வாக்கு கொடுத்த பல்லவி.. மீண்டும் உண்மையை மறைத்த தீபா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், கார்த்திக், சிதம்பரத்திடம் நான் பல்லவியை தேடி கண்டுபிடிப்பேன் என்று சவால் விடுகிறார்.
முக்கியமான இந்த விஷயத்தில் இப்படி ஆகிவிட்டதே என்று கார்த்திக் மிகுந்த வருத்தத்தில் அடுத்ததாக என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறார்.
இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

பல்லவி கொடுத்த வாக்கு: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், கார்த்திக் பல்லவிக்கு போன் செய்ய (பல்லவியாக இருக்கும் தீபா) போனை எடுத்து பல்லவி போல பேசுகிறாள். ஏன் இப்படி பண்ணீங்க என்று கோபத்துடன் கார்த்திக் கேட்கிறார். கார்த்திக் வேதனையுடன் பேசுவதை கேட்டு பதறிப்போன தீபா, நான் எதையும் செய்யவில்லை. அதெல்லாம் ரூபஸ்ரீ வேலை சார் என்கிறாள். உங்க கஷ்டம் எனக்கு நல்ல புரியது, நான் கண்டிப்பா உங்களுக்காக பாடி கொடுக்கிறேன் என்று கார்த்திக்கிற்கு வாக்கு கொடுக்கிறாள். பல்லவின் பேச்சால் மனம் ஆறுதல் அடைந்த கார்த்திக், கோவத்தை குறைத்துக் கொண்டு நீங்க சொன்ன வார்த்தையை காப்பாற்றுவீங்க என்ற நம்பிக்கை இருக்கு என்று கூறிவிட்டு போனை வைக்கிறான்.
உண்மையை சொல்லிவிடு: கார்த்திக்கிடம் வாக்கு கொடுத்ததை நினைத்து, எப்படி பாடுவது என்று யோசிக்க அங்கு மீனாட்சி வருகிறாள். அப்போது, தீபா இதற்கு மேல் இந்த விஷயத்தை மறைத்து வைப்பது எனக்கு சரியாகப்படவில்லை. நீ தான் பல்லவி என்ற உண்மையை சொல்லிவிடு, அப்போதுதான் எல்லா பிரச்சனையும் சரியாகிடும் என்று சொல்ல தீபா தயக்கத்தோடு நிற்கிறாள்.
உண்மையை மறைத்த தீபா: அதனை தொடர்ந்து மறுநாள் ஆபிஸ் வரும் தீபா, கார்த்திக்கிடம் நான் தான் பல்லவி என்ற உண்மையை சொல்லும் முடிவோடு கார்த்திக்கின் ரூமிற்கு செல்கிறாள். அப்போது, அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் பொய் சொன்ன காரணத்தினால் கார்த்திக் அந்த பெண்ணை கடுமையாக திட்டிக்கொண்டு இருக்கிறான். இதைப்பார்த்த தீபா, இந்த சின்ன பொய்க்கே இப்படி கோபப்படுகிறார். நம்ம பொய் சொன்ன விஷயம் தெரிந்தால் என்னவாகுமோ என்ற பயத்தில் சொல்லாமல் மறைத்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











