மாயா, மகேஷ்க்கு காத்திருந்த அதிர்ச்சி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: பாட்டி முன்னாடி தோன்றும் முருகன் தயக்கம் இல்லாமல் உள்ளே போ பாட்டி.. கூட்டத்தோடு கூட்டமாக உள்ளே போனால் உன்னை யார் கண்டுபிடிக்க போறா? பயப்படாமல் போ என்று சொல்ல பாட்டியும் உள்ளே வந்து விடுகிறாள்.
இதைத்தொடர்ந்து, சிவனாண்டி மண்டபத்திற்குள் வந்து சாமுண்டீஸ்வரியை சந்தித்து என்ன சாமுண்டேஸ்வரி உன் பொண்ணுக்கு நிச்சயதார்த்தம் பண்ண போறியா என்று கேட்க சாமுண்டேஸ்வரி அலங்காரத்தை எல்லாம் பார்த்தியா? எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கு பாரு.. போய் வயிறு நிறைய சாப்பிட்டு போ இந்த மாதிரி சாப்பாட்டை எல்லாம் நீ சாப்பிட்டு கூட இருக்க மாட்ட என்று நக்கலாக பேசுகிறாள். இதையடுத்து, கேக் வெட்ட ஏற்பாடு செய்து ரேவதியை அழைத்து வந்து மாப்பிள்ளை என நினைத்து கார்த்தியையும் மேடைக்கு ஏற்றுகின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், ரேவதியின் தோழிகள் மண்டபத்திற்குள் நுழைகின்றனர். மாப்பிள்ளை யார் என்று தெரியாமல் பாட்டியும், மாப்பிள்ளை யார் என்று கேட்க பாட்டி கார்த்தியை கை காட்ட மாப்பிள்ளை சூப்பரா ஸ்டைலாக இருப்பதாக பேசி கொள்கின்றனர். அடுத்து கேக் வெட்ட ஏற்பாடு செய்து ரேவதியை அழைத்து வந்து மாப்பிள்ளை என நினைத்து கார்த்தியையும் மேடைக்கு ஏற்றுகின்றனர்.
மாயா அதிர்ச்சி: அதாவது, சாமுண்டீஸ்வரி தனது தோழியான டாக்டர் மல்லிகாவுக்கு போன் செய்து என் பொண்ணுக்கு நிச்சயதார்த்தம்னு சொன்னேன்.. கெஸ்ட் எல்லாரும் வந்துட்டாங்க.. நீ மட்டும் இன்னும் வராமல் என்ன பண்ற என்று பேசுகிறாள். இதை தொடர்ந்து மல்லிகா டாக்டர் குழந்தையுடன் மண்டபத்திற்கு வர இதை பார்த்த மாயா அதிர்ச்சி அடைகிறாள். இவங்க அபார்ஷன் பண்ண டாக்டர் ஆச்சே.. இவங்க மட்டும் நம்மள பார்த்தா எல்லா திட்டமும் வேஸ்ட்டா போய்டும் என்று பதறுகிறாள்.
ஹாஸ்பிடல் கிளம்புகிறேன்: அடுத்து சாமுண்டீஸ்வரி கார்த்தியை கூப்பிட்டு மாப்பிள்ளையை அழைத்து வர சொல்கிறாள். ஆனால் மகேஷ் வர மாட்டேன் என்று அடம் பிடிக்க கார்த்திக் வலுக்கட்டாயமாக அழைத்து வருகிறான். டாக்டர் மகேஷை பார்த்து விடுவாரா என்ற பில்டப் காட்சிகள் நகர்கிறது. இந்த சமயத்தில் மாயா அங்கும் இங்கும் ஓடி விளையாடி கொண்டிருந்த மல்லிகாவின் குழந்தை கையை எடுத்து பேனுக்குள் விட குழந்தைக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்ட மல்லிகா குழந்தையை எடுத்து கொண்டு ஹாஸ்பிடல் கிளம்புகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











