என் அம்மாவோட சாவுக்கு உங்க புருஷன் காரணம் ..அதுக்கு இதுதான் தண்டனை..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரி அத்தை அவங்க கதையை சொன்னாங்க நீங்க, உண்மையில் அவங்க மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்காங்க, அவங்க பட்ட கஷ்டத்தை கேட்டதும் என்னால, தாங்கிக்கவே முடியல, இதனால், அவங்க கிட்ட மன்னிப்பு நீங்க மன்னிப்பு கேட்டா, அவங்க மனசு மாறும் என்று சொல்ல, பரமேஸ்வரி பாட்டி இத்தனை வயசுக்கப்புறம் எனக்கு மன்னிப்பு கேட்கிறது எந்தவிதமான பிரச்சனையும் இல்லை, நான் மன்னிப்பு கேட்பதால், அவ மனசு மாறினால், சரி என்று சொல்லி கண்கலங்குகிறாள்

அதன் பிறகு சாமுண்டீஸ்வரி, ராஜராஜன் என எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது ராஜராஜனுக்கு விக்கல் ஏற்பட கார்த்திக் உங்க அம்மா நினைக்கிறாங்க போல என்று வேண்டும் என்றே வம்பு இழுத்துவிடுகிறான். இதைக்கேட்ட சாமுண்டீஸ்வரி கார்த்திக்கை பார்த்து முறைக்கிறாள். உடனே கார்த்திக், பார்த்து பல வருஷம் ஆகுது இல்ல, அதனால இருக்கும் என்று சொல்லி சமாளித்துவிடுகிறான். இதையடுத்து, இன்று நடக்கப்போவதை பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், கார்த்திக் சொன்னதை கேட்டு முறைக்கும் சாமுண்டீஸ்வரி, கார்த்திக் கேட்டது இருக்கட்டும், இன்னமும் உங்க அப்பா அம்மாவை பத்தி நினைச்சிட்டு தான் இருக்கீங்களா? அவங்களை பத்திய எண்ணம் எங்க மனசுல இருக்கா என்று கேட்கிறான். அப்போது ராஜராஜன், என்னை நான் கட்டுப்படுத்திக்க முடியும், என் மனச எப்படி கட்டுப்படுத்திக் கொள்வது எனக்கு இன்னமும் அம்மா, அப்பாவை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கு என்று சொல்ல,சாமுண்டீஸ்வரி மேலும் கோபமடைகிறாள்.

அவங்களை பத்தி நினைக்கமாட்டான் என்று எனக்கு சத்தியம் பண்ணி கொடுத்தது மறந்துபோச்சா என்று சமுண்டீஸ்வரி கோவப்பட்டு கத்துகிறாள். உடனே ராஜராஜன் அந்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டுத்தான் இத்தனை வருஷமா நான் என் அம்மா, அப்பாவை சந்திக்காமல் இருக்கிறேன் என்று சொல்கிறான். இந்த பதிலைகேட்டு கடுப்பான, சாமுண்டீஸ்வரி, நீங்க இப்படி சொன்னதால் தண்டனையாக நீங்க காளி கோவிலுக்கு வரக்கூடாது.. நான் மட்டும் போயிட்டு வரேன் என்று சொல்கிறாள். பிள்ளைகள் எல்லாரும் சாமுண்டீஸ்வரியிடம் ராஜராஜனுக்காக பேச சாமுண்டேஸ்வரி தனது முடிவில் உறுதியாக இருக்கிறாள்.

கார்த்திக் பாட்டியை காளி கோவிலுக்கு வர சொல்லி இருந்த நிலையில் ராஜராஜன் வராத காரணத்தால் வர வேண்டாம் என்று சொல்ல போன் செய்ய போன் ரீச் ஆகவில்லை. காருக்குள் அமர்ந்த சாமுண்டீஸ்வரி சீக்கிரம் வர சொல்லி கார்த்திக்க்கு போன் செய்கிறாள். இங்கே பரமேஸ்வரி பாட்டி காளி கோவிலுக்கு வந்து காத்திருக்க கார்த்திக் மற்றும் சாமுண்டேஸ்வரி கோவிலுக்கு வருகின்றனர். ராஜராஜன் வராததை பார்த்து பாட்டி ஷாக் ஆகிறாள். பிறகு கார்த்திக் பாட்டியை தனியாக சந்தித்து நடந்த விஷயத்தை சொல்ல என் பையனை என்னால் பார்க்கவே முடியாதா என்று கண் கலங்குகிறாள்ள்.

நான் நேரடியா போய் சாமுண்டீஸ்வரியிடமே கேட்கிறேன் என்று கிளம்பி வர கார்த்திக் தடுக்க முயற்சி செய்தும் பாட்டி சாமுண்டீஸ்வரியை சந்தித்து என் பையனை பார்க்கணும் என்று சொல்கிறாள். என் அம்மாவோட சாவுக்கு உங்க புருஷன் தான் காரணம். அதுக்கு தண்டனையா நீங்க கடைசி வரைக்கும் உங்க பையனை பார்க்க முடியாது. பார்க்க விட மாட்டேன் என்று பதிலடி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X