மாஸ் என்ட்ரி கொடுத்த சாமிநாதன்.. சீரியலில் ஏற்படும் அடுத்த திருப்பம்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், வடமாநில கம்பெனி பல்லவியிடம் அக்ரிமெண்ட் போட்டுட்டு வாங்க, அதன் பிறகு உங்களுக்கு நான் பிசினஸ் தருகிறேன் என்று சொல்லி அனுப்பிவிடுகின்றனர்.

அதன் பிறகு ஐஸ்வர்யா சிதம்பரத்தை சந்தித்து, பல்லவி உங்கங்களுக்கு பாட வேண்டும் என்றால், நான் சொல்வதை செய்ய வேண்டும் என்று சிதம்பரத்திடம் கூறுகிறாள். இதையடுத்து., தீபாவுக்கு போன் செய்து பேசும் சிதம்பரம், உங்க அண்ணனுக்கு வேலை கிடையாது உன் தம்பிக்கு ட்ரீட்மெண்ட் பாக்கணும் இப்படி பல பிரச்சனையில் நீங்க இருக்கீங்க. இதற்கு எல்லாம், உங்களுக்கு தேவையான பணத்தை நான் தருவேன் என்கிறாள்.

zee tamil television Karthigai Deepam serial December 27th full episode

ஆனால், நீ எனக்காக பாடி கொடுக்கணும் என்று சொல்ல, அதிர்ச்சி அடைந்த தீபா முடியாது என்று சொல்வி விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

அதெல்லாம் வேண்டாம்: இதையடுத்து இன்றைய கார்த்திகை தீபம் சீரியலில், கார்த்தியும் தீபாவும் ரூமில் பேசி கொண்டிருக்கும் போது, வெளியில் அபிராமி அதெல்லாம் வேண்டாம், நமக்கு சரி வராது என்று அருண் ஐஸ்வர்யாவிடம் சத்தம் போட்டுக்கொண்டு இருக்கிறான். இதைக் கேட்ட கார்த்திக் வெளியே வருகிறான். அருண் ரிசார்ட் ஒன்றை வாங்க போவதாக சொல்ல அபிராமி இந்த பிசினலில் நமக்கு அனுபவம் கிடையாது, வேண்டாம் என்று சொல்கிறாள்.

குடும்பத்தில் வாக்கு வாதம்: உடனே அருண் ஐஸ்வர்யா கார்த்திக் ஏதாவது புது பிசினஸ் பண்ணா மட்டும் எந்த மறுப்பும் சொல்லாமல் ஏத்துக்கறீங்க, எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி சொல்றீங்க என்று வாக்குவாதம் செய்ய கார்த்திக் நாம எல்லாரும் ரிசார்ட்டில் போய் ஒரு வாரம் தங்கி இருக்கலாம். அந்த ரிசார்ட் பற்றி தெரிந்து கொண்டு அதன் பிறகு வாங்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்யலாம் என்று சொல்ல எல்லோரும் சம்மதம் தெரிவிக்கின்றனர்.

மார்டன் உடையில் மீனாட்சி: இதனை தொடர்ந்து எல்லோரும் ரிசார்ட்டுக்கு கிளம்ப மீனாட்சி மாடர்ன் உடையில் ரெடியாகி தீபாவையும் மாடர்ன் உடையில் வர சொல்ல அவள் எனக்கு இதெல்லாம் செட்டாகாது என்று மறுப்பு தெரிவித்து விடுகிறாள். கார்த்திக் மற்றும் தீபா இருவரும் காரில் சென்று கொண்டிருக்கும் போது, கார்த்திக் உங்களை கேக்காமல் ரிசார்ட் போலாம்னு சொன்னதில் உங்களுக்கு ஒன்னும் கோபமில்லையே என்று கேட்க அதெல்லாம் இல்லை சார் என்று சொல்கிறாள். மேலும் மனதுக்குள் நாம் ரெண்டு பேரும் தனியா போய் இருக்கலாம் என்று நினைக்க கார்த்திக் அதை அப்படியே சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுக்கிறான்.

சர்ப்ரைஸ் என்ட்ரி: பிறகு எல்லோரும் ரிசார்ட் வந்து இறங்க ரிசார்ட் மேனேஜராக பிரபல நடிகர் சுவாமிநாதன் என்ட்ரி கொடுக்கிறார். எப்படியாவது இந்த ரிஸார்ட்டை இவர்களிடம் விற்று விட வேண்டும் என கணக்கு போட்டு அருண் என நினைத்து கார்த்திக்கிடம் ரிசார்ட் பற்றி ஓவர் பில்டப் படுத்தி பேச கார்த்திக், நான் அருண் இல்லை என்று பல்பு கொடுக்கிறான். அடுத்து மீனாட்சியின் கணவர் என்ட்ரி கொடுத்து எல்லாருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X