அண்ணியிடம் சில்மிஷம் செய்யும் மகேஷ்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: பரமேஸ்வரி பாட்டி தூங்கிக் கொண்டிருக்க குட்டி முருகன் அவளது கனவில் வந்து கோவிலுக்கு வந்து என்னை அதட்டி விட்டு, கேள்வி கேட்க பரமேஸ்வரி பாட்டி பின்ன என்ன முருகா ரேவதிக்கும் கார்த்திக்கிற்கும் கல்யாணம் ஆகும்னு நான் ஆசையோட காத்துட்டு இருந்தேன். ஆனால், ரேவதிக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கு என்று சொல்கிறாள்.

முருகன் அதெல்லாம் என்னுடைய திருவிளையாடல் இல்லனா, என்னை நீ ஞாபகம் வச்சுப்பியா? நடக்கிறது எல்லாம் பொறுத்திருந்து பாரு கடைசில கார்த்திக்கிற்கும் ரேவதிக்கும் தான் கல்யாணம் நடக்கும் என்று சொல்ல பரமேஸ்வரி பாட்டி அதைக் கேட்டு சந்தோஷப்படுகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றைய சீரியலில், சாமுண்டீஸ்வரி நிச்சயத்திற்கு புடவை எடுக்க செல்கின்றனர். அப்போது ரேவதிக்காக ஆளாளுக்கு ஒவ்வொரு புடவையை தேர்வு செய்து கொண்டு இருக்கின்றனர். அப்போது ரேவதி மஞ்சள் நிறத்தில் புடவை எடுக்க, அதைப்பார்த்த கார்த்திக் இது என்ன கலர், உங்களின் அழகுக்கு இந்த புடவை நல்லாவே இல்லை என்று சொல்லி சிவப்பு நிறத்தில் புடவை எடுத்து கொடுக்கிறாள்.

அதாவது, யாரடி நீ மோகினி படத்தில் தனுஷ், நயன்தாராவிற்கு புடவை எடுத்து கொடுப்பது போல இருந்தது. கார்த்திக் எடுத்து கொடுத்த புடவையை கட்டி வந்த ரேவதி, அப்படியே நயன்தாரா போல இருப்பதாக அனைவரும் சொல்ல, மற்றவர்களும், கார்த்திக் நீயே எங்களுக்கு புடவை எடுத்து கொடு என்று கேட்க, அனைவருக்கும் கார்த்திக்கே புடவை எடுத்து கொடுக்கிறான்.

மோதிரக்கடையில்: புடவை எடுத்து முடித்ததும் மொத்த பேரும் கிளம்பி நகை எடுக்க நகை கடைக்கு வருகின்றனர். மோதிரம் செலக்ட் செய்யும் போது கார்த்திக் ஜோடியாக (Couple) ரிங் எடுக்கலாம் என்று ஐடியா கொடுக்கிறான். இதை எல்லாத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த ரேவதி, இந்த விஷயம் எல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும் என்று கேட்க, டிரைவராக இருந்தால், இந்த விஷயம் எல்லாம் தெரியக்கூடாதா.. என்று பதில் அளிக்கிறான். இதையடுத்து, கார்த்திக் சொன்னது போல, கபுள் ரிங்கை தேர்வு செய்கின்றனர். மாப்பிள்ளை மகேஷின் அளவு தெரியாததால் கார்த்திக்கின் விரல் அளவை வைத்து ரிங்கை எடுக்கின்றனர்.

அவ சந்தோஷமா இருக்கக்கூடாது: மறுபக்கம் சந்திரகலா. சிவனாண்டியை சந்தித்து என் அக்கா சந்தோசமாக இருக்கிறாள். அவள் சந்தோஷமாக இருப்பதை பார்ப்பதற்கே ஆத்திரமாக இருக்கு. அவள் சந்தோஷமாவே இருக்க கூடாது.. இந்த நிச்சயம் நல்லபடியா நடக்க கூடாது என்று சொல்கிறாள். இதைத்தொடர்ந்து சிவனாண்டி, சந்திரகலாவிடம், உனக்கு ஏன் என்னை பிடிக்கும் என்று கேட்க சந்திரகலா எனக்கு, உங்களை ரொம்ப பிடிக்கும். அதனால் தான் என் அக்காவை பழி வாங்கணும்னு நினைக்கிறேன் என்று சொல்கிறாள்.

அண்ணியிடம் சில்மிஷம் செய்யும் மகேஷ்: அடுத்து ரேவதி மகேஷ்க்கு போன் செய்து கல்யாண வேலைகள் நல்லபடியாக சென்று கொண்டிருப்பதாக சொல்ல மகேஷ் அண்ணி மாயாவிடம் சிலிமிஷம் செய்து கொண்டே ரேவதியிடம் அப்பாவி போல் அம்மா அம்மா என்று சொல்லி பேசுகிறான். ரேவதி நமக்கு கல்யாணம் ஆக போகுது.. இன்னும் எதுக்கு இப்படி பேசுறீங்க? பேரை சொல்லியே கூப்பிடுங்க என்று சொல்ல மகேஷ் சரிங்க ரேவதி என்று சொல்லி போனை வைக்கிறான்.

பிறகு இங்கே மாயா இனிமே தான் நீ உஷாரா இருக்கனும்.. நம்மள பத்தி வெளியே ஏதாவது தெரிந்தா எல்லாம் கெட்டு போய்டும் என்று எச்சரிக்கிறாள், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X