ஏமாற்றிய ரூபஸ்ரீ.. சிதம்பரத்துக்கு சவால் விட்ட கார்த்திக்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், ஆல்பம் ரெகார்டிங்கிற்கு முன்பு கோவிலுக்கு போகும் தீபா இந்த ஆல்பம் நன்றாக வரவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறான்.

இதையடுத்து பல்லவி பாட, இது பல்லவியின் குரல் இல்லை என்பதை கார்த்திக் கண்டுபிடித்துவிடுகிறான். அதன் பின் பல்லவியை யார் நீ என்று விசாரிக்க அவள் நான் பல்லவி கிடையாது, ரூபஸ்ரீ தான் அனுப்பியதாக சொல்ல கார்த்திக் என்ன செய்வது என்று வேதனைப்படுகிறான்.

இதையடுத்து கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial December 19th full episode

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், உண்மையான பல்லவி இல்லை என்று ஸ்டுடியோவில் இருந்து கோபமாக வெளியே கிளம்பும் கார்த்திக் நேராக ரூபஸ்ரீ வீட்டுக்கு வந்து ஆத்திரத்தில் அவளை கடுமையாக திட்டுகிறான். இந்த ஆல்பம் வெளியிடுவதில் தான் என்னோட கேரியரே இருக்கு, இதுல உன்னால எப்படி பொய் சொல்ல முடிந்தது என்று சத்தம் போடுகிறான். அப்போது அங்கிருக்கும் கோகிலா, இது எங்களோட பிசினஸ் நாங்க எதுக்கு பல்லவி யார் என்று உங்களுக்கு சொல்ல வேண்டும் என்று எதிர்த்து பேசி வாக்குவாதம் செய்ய இப்போதைக்கு உங்ககிட்ட பேச முடியாது என்று கார்த்திக் அங்கிருந்து கிளம்பி வருகிறான்.

சவால் விடும் கார்த்திக்: அடுத்து என்ன செய்வது, பல்லவி யார் அவரை எப்படி பாட வைப்பது என பல யோசனையில் கார்த்திக் இருக்கும் போது, கார்த்திக்கிற்கு போன் செய்யும் சிதம்பரம் பல்லவி விஷயம் என்னாச்சு என்று கேட்க இதெல்லாம் உங்க வேலை தானா? நிச்சயம் நான் பல்லவியை தேடி கண்டுபிடிப்பேன். உங்ககிட்ட சொன்ன மாதிரி இருபதாம் தேதிக்குள்ள பல்லவி பாடுவா என்று சவால் விட்டு போனை வைக்கிறான்.

வருத்தப்படும் கார்த்திக்: அதனை தொடர்ந்து வீட்டுக்கு வந்த கார்த்திக், அபிராமி உட்பட அனைவரும் வீட்டில் இருக்கும் போது, நம்ம வீட்டுக்கு வந்தது பல்லவியே இல்லை என்ற உண்மையை உடைக்க அபிராமி நல்லா தானே பாடுனா என்று சொல்ல பல்லவி கிட்ட ஒரு தயக்கம் இருக்கும் அந்த தயக்கம் இவகிட்டையும் இருந்தது அதனால நான் நம்பி ஏமாந்துட்டேன், தப்பு என் மேல தான் என்று கார்த்திக் வருத்தப்பட்டு பேசுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X