கார்த்திக் போட்ட சவால்.. ஐஸ்வர்யா தீட்டும் சதி திட்டம்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், பிஸ்னஸ் மேன் சிதம்பரம், உன்னால் ஒரு ஆல்பம் பாடலை கூட வெளியிட முடியாது என்று எகத்தாளமாக பேசுகிறார்.

இதனால், கோபத்தின் உச்சத்திற்கு போன கார்த்திக் புது சிங்கரை வைத்து ஒரு ஹிட் பாடலை கொடுத்து காட்டுறேன் என்று சவால் விடுகிறான். நீ இந்த சவாலில் ஜெயித்து விட்டால் நான் இந்த துறையை விட்டே போயிடுறேன் என சிதம்பரமும் பதிலுக்கு சவால் விடுகிறார்.

இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

zee-tamil-television-karthigai-deepam-serial-december-8th-full-episode

இன்றைய எபிசோட்: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில்,சிதம்பரம் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். அப்போது உங்களுக்கும் கார்த்திக்கிற்கும் ஏதாவது பிரச்சனையா என்று கேட்க அதெல்லாம் ஒன்றும் இல்லை இன்னும் 1 மாதத்தில் ஒரு ஆல்பம் பாடலை வெளியிட போவதாக சொல்லியிருக்கிறார் என்று சொல்ல ஐஸ்வர்யா இந்த வீடியோக்களை வீட்டில் உள்ள எல்லாரிடமும் காட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

zee-tamil-television-karthigai-deepam-serial-december-8th-full-episode

பல்லவி வருவாங்களா: கார்த்திக் வீட்டிற்கு வந்ததும் அபிராமி என்னாச்சு என்று விசாரிக்க நடந்த விஷயத்தை கார்த்தி சொல்கிறான். அங்கு இருக்கும் தீபா எப்படி சார்? என்ன பண்ண போறீங்க என்று கேட்க பல்லவியை தான் பாட வைக்கலாம் என முடிவெடுத்து இருப்பதாக சொல்கிறான். அவங்க வருவாங்களா என்று கேட்க அவங்க வார்த்தையில் நியாயம் இருக்கும். அவங்க எனக்கு வாக்கு கொடுத்திருக்காங்க அதனால் கண்டிப்பா வருவாங்க என்று சொல்கிறான்.

zee-tamil-television-karthigai-deepam-serial-december-8th-full-episode

ஐஸ்வர்யா போடும் சதி: பிறகு மீனாட்சி தீபாவிடம் நீ தான் அந்த பல்லவினு உண்மையை சொல்லிடு, இது தான் அதற்கு சரியான சந்தர்ப்பம். அபிராமி, கார்த்தின்னு எல்லாருமே உன்னை ஏத்துப்பாங்க என்று சொல்ல தீபா அதற்கு மறுப்பு தெரிவித்து விடுகிறாள். மற்றொரு புறம் இந்த விஷயத்தை நமக்கு சாதகமாக எப்படி பயன்படுத்துவது என யோசிக்கும் ஐஸ்வர்யா, சிதம்பரத்தை சந்திக்கிறாள்.

அடுத்து என்ன: அவரிடம் கார்த்திக்கை குறைவா எடை போடாதீங்க, அவன் கிட்ட பல்லவினு ஒரு பாடகி இருக்கா. அவ பாடினா நீங்க தோத்து தான் போவீங்க என்று சொல்லி அவள் பாடிய பாட்டை போட்டு காட்ட சிதம்பரம் அதிர்ச்சி ஆகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணதவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X