அபார்ஷன் செய்ய காத்திருக்கும் மாயா.. மடக்கி பிடித்த கார்த்திக்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: கார்த்திக் மகேஷ் வீட்டுக்கு போய், நீங்க ரேவதியை காதலிக்கிறீர்கள் என்று தெரிந்ததுமே நான் தான் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்தேன். ஆனா நீங்க நிச்சயதார்த்தத்தில் உங்கள் தலையில் அடித்தது நான் தானு சொல்லி இருக்கீங்க ஏன் அப்படி சொன்னீங்க என்று கேட்கிறான். அப்போது வந்து மகேஷ், எங்களை அப்படி சிவனாண்டி தான் சொல்ல வைத்தார் என்று சொல்கிறான்.

இதையடுத்து, நீல நிற புடவையை வைத்து, இந்த விஷயத்தில் சிவனாண்டிக்கு மட்டும் இல்ல, யாரோ ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருக்கு என்பதை தெரிந்து கொள்கிறான். கார்த்திக் கையில் வைத்து இருக்கும் புடவையை பார்த்த மயில், என்ன என்று கேட்க, கார்த்திக் குழந்தையின் கையை பேனில் விட்டு காயப்படுத்திய அந்த பெண்ணின் புடவை என்று சொல்ல, மயில் புடவையை பார்த்துவிட்டு, இது மகேஷின் அண்ணி மாயாவின் புடவை என்று சொல்ல கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரி மருத்துவமனையில் இருக்கும், மல்லிகா டாக்டரின் குழந்தையை பார்ப்பதற்காக செல்ல வேண்டும் என்று சொல்ல, கார்த்திக் மற்றும் சாமுண்டீஸ்வரி இருவரும் மருத்துவமனைக்கு செல்கின்றனர். மருத்துவமனையில் மாயா செக்கப்பிற்காக காத்து இருக்கிறாள். அப்போது, கார்த்திக் மற்றும் சாமுண்டீஸ்வரியை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாயா மாட்டிக் கொண்டால் கதை அவ்வளவுதான் என்று மறைந்து கொள்கிறாள்.

பயந்த மாயா: மல்லிகாவின் மகளைப் பார்த்து சாமுண்டீஸ்வரி ஆறுதல் கூறிக் கொண்டிருக்கின்றாள். என்னால்தான் இப்படி நடந்து விட்டது. நான் தான் உன்னை கட்டாயப்படுத்தி நிச்சயதார்த்தத்திற்கு வரவேண்டும் என்று அழைத்தேன் என்று பேசிக்கொண்டு இருக்க கார்த்திக் நான் வெளியில் சென்று விட்டு வருகிறேன் என்று வெளியில் வருகிறான்.

zee tamil karthigai deepam

கேள்வி கேட்ட கார்த்திக்: அந்த நேரம் பார்த்து, மாயா மாயா என்று நர்சு கூப்பிட, எங்கே அது கார்த்திக்கின் காதில் விழுந்துவிட்டால் மாட்டிவிடுவோமோ என்று பயந்த மாயா. வேகமாக நர்ஸிடம் ஓடி வந்து என் பெயர் மாயா இல்லை ராதிகா என்று அந்த பைலை பிடுங்கிக் கொண்டு செல்கிறார். மாயா வேகமாக செல்வதை தூரத்தில் இருந்த பார்த்துவிட்டு கார்த்திக், மாயாவை கூப்பிட, அவள் திரும்பிப் பார்த்து என்ன விஷயமாக இங்கே வந்தீர்கள் என்று கேட்க தலைவலி அதற்காகத்தான் வந்தேன் என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்து விடுகிறாள்.

zee tamil karthigai deepam

அந்த பெண் யார்: அப்போதும் விடாத கார்த்திக், உங்களிடம் ஒரு நிமிஷம் பேசவேண்டும் என்று சொல்லி, அந்த புடவையை காட்டி இந்த புடவை உங்களுடையதா என்று கேட்க, இது என்னுடைய புடவை இல்லை, இந்த புடவையை நான் தான் மேனேஜரிடம் கொடுத்துவிட்டு வந்தேன் என்று சொல்லி அங்கிருந்து நழுவி விடுகிறாள். இதையடுத்து கார்த்திக் மேனேஜருக்கு போன் போட்டு அந்த புடவையை உங்களிடம் கொடுத்தது யார் என்ற விசாரிக்க அப்போது மேனேஜர் அந்த புடவையை மாப்பிள்ளையின் அண்ணி மாயா கொடுத்ததாக சொல்கிறார். இதனால் குழப்பம் அடைந்த கார்த்திக், அப்போது அன்று வந்த பெண் யார் என்று குழப்பம் அடைகிறான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X