

கார்த்தி இந்த குரலை உன்னிப்பாக கேட்க இது அவன் கேட்ட ஒரிஜினல் குரல் இல்லை என்பதை கண்டுபித்து ரெக்கார்டிங்கை நிறுத்தி யார் நீ என்று விசாரிக்க அவள் நான் பல்லவி கிடையாது, ரூபாஸ்ரீ தான் பாடினால் பணம் கிடைக்கும் என அனுப்பி வைத்ததாக சொல்ல கார்த்திக் அவளை திட்டி அனுப்புகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X