தீபாவை விலை பேசும் சிதம்பரம்..கார்த்திக்கு காத்திருக்கும் சிக்கல்..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்று, வடநாட்டு நிறுவனம் ஒன்று இசை உரிமையை வாங்குவதற்காக ஏலம் ஒன்று நடக்கிறது. இதில், இதற்கு அனைத்து இசையமைப்பாளர்களும் வருகின்றனர்.
சிதம்பரம் வந்ததும் சரி ஆரம்பிக்கலாம் என்று சொல்ல, கொஞ்சம் இருங்க ஒரு முக்கியமான நபர் வரனும் அதுக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம் என்று சொல்லிக் கொண்டிருக்க கார்த்திக் என்ட்ரி கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

பல்லவி பணம் கொடுத்தா பாடுவாங்க: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், சிதம்பரம் எப்பவும் போல இந்த முறையில் எனக்கு தானே பிசினஸ் கொடுக்கப் போறீங்க என்று சொல்ல வட மாநில கம்பெனி கார்த்திக் வெளியிட்ட பாட்டுக்கு இணையத்தில் மிகப்பெரிய வரவேற்பு கிடைச்சிருக்கு அந்த பல்லவி என்ற பாடகிக்கு ஒரு டிமாண்ட் இருக்கு அதனால பல்லவிக்காக யார் பாடுறாங்களோ அவங்களுக்கு தான் இந்த முறை பிசினஸ் என்று சொல்ல சிதம்பரம் பணம் கொடுத்தா அந்த பல்லவி எனக்கும் பாடி கொடுப்பார் என்று சொல்கிறார்.
திட்டம் போடும் சிதம்பரம்: வடமாநில கம்பெனி பல்லவியிடம் அக்ரிமெண்ட் போட்டுட்டு வங்க, அதன் பிறகு உங்களுக்கு தான் பிசினஸ் தருகிறேன் என்று சொல்லி அனுப்பிவிடுகின்றனர். அதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா சிதம்பரத்தை சந்தித்து அந்த பல்லவி தான் உங்களுக்காக வந்து பாட மாட்டார் என்று சொல்ல எல்லாருக்கும் ஒரு விலை இருக்கு அதை கொடுத்தா பல்லவி கண்டிப்பா எனக்கு பாடி கொடுப்பா என்று பதில் கூறுகிறார்.
அதிர்ச்சி அடைந்த தீபா: அதன் பிறகு சிதம்பரம் தீபாவுக்கு போன் செய்து பேச முதலில் பெரிதாக ரியாக்ட் செய்யாத தீபா சிதம்பரம் ஹாய் பல்லவி என்று சொன்னதும் அதிர்ச்சி அடைகிறாள். பிறகு சிதம்பரம் தீபாவை நேரில் சந்தித்து உங்க அண்ணனுக்கு வேலை கிடையாது உன் தம்பிக்கு ட்ரீட்மென்ட் பாக்கணும் இப்படி பல பிரச்சனையில் நீங்க இருக்கீங்க. இதற்கு எல்லாம், உங்களுக்கு தேவையான பணத்தை நான் தருவேன். நீ எனக்காக பாடி கொடுக்கணும் என்று சொல்ல, அதிர்ச்சி அடைந்த தீபா முடியாது என கூறுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











