சிதம்பரம் கொடுக்கும் வார்னிங்.. தீபா எடுக்க போகும் முடிவு என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் ரெசார்ட்டில் வந்து இறங்கியதும், மீனாட்சி தீபாவிடம் செம கிளைமேட் சூப்பரா இருக்கு, அப்புறம் என்ன இன்னைக்கு உனக்கும் கார்த்திக்கும் ஃபர்ஸ்ட் நைட் நடத்திட வேண்டியதுதான் என்று சொல்ல தீபா வெட்கப்படுகிறாள்.

இதையடுத்து, பாத்ரூமுக்குள் செல்லும் தெரியாமல் சவரை ஆன் செய்துவிட தண்ணீர் மொத்தமும் மேலே கொட்டுகிறது. பிறகு உதவிக்கு வரும் கார்த்திக் ஷவரை ஆப் செய்ய இருவருக்கும் இடையே ரொமான்ஸ் நடக்கிறது. தீபாவின் துணிகள் எதுவும் இன்னும் ரூமுக்கு வராததால், கார்த்திக் தன்னுடைய துணியை கொடுத்து மாற்றிக்கொள்ள சொல்கிறான். அதன் பிறகு உள்ளே வரும் மீனாட்சி, கார்த்தியை கிண்டல் செய்துவிட்டு செல்கிறாள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்

தடுமாறும் தீபா: இதையடுத்து கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், அனைவரும் ஒன்றாக அமர்ந்து ப்ரேக் பாஸ்ட் சாப்பிட தீபா ஸ்போர்க் ஸ்பூனில் சாப்பிட தெரியாமல் தடுமாற எதிரே அமர்ந்து இருக்கும் கார்த்திக் எப்படி சாப்பிட வேண்டும் என்று சொல்லி கொடுக்கிறான், ஆனாலும் அது புரியாத தீபா இட்லி, தோசையை போய் எதுக்கு இப்படி சாப்பிடணும் என்று முடிவெடுத்து கையால் சாப்பிட அதை பார்த்து மற்றவர்களும் கையால் சாப்பிட தொடங்குகின்றனர்.

சந்தோஷப்படும் தீபா: அதன் பிறகு மீனாட்சி இந்த புடவையில் நீ சூப்பரா இருக்க, கார்த்திக் உன்னையே தான் பார்த்துட்டு இருந்தான் என்று சொல்ல தீபா அட போங்க அக்கா அவர் என்னை பார்க்கவே இல்லை என்று சொல்ல நீ வேணும்னா பாரு கார்த்திக் உன்னை குறைந்தது மூணு முறையாவது திரும்பி பார்ப்பான் என்று சொல்கிறாள். அதற்கேற்றார் போல கார்த்திக் ரெண்டு முறை பார்த்து விட தீபா மூன்றாவது முறை திரும்பி பாருங்க சார் என்று மனதுக்குள் வேண்ட கார்த்திக்கும் திரும்பி பார்க்க தீபா சந்தோஷமடைகிறாள்.

ஜாலியான போட்டி: அடுத்து சிதம்பரம் தீபாவுக்கு போன் செய்து என்ன எல்லாரும் குடும்பத்தோட சந்தோசமா இருக்கீங்க போல், என்னுடைய ஆளுங்க உங்களை கவனிச்சிட்டு தான் இருக்காங்க. நீ எனக்காக வந்து பாடி கொடுத்தா உங்களை கஷ்டப்படுத்த மாட்டேன். நீ வந்து பாடி கொடுத்து தான் ஆகணும் என்று மிரட்ட தீபா முடியாது சார் என்று சொல்கிறாள். அதன் பிறகு செல்பி பாட்டி எல்லாரும் எப்பயாவது தான் இப்படி ஒண்ணா சேர்ந்து வெளியே வரோம். ஜாலியா என்ஜாய் பண்ண வேண்டாமா? ஏதாவது போட்டி நடத்தலாம் என்று சொல்லி அதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











