கோவில் கலசத்தை திருடியது யார்.. நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை:சாமுண்டீஸ்வரி மருத்துவமனையில் இருக்கும், மல்லிகா டாக்டரின் குழந்தையை பார்ப்பதற்காக செல்ல வேண்டும் என்று சொல்ல, கார்த்திக் மற்றும் சாமுண்டீஸ்வரி இருவரும் மருத்துவமனைக்கு செல்கின்றனர். மருத்துவமனையில் மாயா செக்கப்பிற்காக காத்து இருக்கிறாள். அப்போது, கார்த்திக் மற்றும் சாமுண்டீஸ்வரியை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாயா மாட்டிக் கொண்டால் கதை அவ்வளவுதான் என்று மறைந்து கொள்கிறாள்.

மல்லிகாவின் மகளைப் பார்த்து சாமுண்டீஸ்வரி ஆறுதல் கூறிக் கொண்டிருக்கின்றாள். அப்போது வெளியே வரும் கார்த்திக், மாயாவை பார்த்து விட்டு , புடவையை காட்டி விசாரிக்க பொய் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரியும் கார்த்திக்கும் வீட்டில் இல்லாததை தெரிந்து கொண்ட சந்திரலேகா, அனைவரையும் அழைத்து ரேவதி திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றால் அதற்கு கார்த்திக் இந்த வீட்டில் இருக்கக் கூடாது. அவன் தான் அனைத்து பிரச்சனைக்குமே காரணம். ஆனால் இது அக்காவுக்கு தெரியவில்லை. அதனால் நாம் அனைவரும், அவனுடன் பழகக் கூடாது, பேசக்கூடாது அப்போது தான் கார்த்திக் இந்த வீட்டை விட்டு போவான் என்று பேசிக் கொண்டிருக்கிறாள்.

அப்போது, அங்கு வரும் ரேவதி, நீங்க சொல்றதெல்லாம் நான் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன். நீங்க நினைக்கிற மாதிரி கார்த்திக் தப்பானவர் இல்லை. ஒரு மாசத்துல என்ன நடந்தது என்று அவர் நிரூபிப்பாரு, அப்படி அவரால் நிரூபிக்க முடியலன்னா அவரை இந்த வீட்டை விட்டு போய் விடுவார். நீங்க ஒன்னும் பெரிய திட்டம் எல்லாம் போட வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய்விடுகிறாள்.

zee tamil karthigai deepam

சாமுண்டீஸ்வரி, என் பெண் கல்யாணம் நடக்க இருக்கிறது. இதற்காக இந்த கும்பாபிஷேகத்தை நானே ஆண்களின் துணை இல்லாமல் செய்து முடிக்கிறேன் என்று சொல்ல, கடுப்பான சிவனான்டி, கோவில் கட்டுவது ஆண்கள் செய்ய வேண்டிய வேலை தேவையில்லாத வேலை பார்க்காத என்று எச்சரிக்க சாமுண்டீஸ்வரி பெண்களாக எல்லாம் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டுறேன் என சவால் விடுகிறாள். என் பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்க அவ கையால இந்த கலசத்துக்கு பூஜை பண்ணி கும்பாபிஷேகத்தை நல்லபடியா நடத்தி முடிக்கிறேன் என்று சொல்கிறாள். இதையடுத்து கோவில் கட்டும் பெண்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கலசத்தை உங்க வீட்ல வச்சு பத்திரமா பூஜை பண்ணி கொண்டு வாங்க என்று சொல்கின்றனர்.

இதைத்தொடர்ந்து சந்திரகலா மற்றும் சிவனாண்டி என இருவரும் சந்தித்து கலசத்தை வீட்டுக்கு கொண்டு வந்ததும் அதை திருடி விடலாம். சாமுண்டீஸ்வரி தலை குனிந்து நிற்பான் அதே நேரத்தில் டிரைவர் கார்த்திக் மேல பழியை போட்டா அவனையும் வீட்டை விட்டு துரத்தி விடுவாள். ஒரே கல்லில் இரண்டு மாங்கா என திட்டம் போடுகின்றனர்.

zee tamil karthigai deepam

அடுத்ததாக மறுநாள் காலையில் மேளதாளத்துடன் தடபுடலாக ஊர் மக்கள் கலசத்தை கொண்டு வர சாமுண்டீஸ்வரி, ரேவதி கிட்ட கொடுங்க அதை பக்தியோட பூஜை செய்து கலசத்தை பார்த்துக் கொள்வாள் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X