மாயா,மகேஷின் விவகாரமான போட்டோ.. நிச்சயம் நடக்குமா..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: மகேஷ் நிச்சயதார்த்த நேரத்தில் காணாமல் போனதை அடுத்து, சாமுண்டீஸ்வரி, கார்த்திக்குடன் நிச்சயம் நடக்கும் என்று சொல்ல ரேவதி அதிர்ச்சி அடைகிறாள். உடனே, மகேஷ், எங்கேயும் போயிருக்க மாட்டாரு நிச்சயமா வந்துருவாரு கொஞ்ச நேரம் அவருக்காக காத்து இருக்கலாம் என்று சொல்கிறாள். ஆனால், சாமுண்டீஸ்வரி, இல்ல இதுல ஏதோ ஒரு விஷயம் இருக்கு, எதுக்காகவும் உன் நிச்சயதார்த்தம் நிற்கக்கூடாது. அம்மா உனக்கு எப்பவுமே கெட்டதே சொல்ல மாட்டேன், நான் சொல்றதை கேளு என்று சொல்ல, ரேவதி என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறாள்.

கார்த்திக்கும், மகேஷ் கிடைச்சுருவாரு எதுக்கு இப்படி ஒரு அவசரமான முடிவு எடுக்குறீங்க என்று சாமுண்டீஸ்வரியை பார்த்து கேட்க, நான் அவசரப்படல கார்த்திக், இந்த குடும்பத்திற்கு நீ தான் சரியான பாதுகாவலனாக இருப்ப, இதுவரைக்கும் என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்த. இனி மேலயும் நீ தான் என் குடும்பத்தை பாதுகாக்கணும், நான் முடிவு பண்ணிட்டேன் நீதான் இந்த வீட்டோட மாப்பிள்ளை என்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், சந்திரலேகாவிடம் மாயா, மகேஷ் இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோ கிடைக்கிறது. அந்த போட்டோவை அவர், தனது கணவரிடம் காட்டி இந்த விஷயம் மட்டும் ரேவதிக்கு தெரிந்தா நிச்சயம் நின்றுவிடும். இது யாருக்குமே தெரியக்கூடாது. நாம நிச்சயம் நடக்கக்கூடாதுனு நினைச்சா அவ, கார்த்திக்கூட நிச்சயம் பண்றா. அவன் மட்டும் அந்த வீட்டோ மாப்பிள்ளையா ஆகிவிட்டான அவ்வளவு தான் என்று சொல்ல, இருவரும் சேர்ந்து வேறு ஒரு திட்டம் போடுகின்றனர்.

நிச்சயம் நடக்குமா: மண்டபத்தில், ரேவதி கார்த்திக்கை கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று சொல்ல, அனைவரும் அவரை சமாதானப்படுத்துகின்றனர். அப்போதும் ரேவதி தனது முடிவில் உறுதியாக இருக்கிறாள். இதையடுத்து, கார்த்திக் ரேவதியை தனியாக அழைத்து சென்று எனக்கு உன் மேல விருப்பம் எல்லாம் இல்லை.. உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சதும் இல்ல என்று சொல்கிறான். ஆனால் அம்மாவோட மானத்தை காப்பாற்ற நமக்கு இப்போ நிச்சயம் நடக்கணும். இந்த நிச்சயம் நடந்து முடியட்டும், மகேஷ்க்கு என்னாச்சு என்று கண்டுபிடித்து நானே உனக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன் என்று வாக்கு கொடுக்கிறான்.

மாயாவுடன் நெருக்கமாக இருக்கும் மகேஷ்: இதையடுத்து மறுபக்கம் சிவனாண்டி மாயாவை தூக்கி சென்று நீ யாரு? உனக்கும் மகேஷுக்கும் இருக்கும் தொடர்பு பற்றி எனக்கு தெரியும் என ஷாக் கொடுக்கிறான். மாயா நீங்க பேசுறத பார்த்தா மகேஷை தூக்கியது நீங்க தான் என்று தெரியுது அவனை விட்டுடுங்க, நீங்க சொல்ற மாதிரியே கேக்குறோம் என்று கெஞ்சுகிறாள். அடுத்து சிவனாண்டி மேலே தண்ணீர் தொட்டிக்குள் அடைத்து வைத்திருக்கும் மகேஷை ரிலீஸ் செய்கிறான். அதோடு நீ யாருனு எனக்கு நல்லாவே தெரியும். நான் சொல்ற மாதிரி செய் என அனுப்பி வைக்கிறான்.

இங்கே கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் மேடைக்கு வந்து நிச்சயதார்த்தத்திற்கு சம்மதம் சொல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X