கடவுள் போட்ட முடிச்சு.. கார்த்திக், ரேவதி நிச்சயம் நடக்குமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ரேவதிக்கு நிச்சயதார்த்தம் நடக்கும் நேரத்தில், டாக்டர் மல்லிகாவை பார்த்து பயந்த மாயா, அவளது மகளின் கையை பேனுக்குள் விட்டு காயப்படுத்தியதை அடுத்து, கார்த்திக் குழந்தையிடம் விசாரிக்க, அந்த குழந்தை நீல கலர் புடவை கட்டிக்கிட்டு இருந்த ஆன்ட்டி தான், என்னை தூக்கிட்டு போய் பேனுக்குள்ள கையை விட்டாங்க என்ற விஷயத்தை சொல்ல கார்த்திக் குழப்பமடைகிறான்.

யார் இந்த வேலையை செய்து இருப்பார்கள், அதுவும் குழந்தையை இப்படி செய்ய என்ன காரணம் என்று யோசிக்கிறான். பின் குழந்தை சொன்னது போல, மாயா ப்ளு கலர் புடவையில் இருப்பதை பார்த்து, மாயா மீது கார்த்திக், சந்தேகமடைகிறான். கொஞ்ச நேரத்தில் மாயா உள்ளே போய் புடவையை மாற்றி விட கார்த்தியின் சந்தேகம் மேலும் அதிகமாகிறது. இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: பாட்டி, முருகனிடம் என்ன முருகா நீ கார்த்திக்கும் ரேவதிக்கும் தான் கல்யாணம் நடக்கும் என்று சொல்லிட்ட ஆனால், இங்கே நிச்சயம் நடக்க போகுதே என்று சொல்ல, முருகன், நீ கவலைப்படாதே கார்த்திக்கும் ரேவதிக்கும் தான் திருமணம் நடக்கும் பொருத்து இருந்து பார் என்கிறார். முருகன் சொல்லியபடி பாட்டி நிச்சயதார்த்தம் புடவையை மாற்றி வைத்து விடுகிறாள்.

புடவையை மாற்ற அறைக்கு வரும் ரேவதி நிச்சயதார்த்த புடவை இல்லாததை பார்த்து சந்தேகமடைய, அங்கு இருந்தவர்கள் நிச்சயதார்த்தத்திற்கு நேரமாகிவிட்டதாக, சீக்கிரம் ரெடியாகு என்று சொல்ல, ரேவதியும் வேறுவழியில்லாமல் அந்த புடவையை கட்டிக் கொண்டு மேடைக்கு வருகிறார்.

மாப்பிள்ளை எங்கே போனார்: இந்த நிச்சயதார்த்தம் நடக்கக்கூடாது என திட்டம் போட்டு இருக்கும் சந்திரலேகா, மாப்பிள்ளை உடைமாற்றும் நேரத்தை பார்த்துக் கொண்டு அந்த இடத்திற்கு சென்று மாப்பிளையின் தலையில் அடித்து மாப்பிள்ளையை கடத்தி சென்று விடுகிறாள். மாப்பிள்ளை வர நீண்ட நேரம் ஆகியதால் சாமுண்டீஸ்வரி கார்த்தி இடம் சொல்லி மாப்பிள்ளையை அழைத்து வரும்படி கூற கார்த்தி, மாப்பிள்ளையின் அறையில் சென்று பார்க்கும் போது மாப்பிள்ளை இல்லாததால் அதிர்ச்சி அடைகிறான்.

கார்த்திக் தான் மாப்பிள்ளை: கார்த்திக், சாமுண்டீஸ்வரி இடம் மாப்பிள்ளை காணவில்லை என்று சொல்ல ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். அந்த நேரத்தில் அங்கு அமர்ந்து இருந்த, சிவனாண்டி மிகவும் திமிராக என்ன சாமுண்டீஸ்வரி, மகளுக்கு நிச்சயதார்த்தம் செய்யப் போவதாக சொன்னாயே இப்ப மாப்பிள்ளையே காணமாமே, என்று சொல்ல, கோபத்தின் உச்சத்துக்கு செல்லும் சாமுண்டீஸ்வரி திடீரென, என் மகனின் நிச்சயதார்த்தம் நிச்சயமா நடக்கும் என்னோட மகள் நிச்சயதார்த்தத்தை யாராலுமே தடுத்த நிறுத்த முடியாது என்று சொல்லிவிட்டு, கார்த்தி நீதான் மாப்பிள போய் டிரஸ் மாத்திட்டு வா என்று சொல்லிகிறாள்.

கோவத்தில் ரேவதி: இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரேவதி, அம்மா மகேஷ் எங்கேயும் போயிருக்க மாட்டாரு நிச்சயமா வந்துருவாரு கொஞ்ச நேரம் அவருக்காக காத்து இருக்கலாம் என்று சொல்கிறாள். ஆனால், சாமுண்டீஸ்வரி, இல்ல இதுல ஏதோ ஒரு விஷயம் இருக்கு, எதுக்காகவும் உன் நிச்சயதார்த்தம் நிற்கக்கூடாது. அம்மா உனக்கு எப்பவுமே கெட்டதே சொல்ல மாட்டேன், நான் சொல்றதை கேளு என்று சொல்ல, ரேவதி என்ன செய்வது என்று தெரியாம நிற்கிறாள்.

கார்த்திக் எடுக்கும் முடிவு என்ன: உடனே கார்த்திக், மகேஷ் கிடைச்சுருவாரு எதுக்கு இப்படி ஒரு அவசரமான முடிவு எடுக்குறீங்க என்று சாமுண்டீஸ்வரி பார்த்து கேட்க, நான் அவசரப்படல கார்த்திக், இந்த குடும்பத்திற்கு நீ தான் சரியான பாதுகாவலனாக இருப்ப, இதுவரைக்கும் என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்த. இனி மேலயும் நீ தான் என் குடும்பத்தை பாதுகாக்கணும், நான் முடிவு பண்ணிட்டேன் நீதான் இந்த வீட்டோட மாப்பிள்ளை. உங்க குடும்பத்துக்கு தெரியாம நிச்சயதார்த்தம் நடக்குதுன்னு நினைக்கிறீயா... அதைப்பத்தி கவலைப்படாதே கல்யாணத்தை ஜாம் ஜாமுன்னு உங்க வீட்டுல இருக்கற அனைவரையும் கூப்பிட்டு பண்ணிடலாம் போய் டிரஸ் மாத்திட்டு வா என்று சொல்கிறாள்.

மகிழ்ச்சியில் பாட்டி: இது எல்லாம் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பாட்டி சந்தோஷம் தாங்கல, சாமுண்டீஸ்வரியே இப்படி சொல்லிட்டா இந்த பையன், ஏன் இப்படி மசமசன்னு இருக்கான், போய் துணியை மாட்டிக்கிட்டு வந்தா நிச்சயதார்த்தம் நடக்குமே என்ற மகிழ்ச்சியில் இருக்கிறாள்.இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X