கண்டிஷனுடன் கார்த்தியை சந்தித்த தீபா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக் பல்லவி பாடிய பாடலை யூடியூபில் ரிலீஸ் செய்கிறான்.
அந்த பாடல் படு வைரலாகி செம ட்ரெண்டிங்காகி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு வழியாக சிதம்பரத்துக்கு சவால் விட்டபடி பாடலை ரிலீஸ் செய்தாகி விட்ட மகிழ்ச்சியில் கார்த்தி இருக்கிறார்.
பாடல் பெரிய ஹிட்டானதால் சந்தோசப்பட்ட அபிராமி அந்த பல்லவியை வீட்டிற்கு கூட்டிட்டு வா கிப்ட் கொடுக்கணும் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோட்: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், சிதம்பரத்திடம் விட்ட சவாலில் ஜெயித்த உங்களால் என்னை அவ்வளவு சீக்கிரம் ஜெயித்து வெளியே அனுப்ப முடியாது என்று கூறுகிறான். மறுமக்கள் மீனாட்சி கார்த்திக்கிடம் பல்லவி கோவிலுக்கு வந்து கிப்டை வாங்கிக் கொள்வதாகவும் ஆனால் முகத்தை காட்ட மாட்டேன் என சொன்னதாகவும் சொல்ல கார்த்திக், சரி என்று சம்மதம் தெரிவிக்கிறான்.
முகத்தை மறைக்கும் தீபா: அதன் பிறகு அபிராமி கொடுத்த செயின் உடன் கார்த்திக் கோவிலுக்கு வர தீபா பல்லவியாக முகத்தை மறைந்து நின்று கொண்டு கையை மட்டும் நீட்டி செயினை வாங்கிக் கொள்கிறாள். அப்போது பேசிய கார்த்திக் உங்களுடைய வார்த்தையை நான் மதிக்கிறேன் என்று சொல்லி செயினை கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறான். அதன் பிறகு அங்கிருக்கும் மீனாட்சி, தீபாவிடம் நீ கார்த்திக்கிடம் உண்மையை சொல்லி இருக்கலாம் நிச்சயம் அவர் உன்னை ஏத்துக்கிட்டு இருப்பார். எல்லா பிரச்சனையும் இன்னைக்கே முடிந்து இருக்கும், நல்ல வாய்ப்பை தவறவிட்டுவிட்ட என்கிறாள்.
கார்த்திக்கின் என்ட்ரி: பிறகு வடநாட்டு நிறுவனம் ஒன்று இசை உரிமையை வாங்குவதற்காக ஏலம் ஒன்றை நடத்த சிதம்பரம் விற்பனை எல்லா இசையமைப்பாளர்களும் அந்த நிகழ்ச்சிக்கு வருகின்றனர். சிதம்பரம் வந்ததும் சரி ஆரம்பிக்கலாம் என்று சொல்ல இன்னொரு முக்கியமான நபர் வரனும் அதுக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம் என்று சொல்லிக் கொண்டிருக்க கார்த்திக் என்ட்ரி கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











