பர்தாவில் பாடிய தீபா.. மீண்டும் ஏமாந்த கார்த்திக்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், தீபா நான் தான் உண்மையான பல்லவி என்பதை சொல்ல வருகிறாள்.

ஆபீஸில் கார்த்திக் பொய் சொன்ன ஒரு பெண்ணிடம் கோபமாக அதை பார்த்த தீபா உண்மைய சொல்லாமல் மறைத்து விடுகிறாள்.

இதையடுத்து, ரெக்கார்டிங் தியேட்டருக்குள் செல்லும் தீபா பாடலை பாட அதைக் கேட்ட கார்த்திக் இதுதான் உண்மையான பல்லவியோட குரல் என இளையராஜாவிடம் சொல்லி சந்தோஷப்படுவது போல, தீபா கனவு கண்டாள். இதையடுத்து இன்றை எபிசோடை பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial December 22nd full episode

பர்தாவில் பாடிய தீபா: இதையடுத்து,கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். பல்லவி பாட்டுப்பாட சம்மதித்ததை அடுத்து அதற்கான அனைத்து வேலைகளையும் செய்துவிட்டு, அலுவலகத்தில் அனைவரும் பல்லவியின் வருகைக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நேரத்தில் தீபா, அங்கு இருக்கும் அனைவரின் கண்ணிலும் மண்ணை தூவி விட்டு, நைசாக வெளியே சென்று பர்தா அணிந்து தனது முகத்தை மறைத்து கொண்டு பல்லவியாக அலுவலகத்திற்குள் வருகிறாள்.

மகிழ்ச்சியில் கார்த்திக்: கார்த்திக், பல்லவி பாட்டுபாடுவதை கேட்டு விட்டு, இவங்க தான் உண்மையான பல்லவி என்று சந்தோஷப்படுகிறான். ரெக்கார்டிங் முடிந்ததும்,வெளியவந்த தீபாவிடம், நல்லவேளை நீங்க வாக்கு கொடுத்த மாதிரியே வந்து பாடி என் பெயரை காப்பாத்திட்டீங்க ரொம்ப நன்றி சொல்கிறேன். இப்போத்தான் என் மனசு லேசா இருக்கு, இனி அடுத்து என்ன வேலை செய்யணுமே அதை செய்வேன். இனிமேல் மகிழ்ச்சியா பாட்டை ரிலீஸ் செய்வேன் என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறேன்.

சமாளித்த தீபா: இதையடுத்து,பர்தாவுடன் வெளியில் சென்ற பல்லவி, பர்தாவை கழட்டிவிட்டு தீபாவாக வெளியில் வருகிறாள். தீபா வெளியில் இருந்து வருவதைப் பார்த்த கார்த்திக், இங்கே ரெக்கார்டிங் நடக்கும் போது எங்கே போனீங்க என்று கேட்க, என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்த தீபா, ஒருவழியாக எதையோ சொல்லி சமாளித்து விடுகிறாள்.

zee tamil television Karthigai Deepam serial December 22nd full episode

அடுத்து நடப்பது என்ன: மறுபக்கம் கார்த்திக் பல்லவியை வைத்து ரெக்கார்டிங் நடந்த விஷயம் சிதம்பரமும் அபிராமிக்கும் தெரியாததால், இனி அந்த பல்லவி பாடவே வரமாட்டாள் சாதித்து விட்டது போல பேசி மகிழ்ச்சியில் இருவரும் இருக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X