ரேவதி வாழ்க்கை நாசமா போகணும்.. சிவனாண்டி போடும் பிளான்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: மண்டபத்தில் கார்த்திக் மற்றும் ரேவதிக்கு நிச்சயதார்த்தம் நடக்கும் நேரத்தில் வந்து மகேஷ் நிறுத்துங்க என்று கத்தி நிச்சயத்தை நிறுத்துகிறான். அப்போது, மகேஷ், கார்த்திக் என்னை தலையில் அடித்து போட்டுவிட்டார். நான் மயக்கம் அடைந்துவிட்டேன் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அப்போது மாயா, மகேசை அடித்து இங்கு இருந்து துரத்திவிட்டுவிட்டு, ரேவதியை கார்த்திக் கல்யாணம் பண்ணிக்க பிளான் போட்டு இருக்கான். இவன் நல்லவனே இல்லை, இந்த வீட்டு சொத்து மேல ஆசைப்பட்டு இப்படி ஒரு விஷயத்தை செய்து இருக்கிறான் என்று மாயா ஆவேசமாக பேசுகிறாள். அந்த நேரத்தில் மாயா எதுக்கு இப்படி சொல்றாங்க என்று தெரியாமல் கார்த்திக் குழப்பத்தில் இருக்கிறார்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரி, கார்த்திக் அந்த குடும்பத்திற்காக செய்த விஷயத்தை எல்லாம் நினைத்து பார்த்துவிட்டு, கார்த்திக் அப்படி செய்து இருக்கமாட்டான் என்று நம்புகிறாள். இருந்தாலும், கார்த்திக் இன்னும் ஒரு மாதத்தில் உன் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்று அவகாசம் கொடுக்கிறார். இந்த ஒரு மாதத்தில் உண்மையை நிரூபிக்கா விட்டால் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சொல்கிறாள். இதையடுத்து திட்டமிட்டபடி மகேஷ் மற்றும் ரேவதிக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது.

கவலையில் பாட்டி: இதை பார்த்து அதிர்ச்சியாகும் பரமேஸ்வரி பாட்டி, என்ன முருகா கார்த்திக்கும் ரேவதிக்கும் தான் கல்யாணம் நடக்கும்னு சொன்ன.. ஆனால் இப்போ இப்படி நடக்குது என்று கேட்க முருகன் கவலைப்படாத பாட்டி.. இப்போ நடந்ததையெல்லாம் பெருசா எடுத்துக்காத. நீ வேடிக்கை மட்டும் பாரு என்று சொல்கிறான். என்னமோ நீ சொல்லுற நான் பேரன் கல்யாணத்தை கண்ணாற பார்த்த போதும் என்கிறாள்.

நாசமாக போகணும்: மறுபக்கம் சந்திரகலா, சிவனாண்டியை சந்தித்து எதுக்கு இவங்களுக்கு நிச்சயம் நடக்க விட்டீங்க என்று கேட்க சிவனாண்டி, மகேஷ் மற்றும் மாயாவின் விஷயத்தை சொல்கிறான். மகேஷ், ரேவதி கழுத்தில் தாலி கட்டுவது தான் சரியான இருக்கும். அப்படி நடந்தா அந்த ரேவதி வாழ்க்கை நாசமாக போகும். அதைப்பார்த்து சாமுண்டீஸ்வரி ரத்த கண்ணீர் வடிப்பா என்று தனது திட்டத்தை சொல்ல சந்திரகலா அதை கேட்டு சந்தோசப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X