என்னை மீறி ஒன்னும் பண்ண முடியாது.. சவால் விட்ட கார்த்திக்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: நேற்றைய எபிசோடில், எங்க அம்மா எவ்வளவு சொல்லியும், யாரும் கேட்கவே இல்லை, அந்த நேரத்துல போலீஸ்காரங்களும் வீட்டுக்குள்ள வந்து அம்மாவ கைது பண்ண வேண்டும் என் சொல்லிட்டாங்க, அப்போ அம்மா, நான் நகையை திருடல நீங்க இப்ப கைது பண்ணீங்கன்னா, என்னுடைய பொண்ணோட கல்யாணம் நின்னுடும் என்று கெஞ்சினாங்க. இதனால மனசு உடைஞ்சு போன எங்க அம்மா, அந்த திருட்டு பழியை தாங்க முடியாம நெஞ்சுவலியால் இறந்துட்டாங்க.
அம்மா இறந்ததைப் பார்த்த அக்கா., அவமானம் தாங்க முடியாமல் தூக்கு மாட்டிகிட்டு செத்துட்டாங்க. அதன் பிறகு தான் அந்த நகையை யார் எடுத்தது என்ற உண்மை தெரியவந்தது. ஆனால், எங்க அம்மா உயிர் போனது திரும்ப கிடைக்குமா? என்று சாமுண்டீஸ்வரி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கதையை சொல்லி முடிக்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரி கதையை சொல்லி முடித்ததும் மொத்த கதையையும் கேட்ட கார்த்திக், குடும்பத்தில் ஏதோ சின்ன பிரச்சனை என்று பார்த்தால், இவ்வளவு பெரிய பிரச்சனையாக இருக்கே. தாத்தா கொஞ்சம் யோசித்து இருக்கலாம். சரி இப்போ நம்மளுக்கு பிரச்சனையாக இருப்பது சிவனாண்டி தான் முதலில் அவன் பிரச்சனையை பார்க்கலாம் என்று முடிவு செய்கிறான்.
இனிமேல் நான் இருக்கேன்: இதையடுத்து, சாமுண்டீஸ்வரியிடம், நான் போய் அந்த சிவனாண்டிக்கு சவால் விட போறேன் என்று கிளம்பி வருகிறான். வீட்டில், கார்த்திக்கிடம் அடி வாங்கிய சிவனாண்டி முடியாமல் படுத்திருந்த சந்திரகலா அவனுக்கு ஒத்தடம் கொடுத்தபடி இருக்கிறாள். இந்த சமயத்தில் கார்த்திக் வந்து கதவை தட்டுகிறான். கார்த்திகை பார்த்த சந்திரகலா, ஓடி ஒளிந்து கொள்கிறாள்.
இதையடுத்து உள்ளே வரும் கார்த்திக், இதுவரைக்கும் நீ அந்த குடும்பத்துக்கு என்னென்ன குடைச்சல் கொடுத்த, சாமுண்டீஸ்வரியை கொல்லப்பார்த்த என்கிற எல்லா விஷயமும் எனக்குத் தெரியும். இத்தனை நாள் அந்த குடும்பத்திற்கு யாரும் இல்லை. ஆனால், இனிமே அந்த குடும்பத்துக்கு நான் இருக்கேன்.. என்னை மீறி உன்னால் ஒன்னும் செய்ய முடியாது என்று சவால் விடுகிறான்.
கலக்கிட்டான் கார்த்திக்: இதையடுத்து, கார்த்திக் சிவனாண்டியிடம் சவால் விடுவதை கேட்ட மயில் வாகனம் வீட்டிற்கு வந்து எல்லாரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் நேரத்தில் கார்த்திக் விட்ட சவாலை நேரில் பார்த்ததாகவும் கார்த்திக் மாஸாக பேசியதாகவும் சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











