அண்ணியுடன் ரகசிய உறவில் மகேஷ்.. கார்த்திக் செய்யப்போவது என்ன.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: சந்திரகலா, சிவனாண்டியை சந்தித்து எதுக்கு இவங்களுக்கு நிச்சயம் நடக்க விட்டீங்க என்று கேட்க சிவனாண்டி, மகேஷ் மற்றும் மாயாவின் விஷயத்தை சொல்கிறான். மகேஷ், ரேவதி கழுத்தில் தாலி கட்டுவது தான் சரியான இருக்கும். அப்படி நடந்தா அந்த ரேவதி வாழ்க்கை நாசமாக போகும். அதைப்பார்த்து சாமுண்டீஸ்வரி ரத்த கண்ணீர் வடிப்பா என்று தனது திட்டத்தை சொல்ல சந்திரகலா அதை கேட்டு சந்தோசப்படுகிறாள்.
இன்றைய எபிசோடில், சந்திரலேகா, சாமுண்டீஸ்வரியிடம் நீ கார்த்திக்கு இடமே கொடுத்திருக்க கூடாது, அவன் உன்னுடைய பொண்ணு கல்யாணத்தை நிறுத்த பார்த்து இருக்கிறான். நீ அவனை வீட்டுக்கு வெளியே அனுப்பி இருக்கனும். ஆனா நீ அவனுக்கு அவகாசம் கொடுத்து இருக்க. அவ மேல எனக்கு ஏற்கனவே ஒரு சந்தேகம் இருந்தது இப்போ நிச்சயதார்த்தத்தில் அவன் செய்த வேலையால் அவன் எப்படி பட்டவன் என்று நல்லா தெரிந்து போச்சு, நம்மளோட பொண்ணுக்கு கல்யாணம் நல்லபடியா நடக்க வேண்டும் என்றால், அவனை வீட்டை விட்டு அனுப்பு என்கிறாள்.

அப்போது சாமுண்டீஸ்வரி இல்ல, சந்திரலேகா நான் சொல்றது புரிஞ்சிக்கோ, கார்த்திக்கை பார்த்தா எனக்கு அப்படி தெரியவில்லை. இதே நிலைமையில தான், அன்னைக்கு நம்ம அம்மா நின்னாங்க, அவங்களை யாருமே நம்பல, அதனாலத்தான் நாம இந்த நிலைமைக்கு வந்தோம். அதனால நான் கார்த்திக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கேன். கார்த்திக் உண்மை எது என்று நிரூபிக்கட்டும் நிச்சயமா வெயிட் பண்ணி பார்க்கலாம் என்கிறாள்.
விசாரிக்கும் கார்த்திக்: இதைத்தொடர்ந்து கார்த்திக்கு, மகேஷ் வீட்டுக்கு போய், நீங்க ரேவதி காதலிக்கிறீர்கள் என்று தெரிந்ததுமே நான் தான் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்தேன். ஆனா நீங்க நிச்சயதார்த்தத்தில் உங்கள் தலையில் அடித்தது நான் தானு சொல்லி இருக்கீங்க ஏன் அப்படி சொன்னீங்க என்று கேட்கிறான். அப்போது வந்து மகேஷ், எங்களை அப்படி சொல்ல வச்சாங்க, சிவனாண்டி தான் என்னை கடத்திட்டு போயி தலையில அடித்து, உங்க மேல பழி போட சொன்னார். இல்லன்னா எனக்கும் அண்ணிக்கும் இடையே தவறான உறவு இருப்பதாக சொல்லுவேனு சொன்னார்.அதனாலத்தான் நான் பயத்தில் அப்படி செய்துவிட்டேன் என்கிறான்.
மகேஷ் அண்ணியுடன் ரொமான்ஸ்: இதை கேட்டுவிட்டு கார்த்திக் அங்கிருந்து கிளம்பிவிட, மாயா, சிவனாண்டிக்கு போன் பண்ணி கார்த்திக்கு இப்பதான் வீட்டுக்கு வந்து எங்களை விசாரித்தார். நாங்க அடிச்சது உங்கள மாதிரி தான் இருந்துச்சு என்று சொல்லிட்டேன் மத்தபடி வேற எந்த விஷயத்தையும் நான் சொல்லவில்லை என்று சொல்லிவிட்டு போனை கட் செய்ய, மகேஷ் மாயாவிடம் நெருங்கி வந்து, முத்தம் கொடுக்க வர, டேய் மகேஷ் இதுக்கு மேலத்தான் நாம ஜாக்கிரதையா இருக்கணும், இதெல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்கிறாள்.
மாயாவின் புடவை: மறுபக்கம் மண்டபத்தில் இருந்து கார்த்திக்கிற்கு போன் வர, மண்டப மேனேஜர், மண்டபத்தில் சில பொருட்கள் இருக்கிறது என்று சொல்ல அதை எடுக்க கார்த்திக் செல்கிறார். அதில், அந்த நீல நிற புடவை பார்த்துவிட்டு, இந்த விஷயத்தில் சிவனாண்டிக்கு மட்டும் இல்ல, யாரோ ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருக்கு என்பதை தெரிந்து கொள்கிறான். கார்த்திக் கையல் வைத்து இருக்கும் புடவையை பார்த்த மயில், என்ன என்று கேட்க, கார்த்திக் குழந்தையின் கையை பேனில் விட்டு காயப்படுத்திய அந்த பெண்ணின் புடவை என்று சொல்ல, மயில் புடவையை பார்த்துவிட்டு, இது மகேஷின் அண்ணி மாயாவின் புடவை என்று சொல்ல கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான்.


Click it and Unblock the Notifications











