வசமா சிக்கிய பல்லவி.. குழப்பத்தில் கார்த்திக்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், பல்லவியின் நடவடிக்கையில் சந்தேகப்பட்ட மீனாட்சி, இவள் யார் என்பதை தெரிந்து கொள்ள ஒரு போலீசுக்கு போன் செய்து பல்லவி பற்றி விசாரிக்க சொல்கிறாள்.

இதையடுத்து, ரெக்கார்டிங்கிற்காக பல்லவி ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும் போது, போலீஸ்காரர் ஒருவர் ஆட்டோவை நிறுத்தி நீங்க யார்? உங்க ஐடியை காட்டுங்க என்று விசாரித்துக்கொண்டு இருக்கிறார்.

அப்போது வரும் கார்த்திக் இவங்க எனக்கு தெரிந்தவர்கள் தான் என்று சொல்லி ஸ்டியோவிற்கு அழைத்து சொல்கிறார். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial December 18th full episode

பதற்றத்தில் பல்லவி: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், அதாவது, ரெக்கார்ட்டிங்கிற்கு எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருக்க பல்லவியை பாட தயாராக சொல்கிறாள். உடனே அவள், நான் எப்பவும் கோவிலுக்கு போயிட்டு வந்து தான் பாடுவேன், கோவிலுக்கு மட்டும் போய்ட்டு வந்துடுறேன் என்று கார்த்திக்கிடம் சொல்லிவிட்டு கோவிலுக்கு செல்கிறான். கார்த்தியும் வேறு வழியில்லாமல் சீக்கிரம் வந்துடுங்க என்று அனுப்பி வைக்க தீபாவும் கூட செல்கிறாள். கோவிலில் தீபா இந்த ரெக்கார்டிங் நல்லபடியாக நடக்கணும் என்று வேண்ட பல்லவி நான் மாட்டிக்க கூடாது என்று வேண்டுகிறாள்.

நல்ல பாடணும்: இதன்பிறகு தீபா, இது கார்த்திக் சாருக்கு முக்கியமான விஷயம், நல்லா பாடணும் என்று பல்லவியிடம் சொல்லி அழைத்து வர, பல்லவி மீண்டும் தொண்டை சரியில்லை கொஞ்சம் நேரம் கழித்து பாடுவதாக நேரத்தை கடத்துகிறாள். பிறகு கார்த்திக் திரும்பவும் போய் பாடலாமா என்று கேட்க ஓகே சொல்லி பாட ஆரம்பிக்க கார்த்தி இந்த குரலை உன்னிப்பாக கேட்க இது அவன் கேட்ட ஒரிஜினல் குரல் என்பதை கண்டுபிடித்து ரெக்கார்டிங்கை விடுகிறான்.

வசமாக மாட்டிய பல்லவி: யார் நீ என்று விசாரிக்க அவள் நான் பல்லவி கிடையாது, ரூபாஸ்ரீ தான் பாடினால் பணம் கிடைக்கும் என அனுப்பி வைத்ததாக சொல்ல கார்த்திக் அவளை திட்டி அனுப்புகிறான். என்ன செய்வது என்று தெரியாமல் கோபமாக வெளியே கிளம்ப தீபா பின்தொடர்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X