திருட்டு பழியால் தூக்கில் தொங்கிய சாமுண்டீஸ்வரி அம்மா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: சனிக்கிழமை எபிசோடில், ஒரு பக்கம் நகைகளை தேடும் பணிகள் தீவிரமாக நடக்க, என் வீட்டில் கல்யாணத்திற்கான வேலை நடந்துக்கிட்டு இருந்தது. எங்க அம்மா கல்யாணம் நல்லபடியா நடக்க வேண்டும் என்று சாமிய வேண்டிக்குறதுக்காக கோயிலுக்கு போய் தாலியை வச்சு கும்பிட்டு வந்தாங்க. எந்த நேரத்துல தான் நகை காணாம போச்சு, இத பாத்த ஐயர் வந்து எங்க அம்மா தான் நகையை எடுத்தாங்கனு, போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டாரு,
அப்போது, எங்க வீட்டில் கோவிலில் திருடு போன நகை இருந்ததை பார்த்த ஒரு பெண், அதை ராஜ சேதுபதியிடம் கொடுத்தார். அந்த நகைப் பார்த்த அவர், எங்களை நம்புவார் என்று நினைத்தோம். ஆனால், ராஜ சேதுபதி உனக்கு கோவில்ல வேலை எல்லாம் போட்டு கொடுத்து இங்கு தங்க வைத்தேன். ஆனால், நீ இப்படி நடிகை திருடி விட்டியே என்று கேட்டுவிட்டார். என் அம்மா அவரிடம் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை. இதனால் இந்த ஒட்டு மொத்த ஊரும், ஒரு நகை இங்கே இருக்கிறது என்றால், மற்ற நகையும் இங்கே தான் இருக்கும் என்று கேட்டார்கள் என்றார். இதையடுத்து இப்போது என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: எங்க அம்மா எவ்வளவு சொல்லியும், அழுதோம் யாரும் கேட்கவே இல்லை, அந்த நேரத்துல போலீஸ்காரங்களும் வீட்டுக்குள்ள வந்து அம்மாவ கைது பண்ண வேண்டும் என் சொல்லிட்டாங்க, அப்போ அம்மா பயங்கரமா அழுது, நான் நகையை திருடல நீங்க இப்ப கைது பண்ணீங்கன்னா, என்னுடைய பொண்ணோட கல்யாணம் நின்னுடும் என்று கெஞ்சினாங்க. அதுமட்டுமில்லாமல், அனைவரிடமும் மன்னிப்பு கேட்டாங்க ஒரு கட்டத்துல, அம்மா அங்க இருக்கிற ஊருக்காரங்க அனைவருடைய காலையும் விழுந்து, நான் திருடலனு சொன்னாங்க. ஆனா யாருமே அவங்கள நம்புறதுக்கு தயாராகவே இல்லை.
தனிமரமாக இருக்கிறேன்: இதனால மனசு உடைஞ்சு போன எங்க அம்மா, அந்த திருட்டு பழியை தாங்க முடியாமல், தூக்கு மாட்டிகிட்டு செத்துட்டாங்க. அதன் பிறகு தான் அந்த நகையை யார் எடுத்தது என்ற உண்மை தெரியவந்தது.வீட்டில் இருக்கிற அனைவரிடமும் பரிசோதனை செய்த போது, வீட்ல இருந்த அந்த ரெண்டு திருடர்களும் மாட்டிக்கிட்டாங்க. ஆனால், எங்க அம்மா உயிர் போனது திரும்ப கிடைக்குமா எங்கள மேல விழுந்த திருட்டுப் பழிதிரும்பமாறுமா.. இதனால நான் ராஜசேதுபதியிடம் கேள்வி கேட்டேன் அவரால எந்தவித பதிலுமே சொல்ல முடியல, ஊர்க்காரங்க முன்னாடி இவங்க செஞ்சு இருக்க மாட்டாங்க என்று அவரு சொல்லியிருந்தா, அந்த ஒட்டுமொத்த ஊரும் எங்களை மதித்திருக்கும். ஆனால் அவரு அந்த மாதிரி செய்யல, இதனால எங்க அம்மா இறந்தது தான் மிச்சம்.போனவங்க திரும்பி வருவாங்களா? என்று சாமுண்டீஸ்வரி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கதையை சொல்லிமுடிக்கிறாள்.

எங்க அம்மா இறந்த பிறகு அங்க தனி மரமாக நின்னுட்டோம்.. நீயே சொல்லு குடும்பத்துல இப்படி நடந்தா எப்படிஇருக்கும்? என சாமுண்டீஸ்வரி கார்த்திக்கை பார்த்து கேள்வி கேட்கிறாள். இதைக்கேட்ட கார்த்திக், தாத்தா அவசரப்பட்டுவிட்டார், அவர் மேல தவறு இருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறான். இப்படியான நிலையில்அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ்தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











