கார்த்திக் மீது பழி போட்ட மகேஷ்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: மண்டபத்தில், ரேவதி கார்த்திக்கை கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று சொல்ல, கார்த்திக் ரேவதியை தனியாக அழைத்து சென்று எனக்கு உன் மேல விருப்பம் எல்லாம் இல்லை.. உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சதும் இல்ல என்று சொல்கிறான். ஆனால் அம்மாவோட மானத்தை காப்பாற்ற நமக்கு இப்போ நிச்சயம் நடக்கணும். இந்த நிச்சயம் நடந்து முடியட்டும், மகேஷ்க்கு என்னாச்சு என்று கண்டுபிடித்து நானே உனக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன் என்று வாக்கு கொடுக்கிறான்.

சிவனாண்டி, மாயாவை தூக்கி சென்று நீ யாரு? உனக்கும் மகேஷுக்கும் இருக்கும் தொடர்பு பற்றி எனக்கு தெரியும் என ஷாக் கொடுக்கிறான். நாங்க சொல்லுற மாதிரி நடத்துக்கிட்ட தான் உனக்கு நல்லது என்று சொல்ல, தண்ணீர் தொட்டிக்குள் அடைத்து வைத்திருக்கும் மகேஷை ரிலீஸ் செய்கிறான் இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று தெரிகிறது.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், சிவனாண்டி மகேஷிடம் நீ நேராக மண்டபத்திற்கு போ, அங்கு என்னை நடித்து கடத்தியது கார்த்திக் தான் என்று சொல்லு, அதை அனைவரும் நம்ப வேண்டும் எந்த அளவிற்கு நீ நடிக்கணும். கார்த்திக் எங்களுக்கு நிறைய குடைச்சல் கொடுக்க ஆரம்பித்து விட்டான். அவனை அந்த வீட்ல இருந்து விரட்டணும் அதற்கு இதுதான் சரியான வழி என்று சொல்கிறான். அதைத் தொடர்ந்து மாயா மற்றும் மகேஷ் இருவரும் நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வருகின்றனர்.

சிவனாண்டியின் பிளான்: மண்டபத்தில் கார்த்திக் மற்றும் ரேவதிக்கு நிச்சயதார்த்தம் நடக்கும் நேரத்தில் வந்து மகேஷ் நிறுத்துங்க என்று கத்தி நிச்சயத்தை நிறுத்துகிறான். அப்போது, சாமுண்டீஸ்வரி, மகேசைப் பார்த்து இவ்வளவு நேரம் எங்க போன, கல்யாணத்துல விருப்பம் இல்லை என்றால், சொல்லி இருக்கலாமே என்று சொல்ல, மகேஷ். அய்யோ அப்படி இல்ல, நான் என் அறையில் இருந்த போது, கார்த்திக் என்னை தலையில் அடித்து போட்டுவிட்டார்.நான் மயக்கம் அடைந்துவிட்டேன் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதே நேரத்தில் சந்திரகலா எதுக்கு இப்படி சொல்கிறான் என குழப்பம் அடைகிறாள்.

கார்த்திக்கிற்கு சொத்து மேல ஆசை: அப்போது மாயா, இப்போது தான் கார்த்திக்கின் திட்டமே எனக்கு தெரிகிறது. மகேசை அடித்து இங்கு இருந்து துரத்திவிட்டுவிட்டு, ரேவதியை கார்த்திக் கல்யாணம் பண்ணிக்க பிளான் போட்டு இருக்கான். இவன் நல்லவனே இல்லை, இந்த வீட்டு சொத்து மேல ஆசைப்பட்டு இப்படி ஒரு விஷயத்தை செய்து இருக்கிறான் என்று மாயா ஆவேசமாக பேசுகிறாள். அந்த நேரத்தில் மாயா எதுக்கு இப்படி சொல்றாங்க என்று தெரியாமல் கார்த்திக் குழப்பத்தில் இருக்கிறார்.

உண்மையில் நடந்தது என்ன: அடுத்து சாமுண்டீஸ்வரி மாயா சொன்னதைக் கேட்டு கார்த்திக்கிடம் கோபப்படுகிறாள். ஆனால் ரேவதி கார்த்திக் அப்படி செய்யற ஆள் கிடையாது என அவனுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறாள். இருந்தாலும் சாமுண்டீஸ்வரி கார்த்தியை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறாள். ஆனால் கார்த்திக் தீர விசாரிக்காமல் இப்படி முடிவெடுக்காதீங்க என சொல்வதோடு உண்மையை நிரூபிக்க கால அவகாசம் கேட்க சாமுண்டீஸ்வரி ஒரு மாசம் அவகாசம் கொடுக்கிறாள். ஒரு மாசத்துக்குள் உண்மையை நிரூபிக்க தவறினால் இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என கண்டிஷன் போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X