மாயாவின் கருவை கலைத்த டாக்டர்.. ஆதாரத்தை அழித்த மாயா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ரேவதிக்கு மகேஷூடன் நிச்சயம் நடந்து கொண்டு இருக்க, சாமுண்டீஸ்வரி தனது நெருங்கிய தோழியான டாக்டர் மல்லிகாவுக்கு போன் செய்து என் பொண்ணுக்கு நிச்சயதார்த்தம்னு சொன்னேன்.. கெஸ்ட் எல்லாரும் வந்துட்டாங்க.. நீ மட்டும் இன்னும் வராம என்ன பண்ணிட்டு இருக்க என்று கேட்க, டாக்டர் மல்லிகா அங்கே தான் வந்து கொண்டு இருக்கிறேன் என்று, தனது குழந்தையுடன் மண்டபத்திற்குள் நுழைகிறாள். அந்த டாக்டரைப் பார்த்த மாயா, அதிர்ச்சி அடைகிறாள். இந்த மல்லிகா டாக்டர் தான், மாயாவிற்கு அபார்ஷன் பண்ண டாக்டர் என்பது தெரியவருகிறது.
இப்போ மகேஷை மட்டும் இந்த டாக்டர் பார்த்துவிட்டால், எல்லா திட்டமும் வேஸ்ட்டா போய்டும் என்று பதறுகிறாள். இதைத்தொடர்ந்து, மகேஷை அழைத்து வர சொல்ல, அவன், வர மாட்டேன் என்று அடம் பிடிக்க கார்த்திக் வலுக்கட்டாயமாக அழைத்து வருகிறான். டாக்டர் மகேஷை பார்த்து விடுவாரா என்ற பில்டப் காட்சிகள் நகர்கிறது. விட்டால் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் இருக்கும், மாயா, டாக்டரின் குழந்தையின் கையை எடுத்து பேனுக்குள் விட குழந்தைக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்ட மல்லிகா குழந்தையை எடுத்து கொண்டு ஹாஸ்பிடல் கிளம்புகிறார். இதைத்தொடர்ந்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், குழந்தைக்கு ஹாஸ்பிடலில் ட்ரீட்மெண்ட் கொடுத்ததும் கார்த்திக் குழந்தையிடம் ஏன் பாப்பா பார்த்து இருக்க மாட்டியா என்று கேட்க அந்த குழந்தை அங்கிள் நான் எதுவும் பண்ணல.. நீல கலர் புடவை கட்டிக்கிட்டு இருந்த ஆன்ட்டி தான், என்னை தூக்கிட்டு போய் பேனுக்குள்ள கையை விட்டாங்க என்ற விஷயத்தை சொல்ல கார்த்திக் குழப்பமடைகிறான். யார் இந்த வேலையை செய்து இருப்பார்கள், அதுவும் குழந்தையை இப்படி செய்ய என்ன காரணம் என்று யோசிக்கிறான்.
சிசிடிவி காட்சிகள் அழிப்பு: இதைத்தொடர்ந்து பாப்பாவிடம் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டு, கார்த்திக் மண்டபத்திற்கு வர, மாயா ப்ளு கலர் புடவையில் இருப்பதை பார்த்து, மாயா மீது கார்த்திக், சந்தேகமடைகிறான். கொஞ்ச நேரத்தில் மாயா உள்ளே போய் புடவையை மாற்றி விட கார்த்திக்கின் சந்தேகம் மேலும் அதிகமாகிறது. அடுத்தகட்ட நடவடிக்கையாக உண்மையை கண்டுபிடிக்க சிசிடிவி காட்சிகளை பார்ப்பதற்காக செல்கிறான். இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட மாயா மெயினை ஆப் செய்து கார்த்திக்கை திசை திருப்பி உள்ளே சென்று ஆதாரங்களை தீயிட்டு அழித்து விடுகிறாள். பிறகு கார்த்திக் உள்ளே வந்து பார்க்கையில் எல்லாம் எரிந்து கிடக்க மேலும் கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான்.
குழப்பத்தில் கார்த்திக்: நடக்கும் எல்லா விஷயத்தையும் பார்க்கும் போது, இதுக்கு பின்னாடி ஏதோ ஒரு பெரிய விஷயம் இருக்கும். இதையெல்லாம் யாரோ திட்டம் போட்டு தான் செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்கிறான். இதைத்தொடர்ந்து சாமுண்டீஸ்வரி, மல்லிகா டாக்டருக்கு போன் செய்து குழந்தை எப்படி இருக்கிறாள் என்று விசாரிக்க, அந்த டாக்டர் அவ நல்லா இருக்கா சின்ன காயம் தான் என்று சொல்லிவிட்டு, நீ அங்க நிச்சய வேலையை பாரு, நான் கல்யாணத்திற்கு இரண்டு நாள் முன்னாடியே வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறாள்.
மறுபக்கம், பாட்டி, முருகனிடம் என்ன முருகா நீ கார்த்திக்கிற்கும் ரேவதிக்கும் தான் கல்யாணம் நடக்கும் என்று சொல்லிட்ட ஆனால், இங்கே நிச்சயம் நடக்க போகுதே என்று சொல்ல, முருகன், நீ கவலைப்படாதே கார்த்திக்கிற்கும் ரேவதிக்கும் தான் திருமணம் நடக்கும் பொருத்து இருந்து பார் என்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











