கரண்ட் ஷாக் கொடுத்த சிதம்பரம்.. கார்த்திகை தீபம் எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில், சிதம்பரம் தீபாவுக்கு போன் செய்து, எல்லாரும் குடும்பத்தோட சந்தோசமா இருக்கீங்க போல, எனக்காக நீ வந்து பாடி கொடுத்தா உங்களை கஷ்டப்படுத்த மாட்டேன் என்று மிரட்டுகிறான்.

மேலும், நீ வந்து பாடி கொடுத்து தான் ஆகணும் என்று மிரட்ட தீபா முடியாது என்று சொல்கிறாள். அதன் பிறகு நாம எப்போவாவது தான் ஒண்ணா சேர்ந்து வெளியே வரோம். ஜாலியா என்ஜாய் பண்ண வேண்டும் என்று, ஏதாவது போட்டி நடத்தலாம் என்று அதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்று பார்க்கலாம்.

zee tamil television Karthigai Deepam serial December 30th full episode

தீபாவை கண்டுபிடித்த கார்த்திக்: இதையடுத்து கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், செல்பி பாட்டி வீட்டில் உள்ள பெண்கள் அனைவரையும் நிற்க வைத்து ஒவ்வொரு ஆண்களாக அழைத்து அவர்களது கண்ணை கட்டி விட்டு கையை தொட்டு பார்த்து மனைவி யார் என்பதை சரியாக கண்டு பிடிக்க வேண்டும், அது தான் இந்த கேம் என்று சொல்கிறார். முதலாவதாக அரவிந்தை கூப்பிட அவன் மீனாட்சியை கண்டு பிடிக்க முயற்சிக்க முடியாமல் போகிறது. அடுத்தாக அருணுக்கு கண்ணை கட்டி விட அவனும் ஐஸ்வர்யாவை சரியாக கண்டுபிடிக்க தவறுகிறான். மூன்றாவதாக கார்த்திக்கிற்கு கண்ணை கட்டி விட அவன் தீபாவின் கையை பிடிக்காமலேயே தீபா இடத்திற்கு வந்து நின்று கண்டுபிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறான்.

பதறும் தீபா: இதெல்லாம் நடந்து முடிந்ததும் சிதம்பரம் தீபாவுக்கு போன் போட்டு எனக்காக வந்து பாட சொல்லியிருந்தேன் என்னாச்சு என்று கேட்க தீபா முடியாது என்று மறுக்க சிதம்பரம் பொறுமையாக சொல்லி பார்த்துட்டேன், சரிப்பட்டு வரல. அப்படினா உன் குடும்பத்துக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்து விட வேண்டியது தான் என்று போனை வைக்க தீபா யாருக்கு என்ன ஆக போகுதுனு தெரியாமல் பதறி தவிக்கிறாள். இறுதியாக அருணாச்சலம் சார்ஜ் போட போகும் போது கரண்ட் ஷாக் அடிக்க எல்லோரும் பதறுகின்றனர்.

zee tamil television Karthigai Deepam serial December 30th full episode

அடுத்து என்ன: என்ன பிரச்சனை என்று பார்க்க வந்த மேனேஜருக்கும் கரண்ட் ஷாக் அடிக்க செல்பி பாட்டி கட்டையால் அடித்து காப்பாற்றுகிறார். மழைக்காலம் என்பதால் இப்படி நடந்திருக்கலாம் என்று எல்லோரும் நினைக்க தீபா அதிர்ச்சியில் நிற்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X